திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2012 -ம் ஆண்டு முதல் இதழ்

1. வாசகர்களே!

2. பொது ஆராதனையும் ஓய்வு நாளும்

3. பொது ஆராதனை

4. கீழ்ப்படிவில்லாத அன்பா, அன்பு சார்ந்த கீழ்ப்படிவா?

5. தாம்பத்திய உறவில் நெருக்கம் - அலன் டன் -

 

வாசகர்களே!

இன்னுமொரு புதிய வருடத்தை கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். உங்களனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கர்த்தரின் வழிநடத்தலையும், ஆசீர்வாதத்தையும் உணர்வுபூர்வமாக அறிந்தவர்களாக நீங்கள் வாழ படைத்தவர் உதவட்டும். பலவிதமான இக்கட்டுகளை இந்தக் காலங்களில் உலகம் சந்தித்து வருகிறது. இயற்கை அழிவுகள் மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியும் அரசியல் மாற்றங்களும் தேசங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எதைப் பார்த்தும் அசையாமல் இருக்கிறான். கர்த்தருடைய இரக்கத்திற்காக அவன் கதறுகிற நிலை வராதவரை அவன் மெய்யான சமாதானத்தை அடைய வழி இல்லை. இந்த இதழில் பெரியவர் ரைலின் ஆராதனை பற்றிய ஆக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். சபை ஆராதனை இன்றைக்கு மனித உணர்ச்சிக்கு தூபம் போட்டு அவனை மகிழ்விக்கின்ற ஒரே காரியத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு எங்கும் நடந்து வருகின்றது. ஆராதனை எதற்கு? யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எதற்கும் மதிப்பளிக்காமல் நடந்து வருகிற இந்நாளில் ரைலின் ஆக்கம் உங்கள் சிந்தனைக்கு உணவூட்டும். அதோடு தொடர்புடையதாக ஆராதனை நாளான ஓய்வு நாளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். 'பாவத்தை அழித்தல்' பற்றிய இரண்டாவது ஆக்கத்தையும் இந்த இதழில் பார்க்கலாம். போதகர் அலன் டன்னின் 'தாம்பத்திய உறவு' பற்றிய ஆக்கத்தையும் இதில் காணலாம். இந்த ஆக்கங்கள் அனைத்தும் இந்த விஷயங்களை வேதபூர்வமாக உங்களை அணுக வைக்க உதவ வேண்டுமென்பதுதான் என்னுடைய வாஞ்சை. 'எது மனதைக் குளிர வைக்கிறதோ, எது என் சுய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறதோ அதுவே வேதம்' என்ற போக்கில் பலரும் நடந்து வருகின்ற நம்மினத்துக் கிறிஸ்தவ சமுதாயத்தில் கர்த்தரின் வார்த்தை வல்லமையானது, அது மட்டுமே நம் வாழ்க்கைக்கும், ஆராதனைக்கும், கிறிஸ்தவ ஊழியத்துக்கும் அத்திவாரம் என்ற தூய்மையான வேத எண்ணங்கள் நம் மக்களுடைய இருதயத்தில் ஆலம் விழுதாக வித்திட்டு, வேர்விட்டு, தளைத்து வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இவற்றை உங்கள் முன் வைக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய ஆத்மீகக் கண்களை சத்தியத்தின் மூலம் திறக்கட்டும். இந்த இதழை நல்லமுறையில் தயாரித்து வெளