திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2009 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்

1. வாசகர்களே!

2. ஸ்கொட்லாந்தில் சீர்திருத்தம்

3. கிறிஸ்தவக் கோட்பாடுகள்

4. பேராசை பெரு நஷ்டம்!

5. புரட்சிகரமான புதிய உடன்படிக்கை

6. நம்மினத்துக்கு இன்று தேவை நல்ல தலைவர்கள்

7. ஜோன் கல்வினின் பிரசங்கம்

8. கல்வினை ஏன் இன்று நினைவுகூர வேண்டும்?

 

 

வாசகர்களே!

இந்த இதழில் வழமையாக வந்து கொண்டிருந்த ஆக்கங்கள் மறுபடியும் தொடர்கின்றன. 16ம் நூற் றாண்டின் மாபெரும் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் 500வது பிறந்ததினம் இந்த வருடத்தில் நிகழ்வதால் இந்த இதழை அவரது நினைவிதழாகத் தருகிறோம். அதன் காரணமாக கல்வினுடைய பிரசங்க ஊழியத்தைக் குறித்த ஓர் ஆக்கமும், அவரை நாம் ஏன் இன்று நினைவுகூர வேண்டும் என்பதை விளக்கும் ஆக்கத்தையும் தந்திருக்கிறோம். உண்மை யில் அவரது வாழ்க்கை சம்பந்தமான மேலும் செய்தி களை வெளியிட ஆசைதான். வருகிற இதழ்களில் முடிந்தால் அதை நிறைவேற்றப் பார்க்கிறோம் சபை வரலாற்றில் திருச்சபை சீர்திருத்தத்திற்கும், சீர்திருத்தப் போதனைகளை வடிவமைப்பதிலும் கல்வின் அளித்துள்ள பங்கு மகத்தானது. அவருடைய எழுத்துப் பணியும், பிரசங்க ஊழியமும், போதகப் பணியும், இறையியல் கல்லூரி மூலம் பல நாட்டு மாணவர்களை ஜெனீவாவில் சீர்திருத்தத்திற்காகத் தயார் செய்த பெருங்காரியமும் அவரை சீர்திருத்தக் களத்தில் முன்னணியில் நிறுத்தியிருந்தது. பெரும் சாதனைகளைச் செய்த கல்வின் அவற்றைப் பல்வகைப் போராட்டங்களின் மத்தியிலேயே சாதிக்க வேண்டியிருந்தது. கடும் சாடல்களையும், உயிராபத்துக் களையும் அவர் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சிறுவயது முதல் படிப்பதில் இரவு பகலாக உழைத்த கல்வின் அதன் பலனாக பல பட்டங்களைப் பெற்று பெரும் வக்கீலாக உருவெடுத்ததோடு, அத்தகைய உழைப்பினால் சரீர நலத்தையும் இழக்க நேரிட்டது. வக்கீலாவதற்கு அவர் படித்த படிப்பு வேத வார்த்தைகளைத் திறமையாக விளக்கும் வித்தையை அவருக்குக் கற்றுத் தந்தது. இத்தகைய பெருமகனின் அருமையை இன்றும் நம்மினம் உணராத நிலையில் இருந்து வருகிறது. நம் மத்தியில் திருச்சபை சீர்திருத் தம் பெரிதும் நிகழாமலிருப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். கல்வின் இன்று நம்மத்தியில் இல்லாவிட்டாலும் அவருடைய போதனைகள் வல்லமை யாய் பலருக்கும் பயன்பட்டுவருவதை மறுக்க முடியாது இந்த இதழ் முன்னைய இதழ்களைப் போலவே உங்களுக்குப் பயனளிக்க வேண்டுமென்பதுதான் எங்கள் ஜெபம். - ஆசிரியர்.

 

ஸ்கொட்லாந்தில் சீர்திருத்தம்

ஸ்கொட்லாந்துக்கு திருச்சபை சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் ஜோன் நொக்ஸ் என்பதே பெரும்பாலோனோரின் கருத்து. ஸ்கொட்லாந்தின் மாபெரும் சீர்திருத்தவாதி ஜோன் நொக்ஸ் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இருப்பினும் இதில் வேறிருவருக்கும் பங்கிருந்திருக்கிறது என்பதால் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதற்கு நாம் 16ம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். பொகீமியாவைச் சேர்ந்த போல் குரோ (Paul Craw) என்பவர் 1443ல் செயின்ட் அன்டுரூசில் (St. Andrews) உயிரோடு எரிக்கப்பட்டார். எரிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் அவர் எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்காக அவருடைய வாயில் வெண்கலப் பந்து ஒன்றைத் திணித்து வைத்தனர் கொலையாளிகள். சீர்திருத்தத்திற்காக ஸ்கொட்லாந்தில் முதலில் உயிரிழந்தவர் பெட்டிரிக் ஹெமில்டன் (Patrick Hamilton) என்பவர். ஸ்டுவர்டின் வம்சத்தைச் சேர்ந்த 2ம் ஜேம்ஸ் (James மன்னனின் சந்ததியில் பிறந்தவர் ஹெமில்டன். மார்டின் லூதர் வாழ்ந்த ஜெர்மனியில் இருந்த விட்டன்பேர்க் நகரத்தில் குறுகிய காலம் கல்வி பயின்ற ஹெமில்டன் ஸ்கொட்லாந்துக்குத் திரும்பியதும் புரொட்டஸ்தாந்து போதனைகளை தைரியமாக வெளிப்படையாகப் பிரசங்கித்தார். இதனால் 1528ல் செயின்ட் அன்டுரூசின் பிஷப்பாக இருந்த ஜேம்ஸ் பீட்டன் (James Beaton) ஹெமில்டனின் உயிரைப் பறிக்கத் தீர்மானித்தார். இக்காலத்தின் அரசனாக இருந்த ஜோர்ஜ் பதினாறு வயதேயுள்ள சிறுவனாக இருந்தபடியால் பிஷப் பீட்டனின் கையிலேயே எல்லா அதிகாரமும் இருந்தது.

ஜோர்ஜ் விஷ்சார்ட்

அவரே நாட்டிலும், சபையிலும் பெரும் அதிகாரத்தை செலுத்தி வந்தார். ஹெமில்டன் கைது செய்யப்பட்டு கடற்கரைப் பக்கமாக இருந்த செயின்ட் அன்டுரூஸ் கோட்டையின் பாதாளத் தில் தள்ளப்பட்டார். பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி பீட்டன் அவரை விசாரணைக் குக் கொண்டு வந்தார். அலெக்சாண்டர் கெம்பல் என்ற மனிதன் அவருக்கெதிராக வாதாடினான். இறுதியில் ஹெமில்டன் உயிரோடு எரிக்கப்பட்டார். எரியும் நெருப்பு வேகமாக எரியாததால் ஹெமில்டனின் துன்பங்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்கவில்லை. இறப்பதற்கு முன் அவர் அலெக்சாண்டர் கெம்பலைப் பார்த்து, “சகோதரனே, நீர் உம்முடைய இருதயத்தில் நிச்சயமாக நான் போலிப் போதனையாளன் அல்ல என்றே நம்புகிறீர்” என்றார். ஜோர்ஜ் பொக்ஸ் எழுதிய கிறிஸ்துவுக்காக இரத்தப்பலி செலுத்தியவர்களின் வரலாற்று நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


ஸ்கொட்லாந்தில் பெட்ரிக் ஹெமில்டனின் செல்வாக்கு அதிகமாக இருந்தது, அவருடைய சாட்சியின் காரணமாக அநேகர் சீர்திருத்தத்திற்கு ஆதரவாளர்களாக மாறினர். அவருடைய சீர்திருத்தப் போதனைகள் ஸ்கொட்லாந்தினதும், இங்கிலாந்தினதும் சீர்திருத்த, புரொட்டஸ்தாந்து இறையியலுக்குக் அடித்தளம் வகுத்தன. ஆனால், ஆர்ச் பிஷப் பீட்டன் இதிலிருந்து எந்தப் பாடத்தையும் படித்ததாகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து புரொட்டஸ்தாந்தியர்களைத் தீயிலிட்டு எரித்து வந்தார். ஹெமில்டன் இறந்த பத்து வருடங்களுக்குப் பிறகு எடின்பரோ கோட்டை யில் மேலும் ஐந்து பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். எடின்பரோ நகர மக்களும், அந்நகருக்கு ஐந்து மைல் தொலைவில் இருந்தவர்களும் எரியும் நெருப்பைப் பார்க்க முடிந்தது. அது அவர்களுக்கெல்லாம் எச்சரிக்கையாக இருந்தது. இப்படி சத்தியத்திற்காகப் பலர் உயிர் துறந்தபோதும் கர்த்தர் தொடர்ந்து சத்தியத்திற்காகப் போராடிய மனிதர்களை எழுப்பி வந்தார். கர்த்தர் எழுப்பிய அத்தகையவர்களில் ஒருவரே ஜோர்ஜ் விஷ்சார்ட் (George Wishart). 1540களில் கர்த்தர் தன் பணிக்காகப் பயன்படுத்திக் கொண்ட விஷ்சார்ட், மொன்ட்ரோஸ் (Montrose) என்ற இடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்திருந்தார். தன்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கை களுக்காக துன்புறுத்தலுக்குள்ளான விஷ்சார்ட் இங்கிலாந்தின் பிரிஸ் டல் பகுதிப் போய் வாழ்ந்தார்.

குறுகிய காலம் இத்துன் இத்துன்புறுத்தல் களால் மனம் தளர்ந்திருந்த விஷ்சார்ட் விரைவிலேயே ஜெர் மனிக்கும், சுவிட்சர்லாந்துக்கும் போனார். அங்கே, அவர் விசுவாசத் தில் மேலும் தைரியமடைந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு மறுபடி யும் தான் பிறந்த ஸ்கொட்லாந்து தேசத்துக்கு வந்து சுவிசேஷத்தைப் — பிரசங்கிக்க ஆரம்பித்தார். மக்கள் கூட்டம் அலை அலையாய் அவருடைய பிரசங்கங்களைக் கேட்கக் கூடியது. இதன் காரணமாக அவர் திறந்த வெளியில் கூட்டங் களில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்ததைப் போல சுவிசேஷத்தின் மூலம் ஸ்கொட்லாந்து தேசத்துக்கு விடிவு வரப்போகிறதென்ற நம்பிக்கை அவருள் வளர்ந்தது. ஆனால், அக்காலத்தில் பீ்ட்டனைப் போலவே மோசமான இன் னொருவர் பிஷப்பாக இருந்தார். அவரு டைய பெயர் கார்டினல் டேவிட் பீட்டன் (Cardinal David Beaton). அவர் ஜேம்ஸ் பீட்டனின் உறவினர். விரைவிலேயே விஷ்சார்ட் சிறை பிடிக்கப்பட்டு விசா ரணைக்காக செயின்ட் அன்டுரூஸுக்கு கொண்டு வரப்பட்டார். எல்லாப் போதனைகளும் வேதத்தால் சோதிக்கப்பட வேண்டும் என்று எப்போதும் விஷ்சார்ட் சொல்லி வந்தார். உதாரணத்திற்கு விசாரணையின்போது கத்தோலிக்கப் போதனையான பேர்கட்டரி (Purgatory) விவாதத்துக்குள்ளானது. தன்னைக் குற்றவாளியாகக் கணித்தவர்களை நோக்கி விஷ்சார்ட், “வேத போதனைகளின் அடிப்படையி்ல் அப்படி ஓர் இடம் இருக்குமானால் இப்போதே காட்டுங்கள்” என்று தைரியமாகக் கேட்டார். அவருடைய எதிரிகளால் அதற்கு எந்த பதிலையும் அளிக்க முடியவில்லை.


செயின்ட் அன்டுரூசில் தீயில் எரிக்கப்படும் விஷ்சார்ட்

எதிரிகள் ஹெமில்டனை உயிரோடெரித்தபோது செயின்ட் அன்டுரூஸ் கோட்டைக்கு வெளியில் அதைச் செய்தனர். உயர் பதவியில் இருந்த GH மார்கள் கோட்டைக்கு எதிர்ப்புறம் உயரமான இடத்தில் அமர்ந்து அதைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருந்தன. விஷ் சார்ட்டும் அதே முறையிலேயே எரிக்கப்பட்டார். எரிக்கப்பட்டபோது அவர் தன்மானத்தோடு மரித்தார். உயிரைத் துறப்பதற்கு முன் அவர் மக்களைப் பார்த்து, “பரலோகத்தில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இப்போது கோபுர உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் இன்னும் ஒரு சில நாட்களில் உயிரிழக்கப் போவதை முகச்சுழிப்போடு பார்ப்பார்” என்றார். மூன்று மாதங்களுக்குப் பிறகு கார்டி னல் பீட்டன் உயிரிழந்தார். அவருடைய எதிரிகள் எல்லாப் பாதுகாப்பையும் மீறி அவருடைய அறைக்குள் நுழைந்து தங்கள் கைகளாலேயே அவரைக் கொன்றார்கள். கர்த்தர் கொலை செய்வதைப் பாவமாகக் கருதுகிறார். இந்த விஷயத்தில் தேவ நீதியே கர்த்தருடைய பராமரிப்பின்படி செயற்பட்டதைப் போல மூன்று மாதத்திற்குள் கார்டினலுக்கு மரணம் சம்பவித்தது.

இனி நாம் ஸ்கொட்லாந்துக்கு நெடுங்காலம் இருந்து நிலைக்கும்படியாக புரொட்டஸ்தாந்து இறையியல் போதனையையும், கர்த்தருடைய ஆராதனை முறையையும் அறிமுகப்படுத்திய சீர்திருத்தவாதியான ஜோன் நொக்சின் (John Knox) வாழ்க்கையையும் அவர் செய்த பணிகளையும் கவனிப்போம். அவர் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹெடிங்டன் (Heddington) என்ற இடத்தில் பிறந்தார். அவர் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தீவிரமான புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதியாக மாறி விஷ்சார்ட்டைப் பெரிதும் ஆதரித்துப் பேசி அவருடைய வழித் தோன்றலாக வருவதற்கான அடையாளங்கள் அனைத் தையும் கொண்டிருந்தார். சீர்திருத்தத்தைப் பின்பற்றியவர்களுக்கான துன்புறுத்தல்கள் பெரிதும் அதிகரித்தபோது அவர் ஐரோப்பாவுக்குப் போய்விடத் தீர்மானித்தார். ஆனால், அதற்கு முன் ஸ்கொட்லாந்தின் அரசனுக்கு உதவுவதற்காக செயின்ட் அன்டுரூசில் வந்திறங்கிய பிரெஞ்சுப் படை அவரைக் கைது செய்தது. அந்தப் படை அவரையும் வேறு பலரை யும் பிரான்ஸுக்குக் கொண்டுபோய் அங்கே கடுமையான வேலைகளை செய்ய வைத்தது. அவர்களை ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற்று வதற்கும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேரியின் படத்தைக் கையில் கொடுத்து அதற்கு முத்தம் கொடுக்கும்படி நொக்ஸை எதிரிகள் வற்புறுத்தி னார்கள். என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொல்லி நொக்ஸ் அதைத் தடுக்க முயற்சி செய்தார். எதிரிகள் படத்தை அவருடைய முகத்திற்கும் கரங்களுக்கும் இடையில் திணித்து அதற்கு முத்தம் கொடு என்று நொக்ஸை பலவந்தப்படுத்தினார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நொக்ஸ் படத்தைப் பக்கத்தில் இருந்த ஆற்றில் எறிந்தார். தொடர்ந்து, “அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்; அவளால்தான் மிதக்க முடியுமே, ஆற்றில் அவள் நீச்சலடிக்கட்டும்” என்று சத்தமாகக் கூறினார். அந்த சம்பவத்திற்குப் பிறகு எவரும் எந்த ஸ்கொட்லாந்துப் பிரஜையையும் அத்தகைய காரியத்தை செய்யும்படி வற்புறுத்தவில்லை என்று நொக்ஸ் தான் எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் நொக்ஸ் பத்தொன்பது மாதங்களுக்கு பிரான்சில் சிறை வைக்கப் பட்டிருந்தார். விடுதலைக்குப் பின் நொக்ஸ் இங்கிலாந்தில் போய் வாழத் தீர்மானித்தார். அதற்குக் காரணம், இங்கிலாந்து அரசனாகிய ஆறாவது எட்வர்ட்சின் (Edwards VI) கீழ் அத்தேசம் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தத் திற்கு அதிக வரவேற்பளித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் அரசனு டைய சாப்ளின்களில் ஒருவராக நொக்ஸ் நியமிக்கப்பட்டார். ஆனால், மேரி அரசியாக வந்தபோது நொக்ஸ் ஜெர்மனிக்கும், சுவிட்சர்லாந்துக்கும் தப்பிப் போய் வாழ நேர்ந்தது. அவர் ஜெனீவாவிற்குப் போனபோது பிரபல சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் ஊழியத்தின் கீழிருந்து அவருடைய பிரசங்கங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போஸ்தலருடைய காலத்திற்குப் பிறகு இந்த உலகத்திற்குக் கிடைத்த விலைமதிப்பில்லாத கிறிஸ்துவின் இறையியல் கல்லூரியாக கல்வினின் போதனைகளை ஜோன் நொக்ஸ் கருதினார். கல்வினின் போதனைகளைப் பற்றி மேலும் விளக்கும் போது, “ஏனைய இடங்களில் நிச்சயம் கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டிருக் கிறதை நான் காதால் கேட்டிருக்கிறேன். ஆனால் வாழ்க்கையும், கிறிஸ்த வமும் இந்தளவுக்கு சீர்திருத்தம் அடைந்திருப்பதை ஜெனீவாவில் பார்த் ததைப்போல நான் வேறு எங்குமே பார்த்ததில்லை” என்கிறார். அவர் கல்வினின் போதனைகளுக்குக் கீழ் நான்கு வருடங்களை மிகவும் சந்தோ ஷமாக ஜெனீவாவில் செலவிட்டார்.


ஜோன் நொக்ஸ் 

1559ல் மறுபடியும் ஸ்கொட்லாந்துக்குத் திரும்பிப்போன நொக்ஸ் அங்கே மக்கள் மிகவும் குழப்பத்திற்குள்ளாகியிருந்ததைக் கவனித்தார். அதற்குப் பதினாறு வருடங் களுக்கு முன் அரசனான ஐந்தாம் ஜோர்ஜ் இறந்திருந்தான். இறப்பதற்கு முன் மகளாகிய மேரியை அவன் அரசியாக நியமித்திருந்தான். அரசன் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மேரி பிறந்திருந்தாள். அதனால் மேரி வயதுக்கு வரும்வரை நாட்டை ஆளும் பொறுப்பை அவளு டைய தாயான கைஸ் (Guise) தன் கரத் தில் எடுத்துக் கொண்டிருந்தாள். ஜோன் நொக்ஸ் ஸ்கொட்லாந்துக்கு திரும்பி வந்தபோது அவளே நாட்டை ஆண்டு வந்தாள். அதற்கு முந்தைய ஆண்டுதான் மேரி பிரான்சின் இளவரசனை திருமணம் செய்திருந்தாள். சில மாதங்களுக்குப் பிறகு அவன் இரண்டாம் பிரான்சிஸ் (Francis 11) என்ற பெயருடன் பிரான்சின் அரசனானான். இதனால் மேரி இப்போது பிரான்சின் அரசியாகவும், ஸ்கொட்லாந்தின் அரசியாகவும் இருந்தாள். பிரான்ஸும், ஸ்பெயினும் மேரியே நியாயப்படி இங்கிலாந்தின் அரசி என்று அறிவித்து மேரி டியூடருக்குப் பின் இங்கிலாந்தின் அரசியாக இருந்த எலிசபெத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இந்நிலைமையில் ஸ்கொட்லாந்தில் Lords of the Congregation என்ற பெயரில் இருந்த சில புரொட்டஸ்தாந்தியர்கள் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தப் போதனைகளை ஸ்கொட்லாந்து நாட்டுப் போதனைகளாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இக்காலத்தில் ஸ்கொட்லாந்து அரசு தீவிர ரோமன் கத்தோலிக்க அரசாயிருந்தது.

ஸ்கொட்லாந்தில் வந்திறங்கியவுடனேயே ஜோன் நொக்ஸ் சிலை வணக்கத்திற்கெதிராக தீவிரமாகப் பிரசங்கித்து வேதபோதனைகளைப் பின்பற்றும்படி மக்களைத் தூண்டினார். அவருடைய முயற்சிகள் வீண் போகவில்லை. அவருடைய பிரசங்கம் வல்லமையுடையதாக இருந்தது. அதன்காரணமாக அநேகர் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொண் டார்கள். ஸ்கொட்லாந்தில் சீர்திருத்தம் தீவிரமாக பரவ ஆரம்பித்ததற்கு அடையாளமாக பல ரோமன் கத்தோலிக்க சபைக்கு சொந்தமாக இருந்த அநேக கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலை வணக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட அலங்காரமான கட்டிடங்களை ஜோன் நொக்ஸ் என்றுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் அவற்றை இடித்துத் தள்ளும்படியோ, மற்றவர்களுடைய சொத்துக்களை அழிக்கும் படியோ அவர் எவரையும் வற்புறுத்தியதும் இல்லை. அவரைப் பின்பற்றிய வர்கள் தங்களுடைய உற்சாகத்தை ரோமன் கத்தோலிக்க கட்டிடங் களையும், மடங்களையும் இடித்துத் தள்ளுவதில் காட்டினார்கள். இதைப் பற்றி பின்பு குறிப்பிட்ட ஜோன் நொக்ஸ், “பறவைகளைத் தங்களுடைய கூடுகளுக்குத் திரும்பாமலிருக்கச் செய்வதற்கு கூடுகளை இல்லாமலாக்கு வதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லியிருந்தார்.

ஜோன் நொக்சின் மூலமாகவே பிரெஸ்பிடீரியன் சபை அமைப்பு முறை (Presbyterian church government) ஸ்கொட்லாந்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. இங்கிலாந்தில் இருந்த திருச்சபை அமைப்பு முறையில் பிஷப்பு களின் அதிகாரம் எல்லையற்றதாக இருந்தது. எபிஸ்கொபோஸ் (Episcopos - மேற்பார்வையாளர்) என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்த வார்த்தையே பிஷப் (Bishop) என்பதாகும். ஆனால், பிரெஸ்பிடீரியன் திருச்சபை அமைப்பில் மூப்பர்களுடைய (Greek - presbyteros) அதிகாரம் சபையால் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக இருந்தது. காலம் செல்லச் செல்ல இந்த இரு அமைப்பு முறைகளுக்குமிடையில் பிரச்சனை உருவானது. ஆரம்பத்தில் இவை இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதாக இருந்தாலும் காலம் போகப்போக அவை வெவ்வேறு பாதையில் பிரிந்து செல்ல ஆரம்பித்தன.

ஸ்கொட்லாந்து தேசத்தில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இருந்தது. திருச்சபை இருந்த ஒவ்வொரு பகுதியிலும் வாலிபர்களுக்கு கிறிஸ்தவம், இலக்கணம், இலத்தீன் மொழி ஆகியவற்றைப் போதிப்பதற்கு கல்விக்கூடம் அமைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. முக்கியமான நகரங் களில் திறமைசாலிகளான மாணவர்களுக்கு மேலும் உயர் கல்வி அளிப்ப தற்காக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றின் காரணமாக ஸ்கொட்லாந்தில் கல்வி வளர்ந்து வந்ததோடு, அதன் தரத்திற்காகவும் அது எங்கும் பிரபல்யமானது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு போதகர் தன்னுடைய வீட்டில் சில பிள்ளைகளைத் தங்கவைத்து கல்வியளித்ததாகவும், அவருடைய குடும்பம் உணவருந் தும்போது சாதாரணமாக பிரெஞ்சுப் மொழியிலேயே சம்பாஷனை செய்தார்களென்றும், அதற்குப் பிறகு வேதத்தில் ஒரு பகுதியை சேர்ந்து வாசிக்கும்போது பிள்ளைகள் அதை எபிரெயம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழியில் வாசித்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு அன்றைக்கு கல்வியில் ஸ்கொட்லாந்து சிறந்திருந்தது.

ஜோன் நொக்ஸைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கிய விஷயங்களோடு ஒப்பிடும்போது கல்வி அவசியமானதாக இருந்தாலும் ஏனையவற்றைவிட உயர்வானதாகப்படவில்லை. ஸ்கொட்லாந்து முழுவதும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து கர்த்தருடைய ஞானம் நாட்டில் பெருகும்படிச் செய்வதே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. நொக்ஸுக்குப் பல எதிரிகள் இருந்தார்கள். அவர் ரோமன் கத்தோலிக்க ‘மாஸை’யும் (Mass) அதன் ஏனைய போதனைகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். “கேட்டை அதற்குரிய மொழியில் வெளிப் படையாகவும், தைரியமாகவும் சொல்ல நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றார் நொக்ஸ். கத்தோலிக்க மாஸைப் பற்றிச் சொல்லும்போது, “நான் இருக்கும் பகுதியில் வந்திறங்கும் பத்தாயிரம் போர்வீரர்களைவிட ஒரு மாஸுக்கு நான் பயப்படுகிறேன்” என்றார். எதிரிகளால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. மேரி பிரான்ஸைச் சேர்ந்த தன்னுடைய கணவன் இறந்த பிறகு, தான் தொடர்ந்தும் பிரான்சின் அரசியாக இல்லாததால் மறுபடியும் ஸ்கொட் லாந்துக்கு திரும்பிவந்து அரச பொறுப்பேற்றுக்கொண்டாள். ரோமன் கத்தோலிக்க மதம் அவளுடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தியதால் புரொட்டஸ்தாந்து போதனைகள் ஸ்கொட்லாந்தில் பரவுவதைத் தடுப்பதைத் தன் வாழ்க்கை இலட்சியமாக அவள் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஜோன் நொக்ஸோடு நேரடியாக பிரச்சனைக்குள் ளாவதைத் தவிர்க்க முடியவில்லை. மேரியைப் பற்றிய ஜோன் நொக்சின் கருத்து சிறப்பானது. “அவளிடம் அகங்காரமும், தந்திரமான பேச்சும், கர்த்தருக்கும் அவருடைய சத்தியத்திற்கும் எதிரான கடின இருதயமும் இல்லாமலிருந்தால் அவளைப் பற்றிய என்னுடைய கருத்து வீணாகட்டும்” என்றார் நொக்ஸ். பல தடவைகள் மேரியை சந்தித்துப் பேசியிருந்ததால் நொக்ஸால் அவளைப் பற்றி இந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்க முடிந்தது.

ஸ்கொட்லாந்தில் மேரிக்கு கிறிஸ்தவத்தைவிட வேறு பல தொல்லை களும் இருந்தன. அவளுடைய இரண்டாம், மூன்றாம் திருமணங்களும் பிரச்சனையில் போய் முடிந்தன. 1568ல் அவள் இங்கிலாந்துக்கு தப்பிப் போய் எலிசபெத்தின் ஆதரவை நாட நேரிட்டது. அவளுக்கு இங்கிலாந்தில் எல்லா சுதந்திரங்களும் அளிக்கப்படாவிட்டாலும், நல்ல சூழ்நிலையில் வாழும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இருந்தபோதும் அவள் இங்கிலாந் தின் அரசிக்கு எபபோதும் ஆபத்தானவளாக இருந்து வந்தாள். எலிச பெத்துக்கு எதிராக உருவான பல சதிகளில் அவளுக்குப் பங்கிருந்தது. இறுதியில், இருபது வருடங்களுக்குப் பிறகு எலிசபெத் மேரிக்கு மரண தண்டனை விதித்து பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.

ஜோன் நொக்ஸ் 1572ல் மரணத்தை சந்தித்தார். நெடுங்காலத்தைத் தன்னுடைய எதிரிகளோடு கிறிஸ்தவத்திற்காகப் போராடி வந்திருந்த நொக்ஸ் “இந்த உலகத்தில் சலிப்பேற்படுவதாகவும், கர்த்தரைப் போய் அடைவதற்கு தாகத்தோடு இருப்பதாகவும்” கூறியிருந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய சரீரம் எடின்பரோவில் (Edinburgh) புதைக்கப்பட்டது. அவருடைய கல்லறைக்கு முன் நின்று அந்நகரத் தலைவர் பின்வருமாறு சொன்னார், “எந்த மனிதனுக்கும் ஒருபோதும் பயப்படாத மனிதர் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்”. ஸ்கொட்லாந்துக்கு திருச்சபை சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து, அத்தேசத்திற்குப் பெரும் ஆசீர்வாதமாக இருந்த ஜோன் நொக்சின் சீர்திருத்த வேத போதனைகளுக்கு இன்று ஸ்கொட்லாந்து மதிப்பளிக்காமலிருப்பது வருத்தத்திற்குரியதே.

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 108: கர்த்தருடைய ஜெபத்தின் அறிமுகப் பகுதி நமக்கு எதைப் போதிக்கின்றது?

பதில்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்ற கர்த்தருடைய ஜெபத்தின் அறிமுகப் பகுதி நமக்கு உதவக் கூடியவரும் அதற்குத் தயாராக இருப்பவருமான கடவுளிடத்திலே ஒரு பிள்ளை தகப்பனிடத்தில் சொல்லுவது போல பரிசுத்தத்துடனும், பயத்துடனும், நம்பிக்கையுடனும் கிட்டிச் சேர வேண்டும் என்றும் நாம் மற்றவர்களுக்காகவும் மற்றவர்களுடனும் சேர்ந்து ஜெபிக்க வேண்டும் என்றும் போதிக்கின்றது.

விளக்கக் குறிப்பு: கர்த்தருடைய ஜெபத்தின் அறிமுகப் பகுதியை இனிப் பார்ப்போம். இப்பகுதி கர்த்தரோடு நமக்கு இருக்க வேண்டிய சரியான உறவைப் பற்றி விளக்குகிறது. கர்த்தரோடு சரியான உறவில்லாமல் இந்த ஜெபத்தை கர்த்தர் எதிர்பார்க்கும் விதத்தில் நாம் ஜெபிக்க முடியாது. கர்த்தருடைய ஜெபத்தை கர்த்தரை விசுவாசிக்காதவர்களும் ஜெபித்து வருகிறார்கள். இதற்குக் காரணமென்ன? ? கர்த்தர் உலக மக்களனைவருக்கும் தகப்பனாக இருக்கிறார் என்ற போலியான கருத்தே அதற்குக் காரணம். இந்தப் போதனையின்படி கர்த்தர் எல்லா மனிதர்களுக்கும் தகப்பனாகவும், எல்லா மனிதர்களும் கர்த்தருடைய பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே, வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லா சமயத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து ஜெபம் செய்யலாம் என்று நம்புகின்றனர். இவர்கள் கர்த்தரின் ஜெபத்தைக் கூட இவ்வேளைகளில் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

கர்த்தருடைய ஜெபம் தரும் போதனையின்படி முதலில் கர்த்தரோடு சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒருவரும் இந்த ஜெபத்தைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஜெபிக்க முடியாது. பிறப்பிலிருந்தே நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கிறோம் என்றும், சாத்தானின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்றும் வேதம் விளக்குகின்றது. நம்முடைய பாவத்திலிருந்து நாம் மனந்திரும்பி விடுபட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போதே நாம் நீதிமான்களாகவும், கர்த்தருடைய பிள்ளைகளாகவும் மாறுகிறோம். மனந்திரும்பினால் மட்டுமே நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக முடியும் என்கிறது வேதம். அதன் பிறகே இந்த ஜெபத்தை அதன் அர்த்தங்களைப் புரிந்துகொண்டு கர்த்தருடைய பிள்ளைகளாக கர்த்தர் முன் நாம் ஜெபிக்க முடியும். கர்த்தரோடு உறவில் லாமல், கர்த்தருடைய பிள்ளைகளாக இல்லாதவர்களுக்கு இந்த ஜெபத்தின் ஆத்மீக அர்த்தங்கள் புரியாது. அதை அவர்கள் தெரிந்துணர்ந்துகொள்ள அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவரும் இல்லை. “ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாரே” (மத்தேயு 10:36) என்று இயேசு சொல்லி யிருக்கிறார். நம்முடைய பெற்றோர், சகோதர, சகோதரிகளோடு நமக்கு இரத்த உறவு இருந்தபோதும் நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றபோது நாம் மட்டுமே கர்த்தரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகிறோம். நாம் விரும்பாவிட்டாலும் நம்முடைய விசுவாசம் நம் குடும்பத்தாரை நம்மிடம் இருந்து பிரிக்கின்றது. அவர்கள் கர்த்தரின் குடும்பத்திற்கு புறம்பானவர் களாக இருக்கிறார்கள். கர்த்தரோடு உறவில்லாத நம்முடைய குடும்பத்தார் நாம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைப் புரிந்துகொள்ள முடியாம லிருக்கிறார்கள். சில வேளைகளில் நமக்கு எதிரிகளாகவும் மாறிவிடு கிறார்கள். இதைத் தான் இயேசு விளக்கி, “பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதீர்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்” என்கிறார் (மத்தேயு 10:34). அத்தோடு, “எப்படியெனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்” என்று அடுத்த வசனத்தில் விளக்குகிறார். இதிலிருந்து கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் எத்தகைய உறவை நமக்கும் கர்த்தருக்கும் இடையில் ஏற்படுத்தி எத்தகைய பிரிவை நமக்கும் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டு்ம். இதன் காரணமாகத்தான் கர்த்தரின் ஜெபத்தை கிறிஸ்துவை மெய்யாக விசுவாசிப்பவர்கள் மட்டுமே ஜெபிக்க முடியும்.

கர்த்தருடைய ஜெபம், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று ஆரம்பிக்கிறது. இதற்குப் பொருளென்ன என்று பார்ப்போம். முதலாவதாக, கர்த்தர் நாம் எட்ட முடியாத தொலைவிலிருக்கிறார் என்பது இதன் அர்த்தமல்ல. வேற்று மதத்தார் அத்தகைய நம்பிக்கையையே கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் கடவுள் மனிதன் எட்ட முடியாத தொலைவில் சொர்க்கத் தில் இருப்பதாகவும், விரும்பிய நேரத்தில் மட்டுமே இந்த உலகத்துக்கு வந்து செல்வதாகவும் அதன் புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் விளக்குகின்றன. இந்துக்கள் பல்வேறு சிலைகளை வணங்கிய போதும் எட்ட முடியாத, உணர முடியாத கடவுள் எங்கோ இருக்கிறார் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். வாழ்க்கையில் தங்களுக்கு இடறலேற்படுகின்ற வேளையில் அவர்கள் பயத்தில் வெவ்வேறு தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து நோயைத் தீர்த்தால், இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று உறுதிமொழி எடுக்க மட்டுமே முடிகிறது. தாங்கள் அனுபவிக்கும் தீங்குக்கும் கடவுளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பதும் அவர்களுக்குத் தெரிவ தில்லை. கர்மவினையினால் தாங்கள் கஷ்டப்படுவதாக எண்ணி தெய்வங் களுக்கு நேர்த்திக் கடன் எடுக்க மட்டுமே அவர்களால் முடிகிறது. மனதில் சமாதானமில்லாமல் தெய்வம் தொலைவில் இருப்பதாக எண்ணி குழப்பத் தோடு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். துன்பமனுபவிப்பவர்களையும் அவர்களால் சமாதானப்படுத்த முடிவதில்லை. இதேபோல்தான் ரோமன் கத்தோலிக்க மதத்தாரும். அவர்களுடைய போதனைப்படி கடவுள் நாம் அடைய முடியாத மிகத் தொலைவில் இருக்கிறார். அதனால்தான் அவர்கள் நாம் மேரியிடம் ஜெபிக்க வேண்டும் என்றும் குருமாரிடத்தில் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றும், ஒருவர் இறந்த பின்னும் அவருடைய பாவங்கள் போக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கடவுளிடம் நாம் நேரடியாக எதையும் கேட்க முடியாதென்றும், கடவுளுக்கு அருகில் இருக்கும் மேரியிடமும், குருமார்களிடமும், புனிதர்களிடமும் ஜெபித்தே எதையும் அடையலாம் என்பதும் அவர்களுடைய போதனை. மொத்தத்தில் கடவுள் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறார் என்பதே வேற்று மதங்களின் போதனை.

கிறிஸ்தவம் அப்படிப் போதிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் கர்த்தர் தொலைவில் இருப்பதாக எண்ணுவதில்லை. ஒரு பாவி மனந்திரும்பும் போது அவன் உடனடியாக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் குடும்ப அங்கத்தவனாகிறான்; கர்த்தரின் பிள்ளையாகிறான். இது அவனுக்கு கர்த்தரோடு ஏற்படுகின்ற நெருக்கமான உறவையும், ஐக்கியத்தையும் விளக்குகிறது. அவனைப் பொறுத்தவரையில் அன்று முதல் அவனால் தன் தகப்பனோடு பேசுவதுபோல் கர்த்தரோடு பேச முடியும். உலகத்தைச் சேர்ந்த எவருடைய உதவியும் இல்லாமல் அவனால் கர்த்த ரோடு ஜெபத்தில் பேச முடியும். அந்த ஆசீர்வாதத்தைக் கிறிஸ்து அவனுக்கு அளித்திருக்கிறார். அவனுள் பரிசுத்த ஆவியானவர் இருப்பதால் அவன் கர்த்தர் தன்னோடு எப்போதும் இருப்பதை உணர்கிறான். “வானங்களின் வழியாய்ப் பரலோகத்துக்குப் போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியால் . நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக் கடவோம்” எபிரெயர் 4:14-16). கர்த்தரிடம் ஜெபத்தில் வரும்படியாய்க் கர்த்தரே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

அதேவேளை, நம்முடைய பிதா பரலோகத்தில் இருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தரிடம் ஜெபத்தில் பேசி ஐக்கியத்தில் வரக்கூடிய பெரிய ஆசீர்வாதம் நமக்கிருந்த போதும் கர்த்தரிடம் பயபக்தியோடும், தாழ்மையோடும் எப்போதும் நாம் வரவேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது. அவருக்கும் நமக்கும் இருக்கும் நெருக்கம் அவரில் நாம் காட்டவேண்டிய பயபக்தியைக் குறைத்துவிடக்கூடாது. சிலர் ஜெபம் செய்யும்போது பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை அளிப்பதில்லை. இயேசு நமக்கு நண்பராகவும் இருக்கிறார் என்பதற்காக நம்முடைய உலகத்து நண்பனோடு பேசுவது போல் அவரிடம் ஜெபத்தில் நாம் பேசக்கூடாது. கர்த்தரை நம்முடைய தரத்துக்கு கொண்டு வந்து பேசுவதும், நடந்துகொள்ளுவதும் அவரை மகிமைப்படுத்துவதாகாது. பரமண்டலங்களிலிருக்கிற கர்த்தரை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும் என்று இயேசு போதித்தபோது, நமக்கு அவர் பிதாவாக இருந்தாலும் தொடர்ந்து கர்த்தராக இருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது என்பதையும் நினைவுறுத்துகிறார். இன்னொரு வகையில் கூறப்போனால் கர்த்தர் நமக்கு நெருங்கிய நிலையில் இருந்தபோதும் பரலோகத்திலேயே தொடர்ந்திருக்கிறார். அவருக்கு முன்பாக ஜெபத்தில் வருகிறபோது நம்முடைய பயபக்தியைக் காட்ட நம்முடைய காலணிகளை நாம் அகற்ற வேண்டிய அவசியமில்லை. நம்முடைய இருதயத்தில் நாம் கர்த்தருக்கு உரிய இடத்தைக் கொடுத்து ஜெபிக்க வேண்டும்.

தர் பரலோகத்தில் இருக்கின்றபோது எவ்வாறு நமக்கருகில் நம்மோடும் இருக்கிறார் என்பதை நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைபற்றிய சத்தியங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். இயேசு கிறிஸ்து இந்த உலகில் தேவனாகவும் மனிதனாகவும் இருந்தார். ஒரே மனிதரில் இரண்டு தன்மைகளும் காணப்பட்டன. அவர் தேவனாக பிதாவைப் போல தெய்வீகத்துடன் இருந்தார். அவர் மனிதனாக பாவத்தைத் தவிர்த்த ஏனைய அத்தனைத் தன்மைகளையும் தன்னில் கொண்டிருந்தார். தேவனாகவும், மனிதனாகவும் இருந்த அவர் நம்மைப் பிதாவிடம் கொண்டுவருகிறவராக இருக்கிறார். இதனாலேயே நாம் பயபக்தியோடும், நம்பிக்கையோடும் கர்த்தரை அனுகி வர முடிகின்றது. நம் பிதா கர்த்தராக இருப்பதால் நாம் அவரை பயபக்தியோடு ஆராதனை செய்கிறோம். கர்த்தர் நம் பிதாவாக இருப்பதால் நாம் நம்பிக்கையோடு அவரிடம் வருகிறோம். கர்த்தர் பரலோகத்திலும் நாம் இந்த உலகத்திலும் இருப்பதால் நாம் கர்த்தரை பயபக்தியோடு அனுகுகிறோம். இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்ததால் நாம் கர்த்தரிடம் நம்பிக்கையோடு வருகிறோம். கிறிஸ்து, மீட்பின் கிரியைகளினாலும், தொடர்ந்து பரலோகத்திலிருந்து நமக்காக ஜெபிப்பதாலும் கர்த்தர் நமக்கு உதவச் சித்தமாக இருப்பது மட்டுமல்லாமல் உதவும் வல்லமை கொண்ட வராகவும் இருக்கிறார். அவர் நம் பக்கத்திலேயே இருந்திருந்தால் அவரால் நமக்கு உதவ முடியுமா என்று நாம் சந்தேகப்பட்டிருப்போம். அவர் தூரத்தில் இருந்திருந்தால் நமக்கு உதவ அவர் மனங்கொள்ளுவாரோ என்ற சந்தேகத்துடன் இருந்திருப்போம். இந்த இரண்டையும் தெய்வீகத்தையும், மானுடத்தையும் தன்னில் கொண்டிருந்த இயேசு கிறிஸ்து பூரணமாகத் தீர்த்து வைக்கிறார்.

சாதாரணமாகவே ஆத்துமாக்கள் கூடி ஜெபம் செய்ய வேண்டும். தனி மனிதனுக்கு மட்டுமல்லாது சகல கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்துவின் சரீரத்துக்கும் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதமாக ஜெபம் இருக்கிறது. நாம் தனிமையில் கர்த்தரிடம் வந்து அன்றாடம் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அதேவேளை ஏனைய ஆத்துமாக்களோடு சேர்ந்து ஜெபிக்க வேண்டும் என்றும், சபையாகக் கூடி ஜெபிக்க வேண்டும் என்றும் வேதம் போதிக்கிறது (அப்போஸ். 2:42). ஆத்துமாக்களோடு சேர்ந்து ஜெபிப்பதும், மற்றவர்களுக்காக ஜெபிப்பதும் ஜெபத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பேராசை பெரு நஷ்டம்!

இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் டெலிவிஷன் செய்திகளிலும், பத்திரிகைகளிலும் அன்றாடம் தலையங்கமாக வருகிற செய்திகள் உலகப் பொருளாதாரத்தைக் குறித்ததாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது, வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பது பற்றிய புள்ளி விபரங்களே செய்தி நேரங்களை ஆளுகின்றன. இதுவரை கடந்த வருடத்தில் இருந்து உலகப் பங்குச் சந்தையில் இழக்கப்பட்டிருக்கின்ற பணத்தொகை 25 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். டிசெம்பர் 2008ல் இருந்து 2009 ஜனவரி மாதம் வரை அமெரிக்காவில் வேலை இழந்திருப்பவர்களின் தொகை 3 மில்லியன்களுக்கு அதிகமாயிருக்கின்றது. அன்றாடம் பெருந்தொகையினர் தொடர்ந்து வேலைகளை இழந்து வருகிறார்கள். பல வர்த்தக நிறுவனங்கள், பெரும் வங்கிகள், கார் கம்பேனிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி அரசாங்க உதவியை நாடிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மட்டும் பதினான்கு வங்கிகள் திவாலாகியுள்ளன. உலக கார் உற்பத்தியில் முன் னணி வகிக்கும் டொயோட்டா கார் கம்பேனி எழுபது வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக மாபெரும் நஷ்டத்தை அடைந்திருக்கிறது. தொடர்ந்தும் அது நஷ்டத்திலேயே இயங்கும் நிலை உள்ளது. ஜப்பானில் நிசான் கார் கம்பேனி 20,000 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தை மேலும் சரிந்துவிடாதபடி காக்கவும், வேலை இழந்தவர்களுக்கு உதவவும் அமெரிக்க அரசாங்கம் 900 மில்லியன் டாலர்களை செலவிடத் தீர்மானித்திருக்கிறது. அதுவும் ஒரு தற்காப்பு அவசர நடவடிக்கைதான். வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை அது தூக்கி நிறுத்துமா என்பதை ஒருவராலும் நிச்சயப்படுத்த முடிய வில்லை. 1930களில் அந்நாடு சந்தித்த பெரும் பொருளாதார வீழ்ச்சியைவிட (The Great Depression) இது மோசமானதாக இருக்கும் என்ற வகையிலேயே செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பொருளாதாரச் சரிவு அன்று உலக நாடுகள் ஒவ்வொன்றையும் பெருமளவில் பாதித்தது. அரசியல், பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. செல்வந்தர்கள், வறியவர்கள் என்ற பேதமின்றி மக்களனைவரும் கடுந்துன்பங்களை வாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்தது. இன்றைய சந்ததி அதை வரலாற்று நூல்களில் மட்டுமே வாசிக்க முடிகிறது. அந்த நிலைக்குப் போய் விடுவோமோ என்ற பயம் பலரின் மனதில் எழாமலில்லை.

இவ்வாறாக அமெரிக்காவை உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு அந்நாட்டுப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் ஐரோப்பிய நாடுகளையும் உலகின் ஏனைய நாடுகளையும் பாதித்திருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஜப்பான் தன் ஏற்றுமதி வர்த்தகத்தில் 46% தை இழந்து தவிக்கிறது. சீனாவும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து அங்கே வேலை இழப்பவர்களின் தொகை அன்றாடம் விஷத்தைப் போல் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது வந்திருக்கும் செய்தியின்படி கட்டிடத் தொழிலில் அரபு நாடுகள் எதிர்பார்க்கின்ற வீழ்ச்சியினால் அங்கு வேலை செய்கின்ற பெருந்தொகையினரான இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாக ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நியூசி லாந்தில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேலை இழப்பவர்களின் தொகை 78,000 க்கும் மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை அளிப்பதற்கு இப்போதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்தொகை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பிஷர் அன்ட் பைக்கல் (Fisher & Paykel) பெரும் நஷ்டத்தை சந்தித்து மோசமான நிலையில் இருப்பதால் முதல் தடவையாக அரசாங் கமே அதன் உதவிக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கும் இதே நிலை தான். ஒரு புறம் அக்கினி போல் 50 செல்ஷியஸுக்கு மேல் வெப்பம் இம்மாதத்தில் அந்நாட்டைத் தாக்கி வருகிற வேளை பொருளாதார சரிவும் வேலை இழப்பவர்களின் தொகையும் அவர்களை நிலைகுலைய வைத் திருக்கிறது. மேலைத்தேய நாடுகளைப் பாதித்து எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் பொருளாதாரச் சரிவு கீழைத்தேய ஆசிய நாடுகளை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை இனி வரும் மாதங்கள் தான் காட்டப் போகின்றன. உண்மையில் இத்தகைய பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தப்புவது எந்த நாட்டுக்குமே பெருங் கஷ்டமாகத்தான் இருக்கப் போகிறது என்பதை அன்றாடம் வரும் செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன. இப் பொருளாதாரப் பாதிப்பின் முழுத் தாக்கத்தையும் இந்த வருடத்தின் இறுதிப் பகுதி நமக்கு உணர்த்தலாம். மொத்தத்தில் உலகம் இதுவரை சந்தித்திராத பெரும் பொருளாதார வீழ்ச்சியும், அதன் தொடர் தாக்கங் களும் உலக மக்களைப் பெருமளவில் வாட்டியெடுக்கப் போகின்றது என்பதில் எவருக்கும் சந்தேகமிருப்பதாகக் தெரியவில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம்? பொருளாதார விற்பனர்களின் கவனத்தையும், அரசாங்கங்களின் கவனத்தையும் தாண்டி நாடுகளை இந்தளவுக்கு பாதித்திருக்கும் பொருளாதாரச் சரிவுக்கு எது காரணம்? என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. அமெரிக்க பொருளாதாரப் பாதிப்பிலிருந்தே இந்த உலகப் பொருளாதாரப் பாதிப்பு ஆரம்பித்திருப்ப தால் அங்கு நடந்த நிகழ்வுகளை ஆராயாமல் இருக்க முடியாது. பெரும் கோப்பரேட் கம்பேனி நிர்வாகிகள் பல்லாண்டு காலமாகவே அமெரிக் காவில் தங்களுடைய கம்பேனி லாபத்தை அளவுக்கு மீறி அதிகரித்துக் காட்டி வந்திருக்கிறார்கள். அத்தோடு கம்பேனித் தலைவர்கள் அளவுக் கதிகமான பணத்தை போனஸ் என்ற பெயரில் அனுபவித்து வந்திருக் கிறார்கள். கம்பேனிகள் தாங்கி வந்த அவர்களுடைய சுகபோகச் செலவுத் தொகையினால் மட்டும் சிறு நாடுகளின் பொருளாதாரத்தையே தாங்கிவிட முடியும். அந்தளவுக்கு பணம் அளவில்லாமல் அநாவசியமாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் பங்குகளை செயற்கையாக உயர்த்திக் காட்டியும், எந்தப் பங்குகள் எந்தளவுக்கு உயரக்கூடும் என்று அனுமானம் செய்து முன்னறிவித்தும் செயற்கையான ஒரு நிலையை உருவாக்கியவர்களால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இதெல்லாவற்றையும்விட வீடில்லாதவர்களுக்கு வீடளிக்கும் முயற்சியில் வங்கியில் கடனாகப் பெறும் பணத்தைத் திருப்பிக் கட்ட முடியாதவர் களுக்கெல்லாம் வங்கிகள் பல்லாண்டுகளாக பணத்தைக் கொடுத்து அவற்றைப் பெற வழியில்லாமல் நஷ்டத்தில் ஓடி வந்திருக்கின்றன. இதன் தொடர் தாக்கமாக உலகில் பெரும் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த வங்கிகளின் வீழ்ச்சி ஒவ்வொன்றாக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் ஏனைய வங்கிகளையும் பாதிக்்கச் செய்தன. இதனால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. பணப்பற்றாக்குறையினால் வங்கிகளின் மேல் மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்தது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. வியாபாரங்கள் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. வேலை இழப்பவர்களின் தொகையும் அதிகரித்தது. இதைத்தான் இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்த்தும் செய்திகளில் வாசித்தும், கேட்டும் வருகிறோம்.

இதுவரை நாம் பார்த்தது சீரற்ற தொழில் முறையும், நிர்வாகமும் எந்தளவுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதித்திருக்கிறது என்பதுதான். இதற்கு மேலாக முக்கியமான காரணமொன்றுண்டு. அதுதான் பேராசை. செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும், அதுவும் எத்தனை சுலபமாக, எவ்வளவு விரைவில் பெருக்கிக் கொள்ள முடியுமோ அதுவே முக்கியம் என்ற மனநிலையால் வேறெதையும் பற்றிக் கவலைப்படாமல் பணத்தைப் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்த மனிதர்கள் இந்த உலகப் பொருளாதாரச் சரிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பது கஷ்டம். இதை அமெரிக்க நாட்டில் மட்டும் இல்லாமல் ஐரோப்பா மற்றும் எல்லா நாடுகளிலும் பார்க்க முடிகின்றது. மனிதனுடைய பேராசையே இன்றைக்கு உலகப் பொருளாதாரத்தை இந்த நிலைக்கு அழைத்து வந்திருக்கிறது. அழிவை நாடி நிற்கின்ற இந்த உலகத்தை அளவுக்கு மீறி நேசித்து அது தரும் சுகபோகங்களில் மட்டும் ஆசை வைத்து அவற்றை அடையத் துடிப்பவர்கள் இன்றைய பொருளாதாரச் சரிவுக்கு பெருங் காரணமாக இருந்திருக்கிறார்கள். சிலர் இதை முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாக அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அதுவல்ல காரணம். பேராசையே இதற்குப் பெருங்காரணம். பாவத்தில் இருந்து வரும் மனிதன் இந்த உலகத்தையே நேசிக்கிறான், நம்புகிறான்; அதற்காகவே வாழ்கிறான். அதனால்தான் யோவான் தன் நிருபத்தில் நம்மைப் பார்த்து “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்” (1 யோவான் 2:15) என்று கூறுகிறார். மாம்சத்தின் இச்சையாலும், கண்களின் இச்சையாலும், ஜீவனத்தின் பெருமையாலும் பணத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் அதன் விளைவுகளை இன்று பார்க்கிறார்கள். யாக்கோபு தன் நிருபத்தில் “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறிfர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என்று கூறியிருக்கிறார். பணம் வாழ்க்கையில் அவசியம் தான். ஆனால். அளவுக்கு மீறிய பண ஆசையும், அதற்காகவே வாழ்க்கையை நடத்தப் பார்ப்பதும் அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதை இன்றைய பொருளாதாரச் சரிவு விளக்குகிறது. இதற்காகத்தான் யாக்கோபு பணக்காரர்களைப் பார்த்து, “ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள் மேல் வரும் நிர்ப்பந்தங்களின் நிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப் போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனை களுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். நீதிமானை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலை செய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.” யாக்கோபுவின் இந்த வார்த்தைகள் இன்றைய உலகப் பொருளாதாரச் சரிவு காலத்தில் எத்தனைப் பொருத்தமாக இருக்கின்றன.

இந்தப் பொருளாதாரச் சரிவுக் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? இது எங்கு நம்மைக் கொண்டு போகப் போகிறது என்று ஒருவராலும் தெளிவாக விளக்க முடியாது. இதிலிருந்து ஒருவேளை தப்பிவிடலாம். ஆனால், அதையும் ஒருவராலும் உறுதி செய்ய முடியாது. அப்படியிருக்க இந்தக் காலங்களில் நாம் செய்ய வேண்டியதென்ன? ?

முதலில், நம் கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்பதையும் அவரை மீறி ஒன்றும் நிகழாது என்பதையும் உறுதியாக நம்ப வேண்டும். தன் மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு அவர்களைக் கர்த்தர் தள்ள மாட்டார் என்பதை நம்ப வேண்டும். தன்னந்தனியாக குகையில் உண்ண உணவின்றி வாடிக்கொண்டிருந்த எலியாவுக்கு கர்த்தர் காகத்தை அனுப்பி அனுதினமும் உணவளிக்கவில்லையா? கானான் தேசத்தை நோக்கி வனாந்தரத்தில் போய்க்கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு அவர்கள் சமைக்கவும் அவசியமில்லாமல் அன்றாடம் தேவையான உணவைக் கர்த்தர் அளித்து நாற்பது வருடங்கள் போஷிக்கவில்லையா? ? எலிசாவின் காலத்தில் இஸ்ரவேலில் பஞ்சமிருந்தபோது எலிசாவையும், தீர்க்கதரிசி களின் குமாரர்களின் குடும்பங்களையும், தன்னுடைய மக்களையும் கர்த்தர் பராமரிக்கவில்லையா? ? விண்ணில் பறக்கும் பறவைகளையும், மிருகங்களை யும் போஷித்து வரும் கர்த்தர், நம்மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் போது நம்மைப் போஷிக்காமலா விட்டுவிடுவார்? உலகில் எது எப்படி நடந்தாலும் இறையாண்மையுள்ள கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் அன்பால் நம்மைத் தொடர்ந்து போஷித்து, பராமரித்து வருவார். அவருடைய அன்பும், பாதுகாப்பும் இருக்கும்வரை நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய நோக்கங்களையும் திட்டங்களையும் மீறி இந்த உலகில் எதுவும் என்றுமே நடந்துவிட முடியாது.

இரண்டாவதாக, இதுவரை நாம் கவனமாக இருந்திராவிட்டாலும் இனிமேலாவது பணத்தை விரயம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிலர் பணத்தைப் பூதம் போல் பாதுகாப்பார்கள். அது பண ஆசையால் ஏற்படுவது. சிலர் பணத்தை அநாவசியத்துக்கும் செலவழிப் பார்கள். கர்த்தரை விசுவாசிப்பவர்கள் அப்படிச் செய்தால் அது கர்த்தரை நிந்திப்பதாகும். நம் கையில் கிடைக்கும் அனைத்துமே கர்த்தரிடம் இருந்து வருகிறது. பணம் உற்பட நாமனுபவிக்கும்படிக் கர்த்தர் கொடுத்திருக்கும் அனைத்திற்கும் நாம் கணக்குக் காட்ட வேண்டும். அதாவது, அவற்றை நியாயமாக, கவனத்தோடு செலவிட வேண்டும். இது எந்தக் காலத்திலும் நாம் பின்பற்ற வேண்டிய முறை. வீண் செலவு செய்வது கர்த்தர் நமக்குத் தந்திருப்பவற்றை உதாசீனப்படுத்துவதாகும். இன்றிருக்கும் பொருளாதார சரிவு காலத்தில் நாம் மிகவும் கவனமாகப் பணத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தப் பொருளாதாரம் மேலும் சிக்கலுக்குள்ளாகினால் அன்றாடம் தொழிலகங்கள் மூடப்பட்டு வேலை இழப்பவர்களின் தொகை அதிகரித்து பணப்புழக்கம் குறைவடையும். வங்கியில் பணம் பெறுவதும், பணங்கொடுக்கல், வாங்குதல்களும் குறைவடையும். பொருட்களின் விலை அதிகரிக்கும். பெரும் இக்கட்டுகள் ஏற்படலாம். அதனால், முன்யோசனையுடன் பணத்தைக் கவனமாக, விரயம் செய்யாமல் செலவழிக்கப் பழக வேண்டும். ஒருமுறைக்கு இரண்டு முறை செய்யத் தீர்மானித்திருக்கும் காரியத்தை சிந்தித்து ஆராய்ந்து பணத்தைப் பயன்படுத்துவது நல்லது. இது இந்நாட்களில் மட்டும் நாம் அவசியமாக செய்ய வேண்டிய காரியம் அல்ல, எந்நாட்களிலும் கர்த்தர் இந்தவிதமாகவே நாம் பணத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று எதிர் பார்க்கிறார். இனி வரப்போகும் காலங்கள் கடுமையானதாக அமைந்து விடலாம். நிதானித்து இன்று நாம் வாழ ஆரம்பித்தால் கஷ்ட காலங்களில் தேவையில்லாத சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் இல்லையா? மூன்றாவதாக, உழைப்பில் நாம் ஊக்கத்தைக் காட்ட வேண்டும். பணத் திற்காக மட்டும் உழைக்காமல் நியாயத்தோடு கர்த்தருக்காக உழைப்பதை நாம் வழக்கமாகக் கொள்ள வேண்டும். உழைக்கச் சோம்பேரித்தனப் படுபவர்களே எந்தப் பொருளாதாரச் சரிவுக் காலங்களிலும் முக்கியமாக பாதிக்கப்படுவார்கள். உழைத்து உயராதவர்களில்லை. இன்றிருக்கும் நிலையில் பதவிகள் பறிபோகலாம். வேலை இல்லாதவர்களின் தொகை அதிகரிக்கலாம். இதற்காக நாட்டு அரசாங்கங்கள் வேலைகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வழங்கும் திட்டங்களைக் கொண்டு வரும். 1930களில் உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சரிவுக்காலத்தில் நியூசிலாந்தில் மக்கள் தெருக்களை உருவாக்கும் தொழில்களிலும் அதுபோன்ற வேறு தொழில்களையும் செய்ய வேண்டியிருந்தது. அதன் மூலம் மட்டுமே மக்களுக்கு உணவுக்கு வருவாய் வந்தது. எந்தத் தொழிலானாலும் அது நற்தொழில் தான் என்ற நல்லெண்ணத்தோடு கர்த்தருக்கும் பயந்து உழைப்பவர்கள் கஷ்ட காலங்களில் நிலை நிற்க முடியும். இந்தத் தொழிலை மட்டும் தான் செய்வேன், வேறு தொழில்கள் என் தகுதிக்கு ஒத்துவராது என்று வாழ்கிறவர்களும், செய்யும் தொழிலில் ஊக்கம் காட்டாதவர்களும் கஷ்ட காலங்களில் பெருந்துன்பங்களை அனுபவிக்க நேரிடும். அவர் களுடைய திமிரான போக்கினால் துன்பத்தை அவர்களே வரவழைத்துக் கொள்ளுவார்கள்.

நான்காவதாக, துன்பங்களை இன்முகத்தோடு தாங்கிக்கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கர்த்தரை விசுவா சிக்காத அவிசுவாசிகளால் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியாது. வேலை போய்விட்டது என்று அமெரிக்காவில் ஒரு மனிதன் தன் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டான். இன்னொருவன் தன்னுடைய மேலதிகாரியையும் அவருடைய குடும்பத்தையும் சுட்டுக் கொன்றான். இங்கிலாந்தில் தன்னுடைய வியாபாரம் வீழ்ச்சியடைவதைப் பொறுக்காத ஒரு மனிதன் ஓடும் இரயில் முன் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டான். கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் இந்த வழியில் போகமாட்டார்கள். இருந்தாலும் கர்த்தரை விசுவாசிக்கும் நாம் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்தித்தேயாக வேண்டும். இதைத்தான் யாக்கோபு தன்னுடைய நிருபத்தின் ஆரம்பத்தில் சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். யிருக்கும். உங்களுக்கு ஏற்படுகின்ற பலவிதமான சோதனைகளை இன்பமாகக் கருதி வரவேற்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாக்கோபு முதலாம் அதிகாரத்தில் கூறுகிறார். இதற்குக் காரணமென்ன? ? இன்பமோ, துன்பமோ கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் கிறிஸ்தவன் கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும். இன்பமான காலங்களில் நிலை தவறாமல் இருந்து கர்த்தரின் நோக்கங்கள் தன்னில் நிறைவேறும் வகையில் வாழ்வதோடு துன்ப காலங்களிலும் நிலை தவறாமல் இருந்து கர்த்தரின் சித்தம் தன்னில் நிறைவேறும் வகையில் அவன் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். துன்பத்தை அனுபவிக்கும் கிறிஸ்தவனின் வாழ்க்கையில் கர்த்தர் எத்தகைய நோக்கங்களை நிறைவேற்றுகிறார் என்பதை யாக்கோபு 1:2-4 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. இதனால்தான் கிறிஸ்தவன் துன்பத்தை இருகரம் நீட்டி வரவேற்க வேண்டும் என்கிறார் யாக்கோபு. இன்றைக்கு உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு பல துன்பங்களை நம் வாழ்க்கையில் அனுபவிக்கும்படிச் செய்யலாம். அது நிச்சயமாக நடக்கும் என்று நான் கூறவரவில்லை. அப்படியான நிலை ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆலோசனை கூறுகிறேன். துன்ப நேரத்தில் மனம் தளறி அவிசுவாசி போல் நடந்து கொள்ளாமல் கர்த்தரை விசுவாசித்து அவர் வழியில் அமைதியாக வாழ்ந்து புறஜாதியாருக்கும் சாட்சியாக இருக்க வேண்டும்.

ஐந்தாவதாக, உலகப் பொருளாதாரச் சரிவு நம்மைப் பாதிக்கும் காலங் களில் Fh சகோதரர்களுக்கு உதவுவதை நாம் கடமையாகக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டு அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை வரவைக்க வேண்டும். இதைத்தான் கிறிஸ்தவர்கள் எக்காலத்திலும் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வேலை இழந்து வருகிறவர்களுக்கு மேலைத்தேய நாடுகளில் சபைகள் உதவ ஆரம் பித்திருக்கின்றன. கிறிஸ்தவ அன்பை இந்த விதத்தில் காட்ட வேண்டும் என்றே கிறிஸ்து எதிர்பார்க்கிறார்.

ஆறாவதாக, இயேசு கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய நித்திய வாழ்க்கையைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு இக்காலங்களில் தீவிரமாக சொல்ல வேண்டும். பெருந்துன்ப காலங்களில் கர்த்தரை அறியாதவர்கள் நிலை தடுமாறி என்ன செய்வதென்று தவிப்பார்கள். அவர்களுக்கு மன நிம்மதி இருக்காது. கர்த்தரை விசுவாசிக்கும் நாம் அவரை நம்பி வாழ்வதால் ஆசீர்வாதமான வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கர்த்தரை அறியாதிருப்ப வர்களுக்கு இக்காலங்களில் நம்மால் மட்டுமே சமாதானத்திற்கான வழியைக் காட்ட முடியும். அதற்கு அவசியமான சுவிசேஷம் நம்மிடமே இருக்கிறது. வரப்போகும் காலங்களில் கஷ்டப்படப் போகிறவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி கர்த்தரை அவர்கள் நாடச்செய்யும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. “சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே” என்று ரோமர் 10ல் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் வழியில் வாழ்கிறவர்களால் மட்டுமே எத்துன்பங்களை யும் வாழ்க்கையில் தாங்கி சமாதானத்துடன் வாழ முடியும்.

 

கல்வின் பிறந்த 500வது நினைவு வருடம்

ஜெனீவாவின் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் பிறப்பின் 500வது நினைவு வருடமாக இந்த வருடத்தை உலகம் நினைவு கூரும். சீர்திருத்த போதனைகளை நேசித்துப் பின்பற்றுகிறவர்கள் இதை ஒரு பாரம்பரிய மாகக் கருதாமல் மகத்தான ஒரு பிரசங்கியை, போதகரை, இறையியலறிஞரை, இலக்கியவாதியை, சீர்திருத்தவாதியை எழுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி கூறுமுகமாகவும், வரலாற்றையும் அது நம்மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நினைவு கூருவார்கள். கல்வினைப் போல நம் காலத்தில் சத்தியத்திற்காகவும், சபை சீர்திருத்தத்திற்காகவும் செய்ய வேண்டிய தியாகங் களை நாம் உணர்ந்து அதற்காக முன்னின்று பாடுபட முன்வரு மோமானால் அதுவே கர்த்தருக்கு மகிமை தரும்.


புரட்சிகரமான புதிய உடன்படிக்கை

இரண்டாம் பகுதி

கடந்த இதழில் ஆரம்பித்த இந்த ஆக்கத்தில் எபிரெயர் 8:8-12 (எரேமியா 31:31-34) ஆகிய வசனங்களின் போதனையின்படி புதிய உடன்படிக்கை எந்த விதத்தில் புரட்சிகரமானது பழைய உடன் படிக்கையைவிட சிறப்பானது என்று விளக்கியிருந்தேன். இனி இந்தப் போதனை எந்தவிதத்தில் வேதத்தின் ஏனைய இறையியல் சத்தியங் களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ளுவது அவசியம். வேதத்தின் எந்தவொரு போதனையும் அது தரும் ஏனைய போதனைகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வேத சத்தியங்களை தனித்தனியாகப் பிரித்துப் படிப்பது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு அந்த சத்தியங்கள் அனைத்தையும் ஒரு சேரப் பார்ப்பதும், தொடர்பு படுத்திப் படிப்பதும் அவசியம். இதுவரை நாம் பார்த்துள்ள புதிய உடன் படிக்கை பற்றிய போதனை மறுபிறப்பு பற்றிய சத்தியத்தை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதையும், புதிய உடன்படிக்கை பற்றிய போதனையின்படி மறுபிறப்பு பற்றி வேதம் போதிக்கும் சத்தியத்தை எவ்விதம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் இனிப் பார்ப்போம்.

1. புதிய உடன்படிக்கையும், மறுபிறப்பும்

இஸ்ரவேல், யூதா ஆகிய பதங்கள் - ஏற்கனவே எபிரெயர் எட்டாம் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘இஸ்ரவேலர்’, ‘யூதா’ ஆகிய வார்த்தைகள் எழுத்துபூர்வமாக இஸ்ரவேலருக்காகவும், யூதாவுக்காகவும் மட்டும் பயன்படுத்தப்படாமல் கர்த்தருடைய மக்களனைவரையும் குறிக்கின்ற வார்த்தைகளாக இருக்கின்றன என்பதை நாம் உணர்வது அவசியம் இந்தப் பகுதி தரும் போதனை வேதத்தின் ஏனைய இறையியல் போதனைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நல்ல முறையில் விளங்கிக்கொள்ள இது அவசியம்.

மறுபிறப்பு (Regeneration) என்பது ஒருவருடைய ஆவிக்குரிய பிறப்பை விளக்கும் இறையியல் வார்த்தை. இதைப் பற்றி இயேசு யோவான் 3:3ல் நிக்கொதேமுவுக்கு விளக்கியிருக்கிறார். அந்த வேதப்பகுதி, மறுபிறப்பு பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் மனிதனில் ஏற்படுவதாக விளக்குகிறது. இந்த ஆவியின் கிரியை மனிதனின் உள் மனதில் ஆவியின் இரகசியமான வெளிப்படையாக உடனடியாக அறிந்துகொள்ள முடியாதபடி) கிரியையினால் நிகழ்கிறது. இதை நாம் லூக்கா 15:17 மூலமும் அறிந்துகொள்ளுகிறோம். கெட்ட குமாரனில் அது நிகழ்ந்தபோது அது நிகழ்ந்த விதத்தை அந்தப் பகுதி விளக்கவில்லை. அது அவனில் நிகழ்ந்ததாக மட்டுமே விளக்குகிறது. அது அவனுடைய உள் மனதில், இருதய ஆழத்தில் நிகழ்ந்ததனால்தான் அவன் இதுவரை இல்லாத வகையில் சிந்திக்க ஆரம்பித்தான். இதையே நாம் சிலுவையில் இயேசுவுக்குப் பக்கத்தில் இருந்த கள்வனிலும் பார்க்கிறோம். அவன் சிலுவையை சுமந்து வந்தபோதும், சிலுவையில் அறையப்பட்ட போதும் மனந்திரும்பாதவனாக, அதற்குரிய எந்த அறிகுறியும் தன்னில் இல்லாதவனாக இருந்தான். ஆனால், சிலுவை யில் அறையப்பட்ட நிலையில் இருந்தபோது அவனில் ஆவியானவர் கிரியை செய்து மறுபிறப்பை அவனுக்குக் கொடுத்தார்.

இதை அடைந்த மனிதனில் அது ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அனைத் தும் ஒட்டுமொத்தமாக அந்நேரமே வெளிப்பட்டு விடாது. அது நிகழ்ந்து விட்டது என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக மறுபிறப்படைந்தவன் நடந்து கொள்வான். அம்மனிதனின் சிந்தனையும், பேச்சும் மாறியிருக்கும், செயல்களிலும் மாற்றங்கள் தெரியும். ஆவி தரும் மறுபிறப்பு பூரணமான தாக, ஒரே சமயத்தில் நிகழ்ந்தாலும் அதன் வெளிப்பாட்டை, அதாவது மனமாற்றத்தை (Conversion) மனிதனில் சிறிது சிறிதாகவே பார்க்கலாம். இதைத்தான் இயேசு யோவான் 3ல் விளக்குகிறார்.

மறுபிறப்பு மனிதன் தானாகவே தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளுகிற கிருபை அல்ல. மனிதனின் எந்தக் கிரியையும் அதனை அவனுக்குப் பெற்றுத் தராது (எபேசி. 2:8-10). மனிதனுக்கு அப்பாலிருந்து கர்த்தர் அவனில் நடத்தும் கிரியையே மறுபிறப்பு. நிக்கொதேமு இஸ்ரவேலின் ஆசிரியனாக இருந்தபோதும், அவன் பழைய ஏற்பாட்டில் பாண்டித்தியம் பெற்றிருந்தபோதும், பழைய ஏற்பாட்டு சடங்குகளை முறையாக செய்து வந்திருந்தபோதும், ஆலய வழிபாடுகளில் தவறாமல் ஈடுபட்டு தன்னைக் கர்த்தரின் பிள்ளையாகக் கருதி வந்திருந்தபோதும், சமுதாயமும் அந்த நிலைமையிலேயே அவனைப் பார்த்து வந்திருந்தபோதும் அவன் கர்த்தரை விட்டு வெகுதூரம் விலகி மறுபிறப்பை வாழ்க்கையில் அடையாமல் பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்திருக்கிறான் என்பதை இயேசு அவனுக்கு விளக்கி, மறுபிறப்பு எப்படி ஏற்படுகின்றது என்பதையும் விளக்கினார்.

நிக்கொதேமுவிடம் இருந்து மறுபிறப்பு பற்றி நாம் அறிந்துகொள்ளும் இன்னொரு விஷயம், அது கர்த்தரால் மனிதனில் நிகழ்வது என்பது மட்டுமல்ல, அது பற்றிய செய்தியையும், அதன் அர்த்தத்தையும் கூட கர்த்தரின் கிரியையால் மட்டுமே மனிதன் உணர முடியும் என்பதுதான். இயேசு சொன்னதொன்றும் அன்று நிக்கொதேமுவுக்கு புரியவில்லை. பழைய ஏற்பாட்டில் பாண்டித்தியம் அடைந்தவனாக இருந்தபோதும் பள்ளிச் சிறுவன் போல அவன் இயேசு முன் நின்றான். அதற்குக் காரணம் மறுபிறப்பு பற்றிய விளக்கத்தை ஆவியானவர் மட்டுமே மனிதனைப் புரிந்துகொள்ள செய்ய முடியும் என்பதுதான்.

மறுபிறப்பும், வார்த்தையும் மறுபிறப்பைப் பெற்றுக்கொள்ள ஒரு மனிதன் முதலில் தேவ செய்தியைக் கேட்க வேண்டும் (ரோமர் 10). தேவ செய்தி, அதாவது சுவிசேஷம் இதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவ செய்தியே மறுபிறப்பு மனிதனில் நிகழ்வதற்கு ஆவியானவர் பயன்படுத்துகிற ஒரு கிருபையின் சாதனம். தேவ செய்தியைக் கேள்விப்படாமல், அதன் கீழ் வராமல் ஒருவன் மறுபிறப்படைய முடியுமா? என்ற கேள்வியை சிந்தித்துப் பார்ப்போம். ஏனெனில், இன்றைக்கு அந்த விதத்தில் சுவிசேஷ ஊழியங்கள் நடந்து வருகின்றன. அத்தோடு சில பிரெஸ்பிடீரியன்கள் தேவ செய்தியை கேட்டு அறிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளில் வார்த்தை யின் துணையின்றி மறுபிறப்பு நிகழும் என்று கருதுகின்றனர். உதாரணத் துக்கு லூயிஸ் பேர்கொவ்வை குறிப்பிடலாம் (Louis 11401). இதனால் தான் அவர்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானத்தை அளிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு கெரிஸ்மெட்டிக் இயக்கம் தேவ செய்தியை அறிவிக்காமல் சரீர சுகமடைவதற்கான ஜெபங்களை மட்டும் செய்துவிட்டு அவர்களுடைய ஜெபங்களுக்கும், கிரியைகளுக்கும் உடன் போகிறவர்களை இரட்சிப்படைந்தவர்களாக அறிவிப்பது சகஜமாக நிகழ்ந்து வருகின்றது. வேறு பல இடங்களில் வெறும் சுவிசேஷத் துண்டுப் பிரதிகளைக் கையில் பெற்றுக் கொண்டு ஜெபம் கேட்கிறவர்களும் கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் (நூறு கிராம ஊழியம்) இந்த வகையிலான கிரியைகளைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?

முதலில் இது பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய வேண்டும். ரோமர் பத்தாம் அதிகாரத்தில் பவுல் இதுபற்றி சொல்லி யிருப்பது மிகவும் அதிகாரமுள்ளதாகவும், தெள்ளத் தெளிவான விளக்கத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. அதில் தேவ செய்தியைக் கேட்காமல் ஒருவன் விசுவாசத்தை எப்படி அடைய முடியும் என்று பவுல் ஆணித்தரமாகக் கூறி அதை அருமையாக விளக்குகிறார். இது வேதம் நமக்கு மறுபிறப்பு அடையும் விதத்தைப் பற்றிப் போதிக்கின்ற ஒரு தெளிவான வேதப்பகுதி.

இருந்தபோதும் இதைப் பற்றி அறிந்துகொள்ள முழு வேதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் மேலும் பல ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றன: L பழைய ஏற்பாட்டில் ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த பிறகு அவர்கள் மீண்டும் கர்த்தரை நெருங்கி வர பாவத்தில் இருந்து விடுபட்டு இரட் சிப்பை அடைய) அவர்களிடம் கர்த்தர் பேசினார். கர்த்தர் நேரடியாக அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். கர்த்தர் பேசாமல் அவர்கள் பாவ நிவாரணத்தையும், மறுபிறப்பையும் அடைந்திருக்க முடியாது. ஆதாமின் மூலம் தேவ செய்தியைக் கேட்காமல் ஆபேல் மறுபிறப்படைந் திருக்க முடியாது. அதற்குப் பிறகு கர்த்தர் நோவாவின் மூலமாக சுவிசேஷத்தை அறிவித்தார். தானே தொடர்ந்தும் நேரடியாகப் பேசினார். பத்துக் கட்டளைகளை அளித்தார் (அது சுவிசேஷ செய்தி). நியாயப் பிரமாணமும் கர்த்தரை அறிவிக்கும் சுவிசேஷ செய்தியாக இஸ்ரவேல் மத்தியில் பயன்பட்டது. கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசினார். இதையெல்லாம் பார்க்கிறபோது பொதுவாகவே மறுபிறப்பை பழைய ஏற்பாட்டில் எவரும் அடைவதற்கு அதுபற்றிய தேவ செய்தி முதலில் பலவிதங்களில் பிரசங்கிக்கப்பட்டிருப்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. தேவ செய்தியைக் கேட்காமல் மறுபிறப்பு கிடைக்க வழி இருக்கு மானால் இந்தளவுக்கு கர்த்தர் தன்னுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். சங்கீதம் 19, 119 போன்றவை வார்த்தையின் அவசியத்தை மட்டும் விளக்காமல், வார்த்தை மூலம் தேவனை அறிந்துகொள்வதைப் பற்றியும் உறுதியாக விளக்குகின்றன. தாவீது தான் வார்த்தையின் மூலம் தேவனை அறிந்து கொண்டதாக பல இடங்களில் விளக்கமளிக்கிறான். சங்கீதம் 107:20; 119:9; 119:41; யோனா 3:6 கர்த்தர் நினவே மக்களுடைய மனந்திரும்புதலுக்காக அவர்களுக்கு யோனா மூலம் வார்த்தையை அனுப்பினார்).

  1. புதிய ஏற்பாட்டில், யோவான் ஸ்நானன் மனந்திரும்புங்கள் என்று கூறி சுவிசேஷப் பிரசங்கத்தோடு யூதர்களிடம் அனுப்பப்பட்டதைப் பார்க் கிறோம். இதிலிருந்து சுவிசேஷப் பிரசங்கம் கிருபையின் சாதனமாக ஆவி யால் மனிதன் மனந்திரும்பப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்து, மனந்திரும்பி, இரட்சிப்படையுங்கள் என்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததைப் பார்க்கிறோம். அவர் சகல இடங் களுக்கும் சென்று பிரசங்கித்தார் என்கிறது வேதம்.

அவரால் தயார் செய்யப்பட்ட அப்போஸ்தலர்கள் எங்கும் போய் ஆத்து மாக்கள் மனந்திரும்பும்படி சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் ரோமர் 1:16; 10:14; 1 கொரி. 1:21; யாக். 1:18).. பேதுருவின் முதல் பிரசங்கத்தைக் கேட்டு மூவாயிரம் பேர் மறுபிறப்படைந்தார்கள். பிரசங்கத்தின் மூலமே முதல் சபை ஸ்தாபிக்கப்பட்டது. சபை விஸ்தரிப்புக்கும் பிரசங்கமே பயன்பட்டது.

ஆகவே, வார்த்தைப் பிரசங்கத்தின் மூலமே கர்த்தர் மனிதனின் மனந்திரும்புதலுக்கு வழியேற்படுத்தி வைத்திருப்பதை அறிந்துகொள்ளு கிறோம். கர்த்தர் எந்த விதத்தைப் பயன்படுத்தியும் மனிதனுக்கு இரட்சிப்பை அளித்திருக்க முடியுமானாலும், அவர் ஆவியானவரின் மூலமாக மனிதன் அடையும் மனந்திரும்புதலுக்கு வார்த்தையையே பயன்படுத்தியிருக்கிறார் என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.

இதிலிருந்து நாம் படிக்கும் பாடம் என்ன?

  1. வார்த்தைப் பிரசங்கத்தைக் கேட்காமலும், வார்த்தையின் கீழ் வராமலும் மனிதன் மனந்திரும்புவதற்கு வழியில்லை. வார்த்தையே மனிதனுக்கு அவனுடைய பாவத்தைக் குறித்தும், அதிலிருந்து விடுபடுவதற்கு கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் வழிமுறையையும் விளக்குகிறது. வார்த்தை மட்டுமே சிலுவை மகத்துவத்தை விளக்குகிறது; இயேசுவின் இரத்தப் பலிபற்றி விளக்குகிறது. அதை மனிதன் கேட்காமலும், சிந்திக்காமலும் மனந்திரும்ப முடியாது. காதால் அவன் வார்த்தையைக் கேட்டு சிந்திக்க வேண்டும். தன் பாவத்தையும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். பரிசுத்த ஆவியானவர் மனிதனில் மனந்திரும்புதலைக் கொண்டுவர வார்த்தையையே பயன்படுத்துகிறார்.
  2. வார்த்தை இல்லாமல் குழந்தைகளின் இருதயத்தில் மறுபிறப்பு நிகழும் என்ற இறையியலறிஞர் பேர்கொவின் போதனை தவறு. கர்த்தர் குழந்தைகளுக்கு ஒரு விதத்திலும், பெரியவர்களுக்கு இன்னொரு விதத் திலும் மறுபிறப்பை அளிப்பதில்லை. எல்லோருமே வார்த்தையைக் கேட்டு ஆவியானவரின் கிரியையின் மூலம் மனந்திரும்ப வேண்டும்.
  3. ‘இமர்ஜிங் சபை இயக்கம்’ இன்று மக்களுக்குப் புரியும் விதத்தில், மக்கள் பேசும் விதத்தில் வார்த்தை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வார்த்தையை சிதைத்து அதன் வல்லமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது வார்த்தை மூலம் கர்த்தர் தந்திருக்கும் சத்தியத்தை சிதைத்து சுவிசேஷத்தையும் பாதிக்கும். ஆவியானவர் மறுபிறப்பை அளிப்பதற்கு கிருபையின் சாதனமாகப் பயன்படுத்தும் வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதோடு விளையாடுவது எந்த விதத்தில் சுவிசேஷ ஊழியத்தை வளர்க்கப் போகிறது? ?
  4. புதிய உடன்படிக்கையின் போதனையின்படி இறையாண்மையுடன் கர்த்தரே ஆத்துமாக்களின் இருதயங்களை உயிர்ப்பித்து அதில் தன் கட்டளைகளை எழுதி மறுபிறப்பு கொடுக்கிறார். இதை எரேமியா 31:33, 34 தெளிவாக விளக்குகிறது. இந்தப் போதனை ஆர்மீனியனிசப் போதனையை முற்றாக மறுதலிக்கிறது. புதிய உடன்படிக்கையின் போதனைப்படி மனிதன் ஆத்மீக வல்லமையின்றி கர்த்தரிடம் இருந்து மட்டுமே மறுபிறப்பைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறான். ஆர்மீனியனிசம் பின்வருமாறு போதிக்கிறது:

(1) இயேசுவை விசுவாசித்து தன் கட்டளைகளைப் பின்பற்றப் போகிறவர்களை ஏற்கனவே அறிந்திருந்து கர்த்தர் தெரிந்தெடுத்திருக்கிறார். (2) கிறிஸ்து ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரித்திருந்தாலும் அதை விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே அவருடைய மரணத்தின் பலாபலன்களை அடைவார்கள்.

(3) மனிதன் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்காக கர்த்தர் அவனுடைய இருதயத்தில் தன்னுடைய கிருபையால் கிரியை செய்ய வேண்டும். (4) இந்தக் கிருபை மனிதனுக்கு சகல நன்மையையும் அளிக்குமானாலும், அவன் இதனை நிராகரித்து அதன் மூலம் இரட்சிப்பை அடையாமல் போய்விடலாம்.

(5) மனிதன் இறுதிவரை விடாமுயற்சியோடு இருப்பதற்கு கர்த்தர் சகலத்தையும் அவனுக்கு அளிக்கின்றபோதும், மனிதன் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பை அடைந்த பிறகு இறுதிவரை விடாமுயற்சி யோடிருந்து நித்திய இரட்சிப்பை அடைவான் என்பது நிச்சயமில்லை. கல்வினிசப் போதனை (1) மனிதன் பூரணமாக பாவியாக இருக்கிறான் - கர்த்தரின் உடன் படிக்கையைப் பெற்றிருந்தும் இஸ்ரவேலரால் ஏன் கர்த்தரை விசுவாசிக்க முடியவில்லை? அதற்கு அவர்கள் பூரணமான பாவிகளாக இருந்ததுதான் காரணம். அந்தப் பாவம் அடிக்கடி உடன்படிக்கையை அவர்கள் மீற வைத்தது. (ரோமர் 3:10-12).

(2) நிபந்தனையற்ற தெரிந்தெடுத்தல் - கர்த்தர் இஸ்ரவேலை அவர்களில் காணப்பட்ட எந்தத் தகுதியின் காரணமாகவும் தெரிந்தெடுக்கவில்லை. அவர் தன்னுடைய அநாதித் தீர்மானத்தின் காரணமாகவும், தன்னுடைய மாறாத திட்டங்களின் காரணமாகவும் தெரிந்தெடுத்தார். ஆர்மீனியனிசம், கர்த்தர் எந்தெந்த மனிதன் தன்னை விசுவாசிப்பான் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தே அவர்களைத் தெரிந்தெடுத்தார் என்றும் அவர்களே இயேசுவை விசுவாசிக்கிறார்கள் என்றும் விளக்கி தெரிந்தெடுத்தலாகிய போதனையைக் கொச்சைப்படுத்துகிறது. அப்போஸ் 13:48; ரோமர் 9:14-18; எபேசி. 1:4; 2 தீமோ. 1:9.

(3) குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலி - கிருபையின் போதனைகளில் ஆர்மீனியனிசம் மிகவும் கடுமையாக நிராகரிக்கின்ற போதனை குறிப்பிட்ட வர்களுக்கான பரிகாரப்பலியாகும். ஆர்மீனியனிசம், கிறிஸ்து எந்தவித பாரபட்டசமுமின்றி சகல மனித குலத்திற்காகவும் மரித்தார் என்று விளக்குகிறது. இது புதிய உடன்படிக்கைப் போதனைக்கு எதிர்மாறானது. புதிய உடன்படிக்கை குறிப்பிட்ட மனிதர்களுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதையே போதிக்கிறது. கிறிஸ்துவின் பரிகாரப்பலியோடு பிரிக்க முடியாதபடி தொடர்புடையது புதிய உடன்படிக்கை. கர்த்தர் புதிய உடன் படிக்கையை ஏற்படுத்தித் தந்தபோது கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் அடிப் படையிலேயே அதைச் செய்தார். புதிய உடன்படிக்கை மூலமாக மட்டும் தான் இரட்சிப்பு எவருக்கும் கிடைக்கிறது; அதை மீறிய வேறு உடன் படிக்கையை வேதத்தில் நாம் வாசிப்பதில்லை. இரட்சிப்பு கிடைப்பதற்கு வேறு உடன்படிக்கைகளை கர்த்தர் ஏற்படுத்தவுமில்லை. ஒரு மனிதன் இரட்சிப்பை அடைய வேண்டுமானால் அதைப் புதிய உடன்படிக்கை மூலம் மட்டுமே அடைய முடியும். பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் பொறுத்தவரையிலும் இதன் அடிப்படையில்தான் அவர்கள் இரட்சிப்பை அடைந்தார்கள். (எபிரெ. 9:15; 10:1, 4). கிறிஸ்துவே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (எபிரெ. 8:6). ஆர்மீனியனிசப் போதனையின்படி கிறிஸ்து ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கான வழியை ஏற்படுத்தித் தந்திருக்கிறாரே தவிர அதை அவன் நிச்சயமாக அடைய வழி செய்ய வில்லை. (The teaching of Arminianism is that Christ made salvation possible but not certain). எபிரெ. 7:22 - சொல்லுகிறது, அவர் ‘விசேஷித்த உடன்படிக்கைக்கு பிணையாளியாக்கினார்’ என்கிறது. அதாவது அவர் புதிய உடன்படிக்கை மூலம் இரட்சிப்பை உறுதியாக்கினார். இரட்சிப்பு கிடைக்க அவர் வழி செய்யவில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய இரட்சிப்பை புதிய உடன்படிக்கை மூலம் நிச்சயமானதாக்கினார்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலி புதிய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று பார்த்தோம். அவருடைய இரத்தப் பலியின் பலாபலன்கள் புதிய உடன்படிக்கையின் சொந்தக்காரர்கள் அனைவரையும் இரட்சிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அத்தகைய வலிமையை அது கொண்டிருந்தது. அதற்காகத் தான் அது ஏற்படுத்தப் பட்டது. புதிய உடன்படிக்கையை கர்த்தர் ஏற்படுத்தியபோது இயேசுவின் பரிகாரப்பலியை மனதில் வைத்தே அதை ஏற்படுத்தினார். புதிய உடன் படிக்கையில் இருந்து கிறிஸ்துவின் பரிகாரப்பலியைப் பிரிக்க முடியாது. கர்த்தரின் புதிய உடன்படிக்கை குறிப்பிட்டவர்களுக்கானது. யாருக்கு அது சொந்தம்? கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு. கிறிஸ்து எவர்களுக்காக மரித்தாரோ அவர்களுக்கு சொந்தமானது. கிறிஸ்துவின் கரத்தில் எத்தனைப் பேரைக் கர்த்தர் கொடுத்தாரோ அத்தனைப் பேருக்கும் சொந்தமானது. இதை ஆர்மீனியனிசம் விளங்கிக்கொள்ளத் தவறி மனிதனுடைய இரட்சிப்புக்கு அவனைத் தகுதியுள்ளவனாக்குகிறது மட்டுமல்லாமல், இரட்சிப்பைக் கொச்சைப்படுத்தி அதை நிச்சயமற்ற தொன்றாக விளக்குகிறது.

(4) திட்ப உறுதியான (நிராகரிக்க முடியாத) கிருபை - எந்த மக்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் பரிகாரப்பலியாக மரித்து இரட்சிப்பை நிறைவேற்ற வந்தாரோ அந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் அந்த இரட்சிப்பை அடையத் துணை செய்யும் கிருபைக்குப் பெயரே திட்ப உறுதியான அழைப்பு (Effectual call). சுவிசேஷத்தின் மூலம் கர்த்தர் உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள வழியேற்படுத்தித் தந்திருந்தாலும், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப் படும்படியாக அவர்களை ஆவியானவரின் திட்ப உறுதியான அழைப்பின் மூலம் அழைக்கிறார். இந்த அழைப்பு மனிதனால் நிராகரிக்க முடியாத அழைப்பாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக இயேசு லாசருவுக்கு விடுத்த அழைப்பை உதாரணமாகக் காட்டலாம். இயேசுவின் அழைப்பில் வல்லமையான அதிகாரம்; ஜீவனை அளிக்கும் வல்லமை இருந்தது. இந்த அழைப்பைப் பெறும் ஆத்துமா முழுச் சுதந்திரமாக, முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை நேசித்து கர்த்தரிடம் ஓடி வரும். இதை ஆத்துமாவில் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர்.

(5) பரிசுத்தவான்களின் விடாமுயற்சி - கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு, திட்ப உறுதியாக ஆவியானவரால் அழைக்கப்படுகிறவர்கள் நிச்சயம் இரட்சிப்பை அடைந்து அதற்குரிய கிரியைகளைத் தங்களுடைய வாழ்க்கையில் இறுதிவரை செய்கிறவர்களாக இருப்பார்கள். இரட்சிப்பை அவர்கள் இழந்து போகலாம் என்பது ஆர்மீனியனிசப் போதனை. அது கர்த்தரின் கிரியையை அவமதிக்கும் போதனை. கல்வினிசப் போதனையோ வல்லமையுள்ள கர்த்தர் தன்னுடைய மக்கள் தனக்காக வாழ்ந்து பரலோகம் போகிறவரை அவர்களைப் பாதுகாக்கிறவராக இருக்கிறார் என்பதையும், அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள் அந்த இரட்சிப்பு நிச்சய மானதாகவும், உறுதியானதாகவும் இருப்பதால் கர்த்தரின் துணையோடும், ஆவியானவரின் அனுக்கிரகத்தாலும், தங்களுடைய விசுவாசத்துக்குரிய கிரியைகளை வாழ்க்கையில் விடா முயற்சியோடு செய்து கடைசிவரை கர்த்தரை விசுவாசித்து பரலோகம் சேர்வார்கள் என்கிறது.

2. புதிய உடன்படிக்கையும், ஞானஸ்நானமும்

புதிய உடன்படிக்கை யாருக்கு உரியது? பழைய ஏற்பாட்டை நாம் படித்தபோது பழைய உடன்படிக்கையை இஸ்ரவேலர் பெற்றுக் கொண் டிருந்த போதும், அதன் ஆசீர்வாதங்களை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்பதை அறிந்துகொண்டோம். அவர்கள் விருத்த சேதனத்தை செய்து கொண்டிருந்தபோதும், நியாயமாக இஸ்ரவேலராக கர்த்தருடைய நாட்டு மக்களாக இருந்தபோதும் அவர்களில் சிறிய தொகை யினரைத் தவிர பெரும்பாலானோருக்கு இரட்சிப்பின் அனுபவம் கிடைக்க வில்லை. பழைய உடன்படிக்கையை அவர்கள் இருதயத்தில் பெற்றிருக்க வில்லை. பழைய உடன்படிக்கையை அவர்களால் உடைக்க முடிந்தது. அதை மீற முடிந்தது. விருத்தசேதனமும் அவர்களை இஸ்ரவேலராக காட்டியதே தவிர அவர்களுடைய ஆத்மீகத்தின் அறிகுறியாக இருக்கவில்லை.

ஆனால், புதிய உடன்படிக்கை அப்படிப்பட்டதல்ல. பிரெஸ்பிடீரியன் (இந்தியாவில் 4. எஸ். ஐ, மெத்தடிஸ்ட், லூதரன், பிரெஸ்பிடீரியன் போன்ற) சபைப் பிரிவினர் பழைய உடன்படிக்கையின் அடிப்படையில் பழைய உடன்படிக்கைக்கு உரித்தானவர்களாக இருந்த இஸ்ரவேலரின் ஆண் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் கொடுத்ததன் அடிப்படையில் புதிய உடன்படிக்கையின் திருச்சபையில் விசுவாசிகளின் குழந்தைகள் அனைவருக்கும் பிறந்தவுடன் புதிய உடன்படிக்கையின் ஞானஸ் நானத்தைக் கொடுத்து புதிய உடன்படிக்கையின் பலன்களுக்கு உரியவர் களாக அறிவிக்கின்றனர். இந்த அடிப்படையில் அந்தக் குழந்தைகளை இரட்சிப்பு பெற்றுக்கொண்டவர்களாகவும், சபை அங்கத்தவர்களாகவும், திருவிருந்து பெறத் தகுதியுள்ளவர்களாகவும் நடத்துகின்ற பிரெஸ்பிடீரியன் சபைப்பிரிவினரும் இருக்கிறார்கள். பழைய உடன்படிக்கையும், புதிய உடன் படிக்கையும் ஒன்றே; ஆதலால், புதிய உடன்படிக்கையிலும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சபையில் இணைக்க வேண்டும் என்பது அவர்களுடைய போதனை. அத்தோடு -ஞானஸ்நானத்தை விருத்தசேதனத் தோடு அவர்கள் தொடர்புபடுத்துகிறார்கள்.

இது சரியா?

(1) இந்த முறை முதலில் பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் இடையில் இருக்கும் புரட்சிகரமான வேறுபாட்டை உணரத்தவறுகிறது. இது பற்றி நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். சீர்திருத்த பாப்திஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றும் நாம் பழைய உடன் படிக்கையை உதறிவிடவில்லை. அது பழைய ஏற்பாட்டில் எந்த வகையில் பயன்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்து புதிய உடன் படிக்கையை எந்த வகையில் கர்த்தர் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை எரேமியாவிலும், எபிரெயரிலும் கொடுக்கப்பட்டிருக்கும் போதனையின்படி புரிந்துகொண்டு புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருந்த போதும் புரட்சிகரமானது, பழைய உடன்படிக்கையைப் போல மீற முடியாதது, உடைக்க முடியாதது என்கிறோம். அத்தோடு பழைய உடன்படிக்கை இஸ்ரவேலர் அனை வருக்கும் கொடுக்கப்பட்டதுபோல் புதிய உடன்படிக்கை அவிசுவாசிகள் அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை என்கிறோம். அது விசுவாசிகளுக்கு மட்டுமே சொந்தமானது. இத்தகைய தெளிவான போதனைகளின் அடிப் படையில் பழைய உடன்படிக்கையை காரணம் காட்டி புதிய உடன் படிக்கை காலத்தில் விசுவாசிகளின் குழந்தைகளுக்கு அவர்களுக்கு விசுவாசம் கிடைப்பதற்கு முன்பாக ஞானஸ்நானம் கொடுத்து சபையில் இணைப்பது பெருந்தவறு என்கிறோம்.

(2) புதிய உடன்படிக்கை எந்த வகையில் பழைய உடன்படிக்கையை விட மேலானது, சிறப்பானது? புதிய உடன்படிக்கையின் சொந்தக்காரர்கள் எல்லோரும் கர்த்தரை அறிந்திருப்பார்கள், அதாவது விசுவாசத்தை அடைந்து அவரை ஆராதிப்பவர்களாக இருப்பார்கள். இதைத்தான் எரேமியா 31ம், எபிரெயர் 8ம் சுட்டிக் காட்டுகின்றன. அத்தோடு அவர் களுடைய இருதயங்களில் நிரந்தரமாக பத்துக் கட்டளைகள் எழுதப்பட் டிருக்கும். இந்த உண்மைகள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் விசுவாசிகளின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிப் பொருந்தும்? ஒருக்காலும் பொருந்தாது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள ஒருவர் இறையியல் அறிஞராகவோ அல்லது ஞானியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரிக்குப் போகாதவர்கள் கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். பிரெஸ்பிடீரியன் இறையியல் அறிஞர்களை நாம் மதிக்காமல் போவதில்லை. வேறு விஷயங்களில் அவர்கள் தந்திருக்கின்ற போதனை களை நாம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால், இந்த விஷயத் தில் அவர்களுடைய போக்கும், விளக்கமும் புதிய உடன்படிக்கையின் தெளிவான, நிராகரிக்க முடியாத போதனைகளை சிதைத்து விடுகிறது. அத்தோடு புதிய ஏற்பாட்டு திருச்சபையை கோமாளித்தனமாக்கி விடுகின் றது. ரோமன் கத்தோலிக்க முறைகளை நினைவுபடுத்துகின்றது. இந்த விஷயத்தில் பிரெஸ்பிடீரியன்களின் போதனைகளில் இருந்து நாம் முற்றும் வேறுபடுகிறோம். நம்முடைய திருச்சபைப் போதனைகள் பிரெஸ்பிடீரியன் அமைப்பு முறையைவிட வேறுபட்டு அமைந்திருக்கின்றது.

(3) பழைய உடன்படிக்கையின்படி இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் அளிக்க வேண்டும். அதன் மூலம் அந்தக் குழந்தை இஸ்ரவேலின் குடிமகனாகவும், பழைய உடன்படிக்கைக்கு சொந்தக்காரராகவும் மாறுகிறது. வெளிப்புறமாக இதெல்லாம் அந்தக் குழந்தைக்கு நிகழ்ந்தாலும் உட்புறமாக குழந்தையின் இருதயம் எந்த மாற்றத்தையும் அடையாமலும் தனக்கு நிகழ்வதை அறியாம லும் இருக்கும். வெளிப்புறம் தெரியாமல் இந்தக் காரியங்கள் மூலம் அந்தக் குழந்தைக்குள் எந்தவித கிருபையின் மாற்றமும் நிகழ்வதில்லை. உதாரண மாக சாமுவேலையும் ஏலியின் குமாரர்களையும் பார்ப்போம் (1 சாமுவேல் 2:12). எலியின் குமாரர்கள் கர்த்தரை அறியவில்லை. சாமுவேலைப் பற்றி 1 சாமு. 3:7ல் வாசிக்கிறோம். அதன் மூலம் ஒரு காலத்தில் சாமுவேல் கர்த்தரை அறியாமல் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு கர்த்தரை அறிந்து கொண்டிருந்திருக்கிறார். இந்த விதத்திலேயே ஆபேலையும், காயினையும், தாவீதையும், சவுலையும், யோனத்தனையும், அப்னேரையும் போல் இரு வகைக் கூட்டத்தாரை நாம் தொடர்ந்து பழைய ஏற்பாட்டில் வாசிக் கிறோம். இரு வகையினரும் விருத்தசேதனம் பெற்று பழைய உடன்படிக்கை க்கு உரித்தானவர்களாக இருந்தபோதும் ஒரு வகையினரே விசுவாசிகளாக கர்த்தரை அறிந்திருந்தனர்.

இந்த வேறுபாட்டை புதிய உடன்படிக்கை காலத்தில் புதிய உடன் படிக்கைக்கு சொந்தக்காரர்கள் மத்தியில் பார்க்க முடியாது. அதனால்தான் எரேமியா 31ம், எபிரெயர் 8ம், “அவர்கள் எல்லோரும் என்னை அறிவார்கள்” என்று விளக்குகின்றன. அதாவது புதிய உடன்படிக்கைக்கு சொந்தக்காரர்கள் அனைவரும் விசுவாசிகளாக இருப்பார்கள். மத்தேயு யோவான் 1:12, 13; பிலிப். 3:3; ரோமர் 8:14; 9:3-5.

புதிய உடன்படிக்கையில் ஞானஸ்நானம் இரட்சிப்பை ஒருவர் பெற்றிருப் பதை அறிவிக்கும் கிருபையின் சாதனமாக மட்டுமல்லாமல், திருச்சபையில் அங்கத்துவம் பெறுவதன் அடையாளமாகவும் இருக்கிறது. புதிய உடன் படிக்கையின் அங்கத்துவத்தின் அடையாளமாக அது இருக்கிறது. அதனால் இரட்சிப்பை ஒருவன் தன் வாழ்க்கையில் நிச்சயமாகப் பெற்றிருந்தால் மட்டுமே புதிய உடன்படிக்கையின் அங்கத்துவத்தின் அடையாளமான- ஞானஸ்நானத்தை ஒருவர் பெற முடியும். அதுவே புதிய ஏற்பாடு தருகின்ற தெளிவான போதனை.

பிரெஸ்பிடீரியன் போதனையாளர் விசுவாசிகளின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிப்பது புதிய ஏற்பாட்டு போதனைகளுக்கெல்லாம் முரணாக இருக்கிறது. அத்தோடு அவர்கள் புதிய ஏற்பாட்டில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அளித்ததற்கான தெளிவான போதனைகள் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். கொர்நேலியு போன்ற சில குடும ் ்பங்கள் ஞானஸ்நானம் பெற்றதை அடையாளம் காட்டி அங்கு குழந்தை களும் ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம் என்ற தவறான அனுமானத்திற்கு வருகிறார்கள்.

(1) வேத போதனைகளின்படி, பிறந்த குழந்தைகள் மறுபிறப்படைந்ததாக எந்தப் பகுதியும் போதிக்கவில்லை.

(2) குழந்தைகளில் பின்னால் அப்படி அது நிகழ்ந்தாலும் அவர்கள் வளர்ந்து அதைத் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும்வரை, அதற்குரிய அறிகுறிகளைக் காட்டும்வரை அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து திருச்சபையில் அங்கத்தவராக சேர்த்துக்கொள்ளும்படி வேதம் எந்தப் பகுதியிலும் போதிக்கவில்லை.

(3) திருச்சபை, முறையான சபை ஒழுங்கு முறையைப் பின்பற்றி விசுவாசி களை மட்டுமே அங்கத்தவர்களாகக் கொண்டு பரிசுத்தமாக வைத்திருக்கப் பட வேண்டுமென்பதே புதிய ஏற்பாட்டின் பொதுவான போதனை. சபை அங்கத்துவத்தை சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது. அது விசேஷ சிறப் புரிமை. அது விசுவாசிகளுக்குரிய அடையாளங்களைக் கொண்டிருப்பவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

(4) குழந்தை ஞானஸ்நானம் வழங்குவது புதிய ஏற்பாட்டு திருச்சபை பற்றிய போதனைகளுக்கு எதிராக அமைந்துவிடுகிறது. அவிசுவாசிகள் அங்கத்தவர்களாக நுழைந்துவிடுவதற்கு அது இடம் கொடுத்துவிடுகிறது. திருச்சபை புதிய உடன்படிக்கையின் அங்கத்தவர்களை மட்டுமே கொண் டிருக்க வேண்டும். எவரும் சரியாக ஆராயப்பட்டு விசுவாசத்தைக் கொண் டிருக்கிறார்களா என்று விசாரித்து அதற்குரிய அடையாளங்கள் இருந்தால் மட்டுமே ஞானஸ்நானத்திற்கும், திருவிருந்து எடுக்கவும் அனுமதிக்க வேண்டும். விசுவாசிகளின் குழந்தைகளுக்கு மட்டும் சபையில் சிறப்புரிமை கொடுக்க வேண்டுமென்று வேதம் போதிக்கவில்லை.

(5) குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் முறை, அவர்களைத் தவறாக விசுவாசிகள் என்று நம்பவைத்து அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதற்கு இடையூராக அமைந்துவிடும். எவரையும் விசுவாசி என்று வெறும் அனுமானம் செய்ய வேதம் அனுமதி தரவில்லை.

(6) இரட்சிப்பு எத்தனை சிறப்பானது, மகிமையானது என்பதை புதிய உடன்படிக்கையின் புரட்சிகரமான போதனை விளக்குகிறது. அதை எந்த விதத்திலும் அலட்சியம் செய்ய புதிய உடன்படிக்கை இடங்கொடுக்க வில்லை.

 

கல்வினும், ஆகஸ்தீனும், பவுலும் பிரசங்கம் செய்த அந்தப் பழம் பெரும் சுவிசேஷத்தையே நானும் இன்று பிரசங்கம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கும், கர்த்தருக்கும் நான் பொய்யானவனாகி விடுவேன். என்னால் சத்தியத்திற்கு உருவம் கொடுக்க முடியாது. சத்தியத்தின் ஓரங்களை சரிப்படுத்தும் வித்தையெல்லாம் எனக்குத் தெரியாது. ஜோன் நொக்சினுடைய சுவிசேஷமே என்னுடைய சுவிசேஷம். ஸ்கொட்லாந்து முழுவதும் இடித்த இடி இன்று இங்கிலாந்து முழுவதும் இடிக்க வேண்டும்.

- ஸ்பர்ஜன் -


நம்மினத்துக்கு இன்று தேவை நல்ல தலைவர்கள்

தலைமைக்கான இலக்கணம்
ஒரு விஷயத்தை நாலு வார்த்தைகளில் விளக்குவதைவிட அதைப் போல் நடந்து காட்டுவது மேல் என்று சொல்லுவார்கள். இது அர்த்தமில்லாமல் சொல்லப்பட்ட கருத்தல்ல. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்ல தலைமையை உருவாக்க உதாரணத்தைப் போல வலிமை தருவது வேறெதுவுமில்லை. ஏன் நல்ல தலைமை நம்மத்தியில் இல்லை என்பதற்கான காரணிகளை நாம் பார்த்தபோது அத்தகைய தலைமையை நடைமுறையில் பார்க்கும்படியான நிலைமை நம்மத்தியில் பரவலாக இல்லை என்பதை விளக்கியிருக்கிறேன். ஒரு சபைத் தலைவருக்கு என்ன அடையாளம் என்று யாரையாவது கேட்டுப் பார்த்தால் அதற்குக் கிடைக்கும் பதில் கூட சிரிக்க வைக்கும். வயதானவராக இருக்க வேண்டும், பொதுவாக வெள்ளை உடை உடுத்தியிருக்க வேண்டும், பேச்சில் எப்போதும் இனிப்பிருக்க வேண்டும், வார்த்தைக்கு வார்த்தை ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும் என்று இப்படியாக சில வெளிப்புற அடையாளங்களை மட்டுமே அதற்கு அறிகுறியாக எண்ணுகிற அளவுக்கு இன்றைக்கு சபைத்தலைமை இருந்து வருகிறது. அகத்தை ஆராயக்கூடாது, அது தனிப்பட்ட விஷயம் என்று கருதும் நம் கலாச்சாரம் கிறிஸ்தவத்தைப் பாதிக்கிறது. முகத்தாட்சன்னியம் பார்க்கும் வழக்கமும், தலைமையில் இருப்பவர்கள் தவறு செய்வார்கள் என்று நினைப்பது பாவம் என்ற தவறான எண்ணமும், தவறு செய்தாலும் தலைமையில் இருப்பவர்கள் அதற்காக மன்னிப்புக் கேட்பது அவர்களுடைய தகுதிக்கு ஆகாது என்ற போலிப் பண்பாடும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் மாற வேண்டுமானால் ஆவியானவர் மிகவும் ஆழமாக நம்மத்தியில் கிரியை செய்ய வேண்டும். அவருடைய வல்லமையில்லாமல் நம்மினத்தின் தவறான மனப்போக்கு மாற வழியில்லை. ஆவியானவரைப் பற்றி அதிகம் பேசுவதால் இது நடந்துவிடப் போவதில்லை. ஆவியானவர் இறையாண்மையுடன் நம்மத்தியில் செயல்பட வேண்டும். போலித்தனம் நம்மத்தியில் அகன்று சத்திய வாழ்க்கைக்கு வழியேற்பட வேண்டும்.

தலைமைக்கான அடையாளத்தை வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டும், நடந்து காட்ட வேண்டும் என்பதை வேதம் தெளிவாக உணர்த்துகிறது. அதை வேதம் உதாரணங்கள் மூலமும், போதனைகள் மூலமும் அளித்திருப்பதைப் பார்க்கிறோம்.

நல்ல தலைமைக்கான உதாரணங்கள்
ஆரம்பத்தில் இருந்தே கர்த்தர் தன் மீட்பின் வரலாற்றில் தன் நோக்கங்களை தனி மனிதர்கள் மூலம் நிறைவேற்றி வந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆதியில் ஆதாம், ஆபேல் அதற்குப் பிறகு வந்த மனிதர்கள் என்று புதிய ஏற்பாடு வரையும் அநேக மனிதர்களை கர்த்தர் எழுப்பி தன் நோக்கங்களை வரலாற்றில் நிலைநாட்டியிருப்பதை நாம் வேதத்தில் தெளிவாகவே பார்க்கிறோம். ஆபிரகாமை கர்த்தர் எழுப்பி அப்பெருமகன் மூலம் செயல்பட்டார். அதற்குப் பிறகு யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, தாவீது, சாலமோன், தானியேல், தீர்க்கதரிசிகள் என்று பழைய ஏற்பாட்டிலும், யோவான் ஸ்நானன், பேதுரு, பவுல் என்று பலரைப் பற்றி புதிய ஏற்பாட்டிலும் வாசிக்கிறோம். கர்த்தர் இப்படித் தனி மனிதர்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தன் மக்களை வழிநடத்தி வந்திருப்பது அவருடைய இறையாண்மைக்குரிய திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால், இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல போதனைகள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

தன்னுடைய நோக்கங்களை கர்த்தர் தனி மனிதர்களைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளுகிற அதேவேளை அந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி நமக்கு விவரித்து அதை நாம் கூர்ந்து பார்க்கும்படிச் செய்திருக்கிறார். அத்தனி மனிதர்கள் சமுதாயத்தின் மத்தியில் கர்த்தருக்குப் பணிந்து அவருடைய கட்டளைகளை ஏற்று, நிறைவேற்றி வாழ வேண்டியிருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், குடும்ப வாழ்க்கை பற்றிய விபரங்களையும் வேதம் நமக்கு விளக்கமாகவே தந்திருக்கிறது. இதையெல்லாம்விட அம்மனிதர்கள் விட்டிருக்கின்ற தவறுகளையும், அதற்காக அவர்கள் எந்தவிதத்தில் வருந்தி மனமாற்றத் துடன் திருந்தி வாழ்ந்தார்கள் என்பதையும் வேதம் விளக்குகிறது. கர்த்தருடைய இருதயத்தில் இடம்பிடித்திருந்து, பெருங்காரியங்களை கர்த்தருக்காக சாதித்த தாவீது பாவத்தில் விழுந்ததையும் பின்பு அதற்காக மனந்திருந்தி வாழ்ந்ததையும் வேதம் காரணமாகத்தான் நமக்கு விளக்கி யிருக்கிறது. இதே போலத்தான் கர்த்தர் பயன்படுத்திய ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையைப் பற்றியும் வேதத்தில் வாசிக்கிறோம். இவர்கள் எல்லாம் கர்த்தருடைய மக்களை வழிநடத்தி வந்தவர்களாக இருந்திருக் கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. கர்த்தரின் மக்களுக்கு மீட்பை அளிக்க மனித உருவெடுத்து வந்து வாழ்ந்த இயேசு கிறிஸ்துகூட மனிதர் களுக்கு மத்தியில் வாழ்ந்து மனித உணர்ச்சிகளை வெளிக்காட்டி வாழ்ந்து மரித்தார்.

வேதம் இதையெல்லாம் எதற்காக விளக்குகிறது என்று நினைக்கிறீர்கள்? ? முதலாவதாக, இவர்கள் எல்லோரும் (இயேசு கிறிஸ்துவைத் தவிர) பெருங் காரியங்களைக் கர்த்தருக்காகத் தங்களுடைய வாழ்நாளில் சாதித்திருந்த போதும் சாதாரண மனிதர்கள் என்பதையும், அவர்கள் தேவதூதர்களோ அல்லது தெய்வீக அம்சம் கொண்டவர்களோ அல்ல என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக. இவர்கள் செய்த தவறுகளை நாம் வாசிக்கின்றபோது அவர்களும் நம்மைப் போல சாதாரண மனிதர்கள்தான் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கும் நம்மைப் போலவே உணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. அவர்களும் நம்மைப் போலவே கர்த்தரை விசுவாசித்து, சோதனைக்குத் தப்பி பாவத்தோடு போராடி வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்தபோது கர்த்தர் அவர்களை சிட்சை செய்யாமலில்லை. அவர்களும் நம்மைப்போலவே மனந்திருந்தி மனமாற்றத்துகுரிய வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. இது அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் சகல மனிதர்களும் வாழ வேண்டிய வாழ்க்கை முறை. கர்த்தர் பயன்படுத்திய ஒவ்வொரு நல்ல தலைவனும் சாதாரண மனிதனே. இரண்டாவதாக, இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து நாமும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேதம் இவர்களைப் பற்றி விவரிக்கிறது. இவர்கள் விட்ட தவறுகளை நாம் செய்து விடக்கூடாது. இவர்கள் விட்ட தவறுகள் பாவத்தின் வலிமையையும், அதன் கோரத்தையும் நமக்குக் காட்டி எச்சரிக்கை செய்கின்றன. இவர்கள் செய்திருக்கும், அசாதாரணமானவையாக நமது கண்களுக்குத் தெரியும் செயல்களை நாமும் செய்ய வேண்டும் என்பதல்ல நாம் படிக்க வேண்டிய பாடம். இவர்களுடைய அசாதாரண செயல்களுக்குப் பின் அவர்கள் விசுவாசித்திருக்கும் கர்த்தர் இருந்திருக்கிறார் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கர்த்தர் அவர்களோடிருந்திராதபோது அவர்கள் வலிமையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் கர்த்தர் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தையும், நம்பிக்கையையும் நாமும் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நமக்கு நல்ல பாடங்களை கற்றுக் தருகின்றது.

மூன்றாவதாக, இவர்களைக் கர்த்தரே தெரிவு செய்து பயன்படுத்தியிருக்கிறார். இவர்களில் பொதுவாக எந்த சாதாரண மனிதரிலும் காணப்படும் குறைபாடுகள் இருந்தபோதும் கர்த்தருடைய பணிக்குரிய தகுதிகள் இல்லாமல் இவர்களைக் கர்த்தர் தெரிவு செய்யவில்லை என்பதை நாம் உணர்வது அவசியம். இவர்களில் ஒருவரையாவது கர்த்தர் தெரிவு செய்ததில் தவறு விட்டுவிட்டார் என்று நாம் கூற முடியாது. நம் பார்வைக்கு அப்படிப்பட்டால் அது நம்முடைய குறைபாடே தவிர இறையாண்மையுள்ள கர்த்தர் ஒருபோதும் தவறு செய்ய முடியாது. இவர்களுடைய தகுதிகளைக் கவனிப்போம்: (1) இவர்கள் எல்லோருமே கர்த்தரை விசுவாசித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கர்த்தர் விசுவாசமற்ற சவுலை இஸ்ரவேலின் அரசனாக்கினார். சில வேளைகளில் கர்த்தர் தன்னை விசுவாசிக்காதவர்களைக் கொண்டு தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டதுண்டு. அதற்காக கர்த்தர் தன்னை விசுவாசிக்காதவர்களை சபைத் தலைவர்களாக்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது.) (இ இவர்கள் எல்லோருமே தவறாமல் விசுவாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். (3) இவர்கள் எல்லோருமே தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பணியைச் செய்யும் தகுதிகளையும், திறமைகளையும் கொண்டிருந்தார்கள். கர்த்தர் அளித்த பணிகளைச் செய்ய அவர்கள் முழுமையாகக் கர்த்தரில் தங்கியிருக்க வேண்டி வேண்டியிருந்தது.

நான்காவதாக, இவர்கள் எல்லோரும் சம வயதுள்ளவர்களாகவோ அல்லது வயதானவர்களாகளோ இருந்திருக்கவில்லை. இவர்களில் பலர் திடகாத்திரமான இளம் வாலிபர்களாக இருந்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே கர்த்தர் தன்னுடைய பணிகளைச் செய்ய தெரிவு தெய்தார் என நாம் நினைப்பது தவறு. கர்த்தரின் சபை ஊழியர்களுக்கு முதிர்ச்சி தேவை என்பதை வேதம் வலியுறுத்தியபோதும் அதற்காக ஒரு வயதை அது நிர்ணயம் செய்யவில்லை. தாவீது, சாலமோன், தானியேல், தீமோத்தேயு போன்றோர் வாலிப வயதிலே கர்த்தருக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். தீமோத்தேயு வாலிப வயதில் இருந்தபோதே போதகப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வாலிபன் என்று உன்னை எவரும் அலட்சியப்படுத்தி விடாதபடி கவனத்தோடும், முதிர்ச்சியோடும் நடந்துகொள்ளும்படியே பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை செய்திருக்கிறார். வாலிபனாக இருந்து இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டிருந்தால் ஒருவர் கர்த்தருக்குப் பணி செய்வதற்குத் தடையில்லை.

தலைமைத்துவம் பற்றிய வேத போதனைகள்
உதாரணங்களின் மூலமாக மட்டும் தலைமைத்துவத்திற்கான இலக்கணங்களை கர்த்தர் நமக்கு விளக்காமல் அது பற்றி வெளிப்படையாக அநேக போதனைகளையும் வேதத்தில் தந்திருக்கிறார். சபைத் தலைமைக் குரிய இலக்கணங்கள் 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே சபைத்தலைவர்கள் சபைகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றைத் தவிர புதிய ஏற்பாட்டின் வேறு பல பகுதிகளிலும் அது பற்றிய போதனைகள் பரவிக் காணப்படுகின்றன. முக்கியமாக 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்களில் அத்தகைய விளக்கங்கள் அதிகமாகவே காணப் படுகின்றன. ஒரு சபைத் தலைவன், கர்த்தரின் ஊழியப் பணி புரிகிறவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? வேதம் கூறுவதைக் கேளுங்கள்: பவுல், தீமோத்தேயுவுக்கு சொல்லுகிறார், “நீ விசுவாசமும் நல் மனச்சாட்சியும் உடையவனாக இரு.”

“உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாத படிக்கு, நீ வார்த்தையிலும் நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.” (1 தீமோ. 4:12).

“வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.” (1 தீமோ. 4:13)

“உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு.” (1 தீமோ. 4:16)

“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” (2 தீமோ. 2:15).

“சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு.” (2 தீமோ. 2:16).

“பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே நீதியையும் விசுவாசத்தை யும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” (2 தீமோ. 2:22). “புத்திfனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்கு மென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்” (2 தீமோ. 2:23).

“எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு .” (2 தீமோ. 4:5).

“நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி .” (தீத்து 2:7).

உதாரணத்திற்காக நான் சில வசனங்களைத் தந்திருந்தபோதும் புதிய ஏற்பாடு இப்படி அநேக போதனைகளை நம்முன் வைக்கின்றது.

நல்ல தலைவர்களை உருவாக்குவது எப்படி?

இப்படி இலகுவாகக் கேட்டுவிட்டாலும் இது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் உணர வேண்டும். அதேவேளை, நல்ல தலைவர்கள் எப்போதும் கர்த்தரால் தரப்பட்ட ஈவுகளாக இருந்தபோதும் அவர்கள் விண்ணில் இருந்து நேரடியாக நம் மத்தியில் குதித்துவிடப் போவதில்லை என்பதையும் உணர்வது அவசியம். நல்ல தலைவர்கள் எப்போதுமே உருவாக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்; வழிநடத்தப் பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இதை நம் கிறிஸ்தவ சமுதாயம் உணர்வதாக இல்லை. யோசுவாவுக்கு பின் ஒரு மோசே இருந்திருக்கிறார். தீமோத்தேயுவுக்கு பின் பவுல் இருந்திருக்கிறார். இவ்வாறாக வேதத்தில் நாம் வாசிக்கும் பல நல்ல தலைவர்கள் உருவாவதற்கு நல்ல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் பிற்காலத் தலைவர்களை உருவாக்குவதில் சம காலத்தலைவர்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதை அறிந்துகொள்ளுகிறோம்.

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே முரண்பாடிருந்ததில்லை. இளைஞர்களை வளர்த்துவிட வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய சந்ததியின் கைகளில் இருக்கின்றது. இன்றைய இளைஞர்களை வளர்ப்பது என்பதும் இலகுவான காரியமல்ல. தொழில் நுட்ப வளர்ச்சிக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இளைஞர்களின் சிந்தனை துரிதமானது. வேகம் அதிகமானது. பொறுமையும் குறைவானது. இவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று அவர்களுடைய வளர்ச்சியில் நாம் பங்கு வகிக்க வேண்டுமானால் அதற்கு நீடிய பொறுமையும், விடாமுயற்சியும், பரந்த இருதயமும் தேவை. இளைஞர்கள் துடிப்பானவர்கள். அடிக்கடி தவறு செய்து விடக்கூடிய வாலிபத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சிந்தனை அடிக்கடி மாறும் தன்மையுள்ளது. அதனால்தான் பவுல் தீமோத்தேயுவினுடைய வாலிபத்தை நினைவுறுத்தி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று புத்தி சொன்னார்.

இத்தகைய வாலிபத்துக்கே உரிய இயற்கையான தன்மைகளை இளைஞர்கள் கொண்டிருந்த போதும் அதற்காக அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கான வழிமுறைகளை நாம் நாட வேண்டும். அதுவும் நம்மினத்தில் புறஜாதி மதங்களிலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கும் வாலிபர்கள் பெருங் கஷ்டங்களை வாழ்க்கையில் எதிர்நோக்குகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டிகளாக எவரும் இருந்ததில்லை. அவர்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும் மேலை நாட்டு இளைஞர்களைவிட வேறுபட்டதாக இருக்கும். இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, இவர்களில் நாளைய தலைவர்களாகக்கூடியவர்களை எவ்வாறு இனங்கண்டு கொள்வது?

1. இளைஞர்களுக்கு அவசியமான போதனைகளை அளித்து வழிகாட்ட வேண்டும். - இந்து சமுதாயத்தில் வாழ்ந்து வரும் தமிழினத்து கிறிஸ்தவ இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். பண்பாட்டுப் பாதிப்பு, இந்துப் பெற்றோர், உறவினர்களின் எதிர்ப்பு, சமுதாயக் கட்டுப்பாடுகள் ஆகியவற் றிற்கு மத்தியில் வாழ்ந்து வருகிற இளைஞர்களை இத்தனைக்கும் மத்தியில் விசுவாசமுள்ள கிறிஸ்தவனாக எப்படி வாழ்வது என்று வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சபைக்கும் உண்டு. பலர் வெறும் வாலிபர் களுக்கான ஒரு கூட்டத்தை மட்டும் வாரமொருமுறை வைத்துவிட்டு வாலிபர்களுடைய தேவைகளைத் தீர்த்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். பல இடங்களில் மேற்பார்வையற்ற அத்தகைய வாலிபர் கூட்டங்கள் நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவித்திருக்கின்றன. சபைப் போதகர்கள் வாலிபர்களுக்கு அவசியமான போதனைகளைத் தயாரித்து வழங்குவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். ஞாயிறு தினங்களில் கொடுக்கப்படும் போதனைகளில் பொதுவான பல விஷயங்கள் எல்லோருக்கும் பொருந்திவருவதாக இருந்தாலும், வாலிபர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள், வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றை மனதில் கொண்டு தகுந்த முறையான போதனைகளை அவர்களுக்காகத் தயாரித்து வழங்குவது அவசியம்.

2. போதகர்கள் வாலிபர்களை சந்தித்துப் பேசி வழிகாட்ட வேண்டும். - போதகர்களுக்கு அநேக வேலைகள் இருப்பது சகஜம் தான். இருந்தாலும் போதனை அளிப்பது மட்டுமே போதக ஊழியமாகி விடாது. ஒரு கால அட்டவனையைத் தயாரித்து முறையாக ஆத்துமாக்களை வருடத்தில் சில தடவைகளாவது போய்ச் சந்தித்து அவர்களுடைய ஆத்தும வாழ்க்கை எப்படியிருக்கிறதென்று விசாரித்து தகுந்த ஆலோசனை தந்து அவர்களுக்காக ஜெபிப்பது போதக ஊழியத்தின் மறுபக்கம். ஒன்றிருந்து மற்றது இல்லாவிட்டால் சபை பாதிப்புக்குள்ளாகும். இரண்டுக்கும் சமமான இடம் கொடுப்பது அவசியம். சபையை நாம் ஜீவனற்ற கற்களால் கட்டுவதில்லை; இரத்தத்தையும், சதையையும், ஆத்துமாவையும் கொண்ட மனிதர்களை வைத்துக் கட்டுகிறோம். ஆத்துமாக்களோடு அந்நியோந்ய மாக இருந்து உறவாடி ஆத்தும ஆலோசனை கொடுப்பதற்கு நேரம் கொடுக்கத் தவறும் போதகன் வெகு சீக்கிரமே ஆத்துமாக்களுக்கு பிரயோ ஜனமற்றவனாகி விடுவான். ஆகவே, சபையிலிருக்கும் இளைஞர்களை முறையாக சந்தித்து அவர்களுக்கு ஆத்தும ஆலோசனை வழங்கி ஜெபிப்பது ஒவ்வொரு போதகனுடையதும் கடமை.

3. அது தவிர இளைஞர்கள் மேல் மதிப்பு வைத்து அவர்களுக்கு சில பொறுப்புக்களை வழங்கி அவற்றை அவர்கள் செய்து முடிக்குமாறு வழிநடத்த வேண்டும். - நம் சமுதாயத்தில் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டப் படுவதில்லை. பெற்றோர்கள் அவர்களை சிறு பிள்ளைகளைப் போலவே எப்போதும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலைமை பல இடங்களில் மாறி வருகிறது உண்மைதான். ஆகவே, கிறிஸ்துவை விசுவாசித்து நம் சபைகளில் இருக்கின்ற இளைஞர்களை நாம் தட்டிக் கொடுத்து நீடிய பொறுமை காட்டி பொறுப்புக்களை ஏற்று நிறைவேற்ற வழிகாட்ட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அவர்களுடைய திறமைகள், தகுதிகளை நாம் கண்டறிய முடியும். அவர்கள் நிச்சயம் தவறு விடுவார்கள் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி தவறு விட்டாலும் அதற்காக அவர்கள் குற்ற உணர்வோடு வாழ இடங்கொடுக்காமல் திருத்தி நம்பிக்கையோடு எதையும் செய்ய வழிகாட்ட வேண்டும். நமக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் பல இளைஞர்களில் சிலராவது கர்த்தருக்கு ஏதாவதொரு விதத்தில் பணி செய்யாமலா போய்விடுவார்கள்? ? வாலிபர்கள் என்றாலே வம்பு செய்வதுதான் அவர்களுடைய வழக்கம் என்ற எண்ணத்தோடு அவர்களைப் பார்க்கக் கூடாது. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டி வளர்த்து பொறுப்போடு அவர்கள் எதையும் செய்ய உதவும் போதகர்கள் இன்று நம்மினத்துக்குத் தேவை.

4. இளைஞர்களுக்கு கர்த்தரின் பணி பற்றியும், திருச்சபைப் பணி பற்றியும் விசேட போதனைகளை அளித்து அவர்களுடைய இருதயத்தில் கர்த்தருக்கு உழைக்கக்கூடிய பாரத்தை ஏற்படுத்த வேண்டும். - இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் போதகர்களாக வரவேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. சிலர் நிச்சயமாக அந்தளவுக்கு உயரக்கூடும். இந்த உலகத்தில் வேலை செய்துகொண்டே சபையில் இருந்து கர்த்தருக்கு எத்தனையோ பணிகளை அவர்களால் செய்ய முடியும். அது பற்றி அவர்களோடு வெளிப்படையாகப் பேசி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்.

இதுபற்றிய தவறான, வேதத்துக்கு முரணான எண்ணங்களை அவர்கள் அகற்றிக்கொள்ள உதவ வேண்டும். வேதபூர்வமான எண்ணங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். கர்த்தருக்குப் பணிபுரிய அவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், குணாதிசயங்கள், ஈவுகள் பற்றியும் திருமண வாழ்க்கை, அதற்கு அவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும், இந்த உலகத்தில் நேர்மையாக தொழில் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், சபையாரோடு அவர்கள் பழகும் விதம், மற்றவர்களிடம் நன்மதிப்புப் பெற்று வாழ அவசியமான நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதையெல்லாம் ஒவ்வொரு போதகனும் தன்னுடைய கடமையாக எண்ணிச் செய்து வர வேண்டிய பணிகள். இதையெல்லாம் செய்யாமல் எங்கேயும் வாலிபர்கள் சபைகளில் நன்மதிப்புடன் வாழ்ந்துவிட முடியாது. சில வேளைகளில் நம்முடைய உழைப்பு, கவனம் ஆகியவற்றை மீறி ஒரு சிலர் தவறாக நடந்து விடலாம். அதனால், இளைஞர்களை வளர்க்கும் நம்பணியில் நாம் தளர்ந்துவிடக் கூடாது. திருத்த வேண்டியவர்களை அன்போடு திருத்தி எல்லோரையும் தாங்கள் இருக்கும் நிலையில் கர்த்தருக்குச் செய்ய வேண்டியதை முறையாக செய்ய உதவ வேண்டும். வைராக்கியத்தோடு கூடிய நம்முடைய நீண்ட உழைப்பும், பொறுமையும், ஜெபமும் நிச்சயம் இந்த விஷயத்தில் கர்த்தரின் கிருபையால் பலனளிக்கும். இதில் வாஞ்சையில்லாத போதகர்கள் கர்த்தர் தரும் எதிர்காலத் தலைவர்களை சபையில் என்றுமே பார்க்க முடியாது.

5. இவர்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து, கர்த்தரின் பணிக்கான தகுதிகளில் ஆரம்ப அடையாளங்களைக் காட்டுகிறவர்களை தனியே பிரித்து அவர்களுக்கு விசேட போதனையளிக்க வேண்டும். - இறையியல் போதனை, போதக ஊழியம் தொடர்பான போதனைகளைக் கொடுப்பதோடு அவர்கள் தாங்களே வாசித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளும்படியான நூல்களையும் வாசிக்கும்படி செய்யலாம். அந்த நூல்களில் கற்றுக் கொண்டவைகளை சுருக்கமாக எழுதித் தரும்படியும், வேறு எழுத்துப் பயிற்சிகளையும் அளிக்கலாம். இதனால் அவர்களுடைய கிறிஸ்தவ அறிவைப் பற்றியும் தகுதிகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

6. இவர்களை நம்முடைய மேற்பார்வையின் கீழ் சபையில் சில பணிகளைச் செய்ய வைத்து சபை மக்கள் அவர்களுடைய தகுதிகளை அறிந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டும். - இது சபை மக்களிடம் அவர்கள் எந்த விதத்தில் பழகுகிறார்கள், உறவாடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுவதோடு சபை மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க உதவும். இந்தப்பணிகளை அவர்கள் சரியாக செய்ய திருத்த வேண்டிய இடங்களில் அவர்களைத் திருத்தி வழிகாட்ட வேண்டும்.

கர்த்தர் எந்த இளைஞனையாவது தன் பணிக்கு அழைத்திருக்கிறாரா என்பதை இந்த வழிகளின் மூலமாகத் தான் வெளிப்படுத்துகிறார். இதுவே கர்த்தர் வேதத்தில் காட்டியிருக்கும் சாதாரண வழிமுறைகள்.

சாதாரணமாக எந்த சபையும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். இந்த வழிகளுக்கு அப்பாற்பட்டு கிரியை செய்ய கர்த்தரால் நிச்சயம் முடியும். இதெல்லாம் சபையில் இருக்கும் இளைஞர்களை எப்படி எதிர்காலத்தில் சபைக்குப் பிரயோஜனமுள்ள வகையில் பணிசெய்யவும், தலைவர்களாக வரவும் உருவாக்குவதற்கான வழிகள். இதற்கு நேரத்தைக் கொடுக்கத் தயங்கும் போதகர்கள் பெருந்தவறு செய்தவர்களாவார்கள். நல்ல தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாக தடையாக இருப்பவர்களாவார்கள்.

(தொடரும்)


 

“நான் முதன் முதலாக (ஜெனீவாவில்) சபைக்கு வந்தபோது அங்கே நான் ஒன்றுமே இல்லாதிருந்ததைக் கவனித்தேன். அங்கே பிரசங்கம் இருந்தது, அது மட்டுந்தான். அவர்கள் சிலைகளைத் தேடிப் போய் அவற்றை எரித்தார்கள், உண்மைதான். ஆனால், அங்கே சீர்திருத்தம் இருக்க வில்லை. எல்லாமே தலைகீழாக இருந்தது. தொடர்ந்த பலிச்சொற்களுக்கு மத்தியில் நான் இங்கேயே இருந்துவிட்டேன். ஒரு மாலை நேரம் என் அறைக் கதவில் நாற்பதோ ஐம்பது துப்பாக்கி வேட்டுக்கள் என்னை வரவேற்றிருக்கின்றன. என்னைத் துரத்தி வரும்படி அவர்கள் நாய்களை என்மேல் ஏவியிருக்கிறார்கள். அவை என்னுடைய அங்கியையும், கால்களையும் பதம் பாத்திருக்கின்றன. உண்மையில் நான் ஒன்றும் விசேஷமானவனாக இல்லாதிருந்த போதும் ஜெனீவாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மூவாயிரம் கிளர்ச்சிகளை நான் உருவாகாமல் தடுத்திருக்கிறேன். மனத்திடம் கொண்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் இந்த சபையைப் பயன்படுத்தி, தொடர்ந்து நடத்தி தானே அதைப் பாதுகாப்பேன் என்று உங்களுக்கு உறுதி தந்திருக்கிறார்.”
[ஏப்ரல் 28ம் நாள் 1564ல் ஜெனீவாவின் போதகர்களுக்கு சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் அளித்த பிரியாவிடைச் செய்தியின் ஒரு பகுதி.]


ஜோன் கல்வினின் பிரசங்கம்

வைறவல் ஜோன்ஸ்

[ஜெனிவா தந்த மாபெரும் சீர்திருத்தவாதி ஜோன் கல்வின். 16ம் நூற்றாண்டின் சீர்திருத்த வரலாற்றில் பெரும் பங்கு கல்வினுக்கு உண்டு. ஐரோப்பாவின் பல பகுதிகளில் அக்காலத்தில் கிறிஸ்தவத்தின் எதிரிகளால் துன்புறுத்தலுக்குள்ளான பலருக்கு ஜெனீவா அடைக்கலம் தந்தபோது அவர்கள் ஜோன் கல்வினின் பிரசங்க ஊழியத்தின் கீழிருந்து பெரும் ஆசீர்வாதங்களை அடைந்தார்கள். தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிப் போய் சீர்திருத்தப் பணியைத் தொடர்ந்தார்கள். அந்தவகையில் பயனடைந்த ஸ்கொட்லாந்தின் ஜோர்ஜ் விஷ்சார்ட், ஜோன் நொக்ஸைப் பற்றி இந்த இதழின் முதல் ஆக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். கல்வின் பிறந்த 500வது ஆண்டை இந்த வருடம் உலகம் சிறப்பிக்கிறது. அதன் காரணமாக இந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம். - ஆர்.]

தன் வாழ்நாளில் முப்பது வருடங்களாக, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாளும், சில சமயங்களில் ஓய்வு நாளில் இரு தடவைகள் தன்னுடைய சபை மக்கள் முன் ஜெனீவாவில் பிரசங்கம் செய்திருக்கிறார் ஜோன் கல்வின். திருச்சபை சீர்திருத் தத்திற்கு பிரசங்கம் எந்தளவுக்கு அவசியம் என்பதை கல்வின் உணர்ந்து வைத்திருந்ததை இது எடுத்துக் காட்டுகிறது. ஜெனீவாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு நான்கு வருடங்கள் வெளி தேசத்தில் வாழ்ந்த பின் மீண்டும் ஜெனீவாவுக்கு திரும்பி வந்தபோது வேதத்தில் எந்த இடத்தில் தன்னுடைய பிரசங்கத்தை நிறுத்தியிருந்தாரோ அந்த இடத்தில் இருந்து மீண்டும் பிரசங்கிக்க ஆரம்பித்தார் கல்வின். அவருடைய வாழ்க்கை முழுவதுமே பிரசங்கத்திற்காகத் தன்னைத் தயார் செய்வதிலும், பிரசங்கிப்ப திலுமே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவர் தன்னை ஒரு பிரசங்கியாகவும், போதகராகவுமே எப்போதும் பார்த்தார்.

1536-1564ம் ஆண்டுகளுக்கிடையில் கல்வின் 4000 பிரசங்கங்களைச் செய்திருந்தார். இன்றைக்கு அவற்றில் பலவற்றை நாம் வாசிக்க முடிவதற்கு கர்த்தரின் கிருபையும், பராமரிப்பும் மட்டுமே காரணம். முதலில், அவர் எப்போதுமே தன்னுடைய பிரசங்கங்களைக் குறிப்பெடுத்து வைத்ததில்லை. இரண்டாவதாக, அவருடைய பிரசங்கங்களைக் குறிப்பெடுக்க ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மூன்றாவதாக, அவருடைய பிரசங்கங்களைக் குறிப்பெடுக்க ஒருவரைத் தேடிப்பிடித்த போதும் கல்வினின் பிரசங்கத்தைக் கேட்டு வார்த்தைக்கு வார்த்தை குறிப்பெடுப்பது என்பதும் சுலபமல்ல. அந்த மனிதரின் கடுமையானதும், அக்கறையோடு கூடியதுமான உழைப்பால் 1613ல் ஜெனீவாவின் நூலகத்தில் 48 வால்யூம்களாக கல்வினுடைய பிரசங்கங்கள் தொகுக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தபோதும் அவற்றை நூலகம் அக்கறையோடு பாதுகாத்து வரவில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதியில் அவற்றில் ஒன்பது வால்யூம்கள் காணாமல் போய்விட்டன. 1805ல் ஏனைய வால்யூம்கள் அவற்றின் எடைக் கேற்றபடி விற்கப்பட்டன. இத்தனைக்கும் மத்தியில் கர்த்தரின் கிருபையால் அவருடைய பிரசங்கங்களில் பல ஹாலந்து, ஜெர்மனி, இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் இருந்து வருகின்றன. இன்று நாம் கல்வினின் பிரசங்க ஊழியத்தின் மூலம் பயன்படும்படி இந்த முறையில்தான் அவருடைய பிரசங்கங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இருந்தபோதும் கல்வினின் பிரசங்கங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப் படாமல் இருந்து வருகின்றன. 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளிலும் அவருடைய கிறிஸ்தவ இறையியல் நூலும், வேத விளக்கவுரைகளும் மட்டுமே அதிகக் கவனத்தைப் பெற்றன. அவருடைய பிரசங்கங்கள் அந்தளவுக்கு எவருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. 1973ல் தான் அவருடைய வேதத்தின் ஒரு நூலில் இருந்து அவரளித்த பிரசங்கங் களின் தொகுப்பு முதல் தடவையாக வெளியிடப்பட்டது. அன்று முதல் மேலும் மேலும் பிரசங்கத் தொகுப்புகள் வெளிவர ஆரம்பித்தன. இந்த ஆக்கத்தின் மூலம் கல்வினின் பிரசங்கங்களை நீங்கள் வாசிக்க உதவுவது தான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது. கல்வினின் பிரசங்கங்கள் ஆங்கிலத்தில் பேனர் ஆப் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றன. அவற்றை வேறு வெளிfட்டாளர்களும் பதிப்பகத்தாரும் வெளியிட்டு வருகின்றனர். இவற்றில் பழமையான ஆங்கிலத்தில் இருப்பவற்றைத் தற்கால வாசகர்கள் வாசிக்க கஷ்டப்படுவார்கள். தற்கால ஆங்கில நடை யில் இருப்பவற்றைப் பெற்று வாசிப்பது பயன் தரும் - ஆர்.).

கல்வினுடைய பிரசங்கங்களை நாம் விசேஷமாகக் கருதுவதற்குக் காரண மென்ன? ? கர்த்தருடைய பேச்சை அவர் பேசுவதுபோல் பேசுவதையே கல்வின் தன் பிரசங்க ஊழியத்தின் பிரதான அம்சமாகக் கொண்டிருந்தார். ‘கர்த்தருடைய பேச்சை அவர் பேசுவதுபோல் பேசுவது’ என்றால் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றியும், நடத்தையைப் பற்றியும் கர்த்தருடைய வார்த்தை போதிக்கின்ற அனைத்தையும் தெளிவாக உணர்ந்திருப்பதின் அவசியத்தையே இந்தப் பதங்களின் மூலம் விளக்குகிறோம். கல்வினுடைய கிறிஸ்தவ இறையியல் என்ற நூலும், அவரது வேத விளக்கவுரைகளும் இதற்கு நல்ல அத்திவாரமிடுகின்றன.

கர்த்தருடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதைவிட மேலானதொன்று பிரசங்கம் செய்வதற்கு தேவையாக இருக்கின்றது. ஆத்துமாக்கள் அவருடைய சத்தியங்களைக் கேட்டு, விசுவாசித்து, வாழ்க்கையில் பின்பற்றும்படியாக கர்த்தருடைய வார்த்தையை விளக்கிப் போதிப்பது பிரசங்கத்தின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. இதுவே கல்வினுடைய பிரசங்கத்தை விசேஷமானதாகவும், நமக்கு உற்சாகமூட்டுவதாகவும் ஆக்கு கிறது. ஜெனீவா மக்களுக்கு கர்த்தருடைய சிந்தனைகளை வெளிப்படுத்து வது மட்டுமே கல்வினின் நோக்கமாக இருந்தது; அதுவும் வேதத்தில் கர்த்தர் கொடுத்துள்ள அந்த சிந்தனைகளை அவர்கள் அறியச் செய்வதையே அவர் தன் கடமையாகக் கருதினார். இன்று வேதத்தில் காணப்படும் கர்த்த ருடைய சத்தியத்த்திற்கும் அதை சமகால மொழியில் ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துவதற்கும் இடையிலான ஒரு பெரும் இடைவெளியை பிரசங்க மேடைகள் எங்கும் பார்க்க முடிகிறது. சில பிரசங்கிகள் பேச்சில் வல்லவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் அதில் சத்தியத்தைப் பார்க்க முடிவதில்லை. ஏனையோருடைய பிரசங்கங்களில் சத்தியத்தைப் காண் கிறோம்; ஆனால், அவர்களால் அவற்றை ஆத்துமாக்கள் புரிந்து கொள்ளும்படி சமகால பேச்சுமொழியில் கொடுக்க முடிவதில்லை. இதனால்தான் கல்வினின் பிரசங்கத்தில், அவர் கர்த்தருடைய பேச்சை அவர் பேசுவதுபோல் பேசுவதில் எடுத்துக் கொண்டிருக்கிற சிரத்தையைக் காண முடிகின்றது.

கர்த்தருடைய வார்த்தையே அவரது பேச்சு கல்வின் தன்னுடைய இறையியலில் கர்த்தருடைய வார்த்தைக்கு சிறப்பான இடத்தைக் கொடுத்திருப்பதைப் பார்க்கலாம். கர்த்தருடைய வார்த்தை அதிகாரமுள்ளதாக இருப்பதற்கு அதைக் கொடுத்திருப்பவர் தான் காரணம் என்பதைக் கல்வின் பூரணமாக நம்பினார். பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் கர்த்தர் மனிதர்களைக் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தானே நேரடியாகத் தந்திருக்கிறார் என்பதையும், அவை மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்றும் அவற்றோடு வேறு எதனையும் சேர்க்கக் கூடாது என்பதையும் கல்வின் விடாப்பிடியாக நம்பினார். வார்த்தைகளின் மூலமாகப் பேசுகின்ற, வேதத்தை நமக்குத் தந்திருக்கின்ற கர்த்தர் அந்த வார்த்தைகளின் மூலமே இன்றும் தம்முடைய மக்களோடு பேசுகிறார் என்பதையும் கல்வின் உறுதியாக நம்பினார். அவர் வேத வசனங்களை அவை தரும் வலிமையான செய்தியோடு இணைத்தார். அது அவருக்கு வேதத்திற்கும் பிரசங்கத்திற்கும் இடையிலான பாலமாக அமைந்தது. பிரசங்கத்துக்கான வேத வசனங்களின் வலிமைக்கு பிரசங்கி எந்தவிதத்திலும் காரணமாக இருப்பதில்லை. வேத வசனங்களின் மூலமாக அந்த வல்லமையை பிரசங்கிக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியானவர் அதைப் பிரசங்கியின் பிரசங்கத்தின் மூலம் கேட்பவர்கள் உணரும்படிச் செய்கிறார். ஹெல்வெட்டிக் விசுவாச அறிக்கை விளக்குகின்ற, வசனங்களின் பிரசங்கமே வேத வசனமாக இருக்கின்றது’ என்பதற்கு இதுதான் பொருள்.

தன்னுடைய நூலான ‘கிறிஸ்தவ இறையியல்’ நூல் 1, அதிகாரம் 7ல் கல்வின் இது பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார்: ‘ஒவ்வொரு நாளும் கர்த்தர் பரலோகத்தில் இருந்து நமக்கு செய்தியளிப்பதில்லை. என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படியாக வேதத்தின் மூலம் மட்டுமே தன்னுடைய சத்தியங்களை நமக்குத் தருவது கர்த்தரின் சித்தமாக இருந்தது. பரலோகத்தில் இருந்து வந்ததுபோல் பாவித்து ஜீவனுள்ள வார்த்தைகள் வேதத்திலிருந்து வெளிப்படுவதாக மனிதன் கருதுகிறபோதுதான் விசுவாசி கள் வேதத்தின் பூரணமான அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்’. கல்வினின் பிரசங்கம் வலிமையுள்ளதாக இருந்ததற்குக் காரணம் வேதம் சத்தியமானது என்று அவர் நம்பியதாலல்ல, அதைவிட அதன் வலிமையை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்ததே அதற்குக் காரணம். கர்த்தருடைய பிரசன்னத்தையும், சீனாய் மலையில் கேட்ட அவருடைய இடிமுழக்கம் போன்ற குரலையும் ஆபகூக் 3:4 ‘அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது’ என்று விளக்குகிறது. கர்த்தருடைய வார்த்தையைக் கல்வின் பிரசங்கித்த விதம் அவ்வாறே இருந்தது. மாறாக, 20ம் நூற்றாண்டில் பிரசங்கம் மிகவும் தரம் குறைந்த நிலையில் காணப்படுவதற்கு மிக முக்கியமான காரணம், வேத வசனங்கள்தான் கர்த்தருடைய வார்த்தை என்று அநேகர் நம்பாமல் இருப்பதும், வேதத்தைப் பிரசங்கிப்பவர்கள் அதனுடைய வல்லமையை அனுபவபூர்வமாக உணராமலிருப்பதுந்தான். கல்வினின் பிரசங்கம் - கர்த்தருடைய பேச்சைப் பேசுவது கல்வின் தன்னுடைய பிரசங்கங்கள் அனைத்தும் வேதபூர்வமாக இருக்கும் படியாகப் பார்த்துக்கொள்ள நான்கு முறைகளைக் கையாண்டார். முதலாவ தாக, அவர் எபிரெய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டையோ அல்லது கிரேக்க மொழியில் இருந்த புதிய ஏற்பாட்டையோ பிரசங்க மேடையில் தன்னுடைய கையில் சபையார் பார்க்கும்படியாக வைத்திருப்பார். அதாவது புதிய ஏற்பாட்டில் பிரசங்கம் செய்வதானால் கிரேக்க புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்வதானால் எபிரெய பழைய ஏற்பாட்டையும் எல்லோருக்கும் தெரியும்படி கையில் வைத்திருப்பார். அன்று இவை தனித்தனியாக இருந்தன. இப்படிச் செய்வது அவசியமாக இருந்த போதும் அன்றைக்கு பொதுவாக ஒருவரும் இப்படிச் செய்ததில்லை. இப்படி வேதத்தைக் கையில் வைத்திருந்து பிரித்து வாசித்ததும், பயன்படுத்தியதும் சபையார் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சபையார் மத்தியில் கையில் வேதத்தோடு இப்படிக் கல்வின் நின்றது கர்த்தர் பேசப்போகிறார் என்பதையும், பிரசங்கி பேசப்போகிற பொருளின் மூலம் பேசப்போகிறார் என்பதையும் சபையார் உணரும்படிச் செய்திருக்கும். இரண்டாவதாக, கல்வின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் பிரசங்கித்து முடிப்பதைத் தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தார். புதிய ஏற்பாட்டிலிருந்தும், சங்கீதப் புத்தகத்திலிருந்தும் ஓய்வு நாளில் பிரசங்கம் செய்வதை வழமையாகவும், வார நாட்களில் பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்வதை வழமையாகவும் கொண்டிருந்தார். இப்படிச் செய்ததன் மூலம் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்தே வேதமாக இருப்பதையும், அதன் செய்தியைப் புரிந்துகொள்ள இரண்டையும் ஒப்பிட்டுப் படிப்பது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுவது அவருடைய நோக்கமாக இருந்தது. வேதத் தின் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்கு எப்படி நம்மை வழிநடத்துகிறது என்பதில் அவருக்கு நல்ல பரிச்சயம் இருந்தது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியை அது காணப்படும் நூலின் போதனைகளின் அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். அத்தோடு, அந்தப் பகுதிக்கும் முழு வேத போதனை களுக்கும் உள்ள தொடர்பையும் அவர் கவனிப்பதில் அதிக சிரத்தை காட்டினார். எல்லாக் காலங்களிலும் கர்த்தருடைய மக்கள் அவருடைய ஆட்சியின் கீழ் ஒரு கூட்டமாக இருக்கிறார்கள் என்ற போதனையையும், இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தரின் கிருபையின் சுவிசேஷம் கிடைக்கிறது என்ற சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டே கல்வினின் பிரசங்கம் எப்போதும் அமைந்திருந்தது. கர்த்தரின் வார்த்தையே மக்களைக் கர்த்தருடைய மக்களாக்குகிறது என்பது கல்வினின் நம்பிக்கை.

மூன்றாவதாக, அவருடைய பிரசங்கம் கர்த்தரின் ஆராதனையை அடிப் படையாகக் கொண்டு எப்போதும் கொடுக்கப்பட்டது. ஜெபத்திற்கான அழைப்பும் அல்லது ஆண்டவரின் ஜெபமும் அவருடைய பிரசங்கத்திற்கு முன்போ முடிந்தபிறகோ எப்போதும் தொடர்ந்து காணப்படும். அவருடைய ஜெபம் எப்போதுமே சாதாரணமாக அதேவேளை மிகவும் வல்லமையுள்ளதாக பின்வரும் பாணியில் காணப்பட்டது: ‘நாம் இப்போது கர்த்தருக்கு முன் பணிந்து எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் அவர் முன் அறிக்கையிட்டு அவருடைய துணையை நாடி வருவோம்.’ இப்படிச் செய்ததன் மூலம் கல்வின், வேதத்தின் ஜீவனுள்ள ஆசிரியரான கர்த்தரோடு நாம் ஐக்கியத்தில் வருகிற வேளைகளில்தான் வேதம் வாசிக்கப்படவும், பிரசங்கிக்கப்படவும் வேண்டும் என்பதையும், கர்த்தருடைய கிருபையின் அடிப்படையிலான ஆசீர்வாதம் இல்லாமல் எந்தப் பிரசங்கமும் ஆசீர்வாதத்தை அடைய முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இது ‘அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது’ என்ற வேத வார்த்தைகளின் இன்னொரு அம்சமாக இருந்தது.

நான்காவதாக, கல்வின் எப்போதுமே தான் பிரசங்கத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிற வேத வசனங்களையும், தன் சபையாரையும் நன்றாகப் படித்து வைத்திருந்தார். அச்சுக்கூடத்தை ஆரம்பித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கொன்ரட் பேடியஸ் (Condrad Badius) என்பவர். அவர் அடிக்கடி கல்வினின் பிரசங்கங்களைக் கேட்டிருந்தார். அவற்றைப் பற்றி அவர் எழுதுகிறபோது, ‘அவருடைய பிரசங்கங்கள் வெறுமனே டஜன் கணக்கில் உருவாகி விடவில்லை, அவையனைத்தும் அவருடைய சபையாருடைய தேவைகளுக்கு ஏற்ற முறையில் மிகுந்த சிந்தனையோடும் ஆராய்ச்சியோடும் தயாரிக்கப்பட்டிருந்தன’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இனி வரப்போகும் விஷயங்களை நான் விளக்க விரும்புகிறேன்.

அவருடைய பிரசங்கங்கள் சிந்தித்து தயாரிக்கப்பட்டவை கல்வின் எழுதிய கிறிஸ்தவ இறையியலுக்கும், வேத விளக்கவுரைகளுக் கும், அவருடைய பிரசங்கங்களுக்குமிடையில் மிகுந்த வேறுபாடு இருந்தது. அவர் எப்போதுமே தன்னுடைய பிரசங்கங்களை எழுதி வைத்ததில்லை.

கல்வின் ஒரு மகா ஞானி. அவருடைய ஞாபக சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை. அவரோடு நம்மை ஒப்பிட முடியாது. இன்றைய பிரசங்கிகள் இதற்காக பிரசங்கத்தை எழுதி வைக்காமல் இருந்துவிடக் கூடாது. - ஆர்). அத்தோடு ஏனைய நூல்களைப் போல அவற்றை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் மறுபடியும் அலசிப் பார்த்து திருத்தங்கள் செய்ததுமில்லை. சங்கீதம் 119ல் அவர் தந்த பிரசங்கங்களின் முன்னுரையில் கல்வின் பின்வருமாறு எழுதியிருக்கிறார், ‘இவற்றை நான் தயாரித்தபோது என்னுடைய அறையில் அமர்ந்து எழுதவில்லை. நான் எப்படி இவற்றை சபையில் பிரசங்கம் செய்தேனோ அப்படியே இங்கே எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து எங்களுடைய வழமையான போதனைகளும், பிரசங்கங்களும் எந்த முறையில் அமைந்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.’ கல்வினுடைய இந்த வார்த்தைகளுக்குப் பொருளென்ன? அவருடைய பிரசங்கத் தயாரிப்பு மிகக் கவனத்தோடும் அக்கறையோடும் செய்யப்பட்டதாகவும், ஆத்மார்த்தமானதாகவும் இருந்தது. அவர் பிரசங்கத்தைக் கவனத்தோடு தயாரிக்காமலிருப்பதை வெறுத்ததோடு அதைப் பற்றி ஒருமுறை பின்வருமாறு விளக்கியிருக்கிறார்:

‘நான் வேதத்தைப் படிக்காமல் பிரசங்க மேடைக்கு வந்து, ‘நான் பிரசங்கம் செய்கிறபோது கர்த்தர் நான் பேசுவதற்கு நிறையவே விஷயங்களைத் தருவார்’ என்று எனக்குள் எண்ணிக்கொண்டு வேதத்தைப் படிப்பதற்கு எந்தவித அக்கறையும் காட்டாமலும், இன்றைக்கு எதைப் பேசலாம் என்று எண்ணிக் கொண்டும், கர்த்தரின் செய்தியை கேட்பவர்களுக்கு உதவும் விதத்தில் நடை முறைக்குப் பயனுள்ளதாக எப்படிச் சொல்வது என்று நினைத்துப் பார்க்காமலும் இருப்பேனேயானால், நான் மிகுந்த அகம்பாவம் பிடித்தவனாகத்தான் இருப்பேன்’ என்கிறார்.

கல்வினுடைய ஏனைய வேலைகள் எல்லாவற்றினாலும் ஏற்பட்ட பலன்கள் எல்லாம் பிரசங்கத்திற்கான வசனத்தைப் பற்றிச் சிந்திப்பதற்காகவே பயன்பட்டது. மதிப்புக்குரிய ஒருவர் கல்வினின் பிரசங்கத் தயாரிப்பு முறையைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்:

அவர் பிரசங்கத்தைப் தயாரிக்கும்போது அதுபற்றி மற்றவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை வாசிப்பார், முக்கியமாக ஆரம்பகால சபைப் பிதாக்கள், சக சீர்திருத்தவாதிகள், ஏனைய அறிஞர்கள் ஆகியோர் சொன்னவற்றை சிந்தித்துப் பார்ப்பார். தன்னுடைய சிறந்த வேத அறிவைப் பயன்படுத்தியும், மொழிப் புலமையைப் பயன்படுத்தியும் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக் கும் வேத வசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றை நுணுக்கத்தோடு ஆராய்வார். இறுதியில் அந்தப் பகுதியில் இருந்து சபையாருக்கு அளிக்க வேண்டிய பயன் பாடுகளை ஆராய்ந்து அவற்றை எந்தவகையில் தெளிவாக அவர்களுக்கு விளக்குவது என்பதில் கவனம் செலுத்துவார்.

இவையெல்லாமே அவருடைய மனதில் உருவாகி ஆச்சரிய மூட்டும் வகையில் அவருடைய மனதில் பதியப்பட்டிருக்கும்.

இந்த முறையில் வேத வசனங்களை ஆராய்ந்து தேவையான விஷயங் களைத் திரட்டி அவற்றை முறைப்படித் தன்னுடைய மனதில் பதிய வைத்த கல்வினின் பிரசங்கத் தயாரிப்பு முறை தெளிவான ஒரு பிரசங்கத்தை மட்டும் தயாரிக்க உதவாமல் அவரையும் ஆத்மீக ரீதியில் தயார் செய்தது. இதன் பலனாக பிரசங்கம் செய்யப்பட்ட செய்தி உயிர்த்துடிப்புள்ளதாக இருந்தது.

அவை சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவிதத்தில் அமைந்திருந்தன கல்வின் தன்னுடைய எழுத்து நடையைப் பிரசங்கத்தில் கையாள வில்லை. பிரசங்கம் செய்வதில் மற்றவர்கள் பயன்படுத்திய விசேஷ அம்சங்களையும் பின்பற்றவில்லை. வரலாற்றில் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த ஒரிகன், கிரிசொஷ்டம், ஆகஸ்தீன் ஆகியோர் பின்பற்றிய பிரசங்க முறையை அவர் கையாண்டார். இவர்கள் எல்லோரும் கேட்பவர்களுக்கு பரிச்சயமான முறையில் பிரசங்கம் செய்திருந்தனர். வேதத்தைக் கல்வின் உருவகப்படுத்தியோ அல்லது அதிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தைத் தலைப்பாகக் கொண்டோ பிரசங்கிக்கவில்லை. வேதத்தில் வசனங்களைக் கர்த்தர் எப்படித் தந்திருக்கிறாரோ அந்த விதத்திலேயே படிப்படியாக வசனம் வசனமாக விளக்கி கேட்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமான முறையில், அவர்களுடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் பிரசங்கம் செய்தார்.

தன்னுடைய பிரசங்கங்களில் அவர் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆத்துமாக்களோடு பேசினார். தான் பேசப் போகும் வசனங்களுக்கு முன்னைய வசனங்கள் பற்றிய தெளிவான சிறு சுருக்கத்தை ஆரம்பத்தில் அவர் கொடுப்பார். அதன் பிறகு பிரசங்க வசனங்களை முறைப்படுத்தி விளக்கினார். அப்போது அவற்றில் காணப்படும் வார்த்தைகளையும், சொற்பிரயோகங்களையும் விளக்கி சத்தியம் கேட்பவர்களின் இருதயங்களில் பதியும்படிச் செய்தார். அவர் ஆரம்பம் முதல் வசனங்களைவிட்டு விலகாமல் அதில் கவனத்தைச் செலுத்தினார். கல்வின் வார்த்தை சிலம்பத்தையும், வார்த்தை ஜம்பத்தையும் வெறுத்தார். அவர் ஒருபோதும் வேறு எவரும் எழுதிய குறிப்புகளைப் பிரசங்கத்தில் கொடுத்ததில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் குழப்பமில்லாமலும், அவருடைய உதாரணங்கள் சாதாரண மனிதனுடைய அன்றாட அனுபவங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் இருந்தன. அவருடைய தெளிவான பேச்சில் அன்றாட நகர, கிராமப்புற அனுபவங்களின் வாசனை பலத்துக் காணப்பட்டதோடு அவர் ஊழியம் செய்த மக்களுடைய வாழ்க்கையின் மிகச் சாதாரண அனுபவங்களையும் உள்ளடக்கியிருந்தது.

கர்த்தர் பேசியதை அவர் எவ்வாறு கேட்டாரோ அதேவிதம் அந்தச் செய்தியை அவர் தன்னுடைய மக்களுக்கு வேத வசனங்களில் இருந்து காட்டினார். போதனையாக இருந்தாலும், திருத்துவதாக இருந்தாலும், எச்சரிப்பதாக இருந்தாலும் கர்த்தர் பயன்படுத்திய தொனியைப் பயன் படுத்தி அவர் சத்தியத்தைப் போதித்தார். கர்த்தருடைய வார்த்தைக்கும் மனிதனுடைய வார்த்தைக்கும் இடையில் காணப்படும் அத்தகைய நெருக்கத்திற்குப் பெயர்தான் மெய்யான பிரசங்கம்.

[பேனர் ஆப் டுரூத் சஞ்சிகையில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஆக்கம். பத்திரிகைக்கு எங்கள் நன்றி.]

கல்வினை ஏன் இன்று நினைவுகூர வேண்டும்?

ஒரு மனிதரையோ அல்லது நடந்தவொரு சம்பவத்தையோ பாரம்பரியமாக வெறும் கடமைக்காக நினைவுகூருவதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. அதுவும் தமிழினத்தில் எதுவும் உடனடியாகப் பாரம்பரியக் கொண்டாட்டமாகி விடுகிறது. இந்த ஆபத்தை மனதில் வைத்துக் கொண்டே இங்கே ஜோன் கல்வினைப் பற்றி எழுத விரும்புகிறேன். அவருடைய 500வது பிறந்த தினத்தை இந்த வருடம் பாரம்பரியமாகத் கொண்டாட வேண்டும் என்பதல்ல என்னு டைய வேண்டுகோள்; அவர் யார்? எத்தகைய சாதனைகளைச் செய்தார்? அந்தளவுக்கு அவர் செய்த காரியங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? என்பவற்றை சிந்தித்துப் பார்த்து வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். 1. வரலாற்றை நாம் உதாசீனம் செய்யக் கூடாது.

வரலாறு என்பது கர்த்தரின் கதை என்று சொல்லுவார்கள். அது உண்மைதான். உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கர்த்தர் அதைக் கொண்டு நடத்தி பராமரித்து வருகிறார். உலகில் நடக்கும் அத்தனைக்கும் அவரே ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கிறார். பழைய ஏற்பாடு வேதமாக இருந்தபோதும் உண்மையில் ஒரு வரலாற்று நூல். அது உலகத் தொடக்கத்தில் இருந்து கர்த்தர் எந்த வகையில் கிரியை செய்தார் என்பதை விளக்குகிறது. வரலாற்றை உதாசீனம் செய்தால் கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் முடிவை யும் அறிந்துகொள்ள முடியாமல் போகும். இன்றைக்கு வரலாற்றை அதுவும் கிறிஸ்தவ வரலாற்றை அறியாமலும், அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் காட்டாமலும் இருப்பதால்தான் கிறிஸ்தவம் நம்மினத்தில் தரம் குன்றிக் காணப்படுகிறது; தடுமாற்றத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறது.

சீர்திருத்த சபைகளும், சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றி வருகிறவர்களும் வரலாற்றை அலட்சியம் செய்யவே முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு நம்முடைய போதனைகள் வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி தொடர்புள்ளதாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ சபை வரலாறு தெரியாமல் சீர்திருத்தப் போதனைகளைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமே. அதனால் திருச்சபை வரலாறு நமக்குப் பேரவசியமாக இருக்கின்றது.

ஜோன் கல்வினைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள நமக்கு கிறிஸ்தவ வரலாற்று அறிவு அவசியம். இந்தியாவில் எழுதி வெளியிடப் பட்டிருக்கும் சபை சரித்திர நூல்கள் அனைத்தும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால் அவை பயன் தராது. ரோமன் கத்தோலிக்க மதத்தையே மெய்யான திருச்சபையாகக் காட்டி, சீர்திருத்தவாதிகள் ஒரு சில குறைகளுக்காக சபையை விட்டு விலகிப் போனார்கள் என்றும், ஒரு காலத்தில் திரும்பி வந்துவிடுவார்கள் என்ற அடிப்படையிலும் இந்திய சபை சரித்திர நூல்களில் பெரும்பாலானவைகள் விளக்கமளிக்கின்றன. உண்மையில் ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத் தோடு தொடர்புடையதல்ல. அது இந்து மதத்தைப் போன்ற கிரியைகளை அடிப்படையாகக் கொண்ட மதம். அதற்கும் கர்த்தரின் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் தான் ஜோன் கல்வின் போன்றோர் அந்த மதத்தில் ஆரம்பத்தில் இருந்த போதும் மனந்திரும்புதலையும், விசுவா சத்தையும் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக் கொண்டபின் அந்தச் சாக்கடை மதத்தை விட்டு வெளியே வந்து மெய்த்திருச்சபைகளை நிலை நாட்ட நடவடிக்கை எடுத்தார்கள். அப்படியாக 16ம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதமாகிய மதம் பிடித்த யானையை எதிர்த்து நின்று கர்த்தருடைய வேதத்திற்கு மட்டும் மதிப்புக் கொடுத்து அதன் போதனைகளின் அடிப்படையில் ஜெனீவாவில் திருச்சபையை அமைத்துப் போதனை செய்து திருச்சபை சீர்திருத்தம் ஐரோப்பா எங்கும் பரவக் காரணமாக இருந்தவர் கல்வின். கல்வினுக்குப் பின்னால் இருந்தவர் வரலாற்றின் நாயகனான கர்த்தரே. கல்வினின் பெயரைக் கேட்கும் போதெல்லாம் சபை வரலாற்றின் அவசியத்தை நாம் உணர்வது அவசியம்.

  1. சீர்திருத்தக் கிறிஸ்தவத்தோடு கல்வினின் பெயர் தவிர்க்கமுடியாதபடி இணைந்திருக்கிறது.

கல்வினின் பெயரில்லாமல் சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கு விளக்கம் கொடுக்க முடியாது. மார்டின் லூதர் இரட்சிப்பின் அடிப்படைப் போதனையாகிய நீதிமானாக்குதலை நிலை நிறுத்தினாரென்றால், ஜோன் கல்வின் சீர்திருத்தப் போதனைகள் அனைத்திற்கும் முழு உருவம் கொடுக்கும் பணியில் கர்த்தரால் வரலாற்றில் பயன்படுத்தப்பட்டவராக இருந்திருக்கிறார். சீர்திருத்தப் போதனைகளுக்கு வரலாறு தரும் இன்னொரு பெயர் ‘கல்வினிசம்’. அதற்குக் காரணம் அந்தளவுக்கு சீர்திருத்தப் போதனைகளை உலகம் அறிந்துகொள்ளும் வகையில் வேதத்தில் இருந்து விளக்கி கல்வின் போதித்தார். சிலர் தவறாக, சீர்திருத்தப் போதனைகளை கல்வினுடைய சொந்தப் போதனைகளாக எண்ணி விடுகின்றனர். அதற்குக் காரணம் வரலாற்றறிவு அவர்களுக்கு இல்லாததுதான். உண்மையில் வேதத்தை மக்கள் வாசிக்க முடியாத நிலையிலும், வாசித்து தனிப்பட்ட முறையில் விளக்கமளித்தால் உயிரே போய்விடக்கூடிய ஆபத்துமிருந்த அந்தக் காலத்தில் வேதத்தை மூல மொழிகளில் கவனத்தோடு ஆராய்ந்து படித்து அவற்றின் போதனைகளைக் கர்த்தருக்குப் பணிந்து தெளிவாகப் போதித்ததுதான் கல்வின் செய்த பணி. அவரே அன்றைக்கு வேத போதனைகளை மக்களறியும்படி வெளிப்படையாகப் போதித்தார், வேத விளக்கவுரை நூல்களை எழுதினார், மகத்தான கிறிஸ்தவ இறையியல் நூலை எழுதி வெளியிட்டார். அவரில்லாமல் உலகம் சத்தியத்தை அறிந்து கொள்ள வழி இருந்திருக்காது. கர்த்தர் தகுந்த காலத்தில் எழுப்பிய தீர்க்க தரிசி ஜோன் கல்வின். அவர் உருவமளித்து, தெளிவாகப் போதித்தது தான் கிருபையின் போதனைகளும், சீர்திருத்த சத்தியமும்.

  1. வளரும் சந்ததியினர் அவரைப் பற்றி அறிந்துகொள்ளுவது அவர்களுடைய வளர்ச்சிக்கு அவசியம்.

நம்மினம் ஜோன் கல்வினைப் பற்றி அறியாமலேயே இருந்து வந்தது. இன்றைக்கும் பெருந்தொகையினருக்கு அவரைப் பற்றித் தெரியாது, ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பவர்களும் அறைகுறை அறிவோடு அவர் ஏதோ தவறாகப் போதித்து நடந்துகொண்டதைப் போல எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற ஜோன் கல்வினைப் பற்றி நாம் வாசித்து அறிந்துகொள்ளுவதோடு அவரைப் பற்றி வளரும் சமுதாயம் தெரிந்து கொள்ள ஆவன செய்யவேண்டும். அவருடைய வேத போதனை களைப் பலரும் அறிந்துகொள்ள உதவ வேண்டும். முக்கியமாக வளரும் சமுதாயம் அவரைப் பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளாமலிருப்பது கிறிஸ்தவத்தின் சிறப்பை அவர்கள் உணர முடியாமல் செய்துவிடும்.

திருச்சபைப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் வேதத்தைப் போதிப்பதோடு நின்று விடாமல் சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை சபை சரித்திரத்தையும், கல்வினின் வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய போதனைகளையும் அறிந்து வைத்திருக்க உதவ வேண்டும். தொடர்ந்து அத்தகைய போதனைகளை அளிப்பதால் மட்டுமே சீர்திருத்தப் போதனை களை மட்டுமல்ல அதோடு தொடர்புடைய வரலாற்றையும் அறிந்து கொண்டு சத்தியத்தை நிச்சயத்தோடு பின்பற்ற நம் மக்களால் முடியும். ஞாயிறு வகுப்புகளிலும், வாலிபர்கள் கூட்டங்களிலும் கல்வினைப் பற்றி நம் மக்கள் அறிந்துகொள்ள நாம் ஏன் பாடம் எடுக்கக் கூடாது? இதை யெல்லாம் செய்யும்போது இவை வெறும் சடங்காக மாறிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நிலை ஏற்பட்டு விடாதபடி போதனைகளை அளிக்க வேண்டும். கல்வினைப் போல இன்னொருவர் தோன்றுவது கடினம். அவருடைய வாழ்க்கையும் பணியுமாவது நாம் விசுவாசத்தோடு கர்த்தருக்குப் பணி செய்ய உதவட்டும்.

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.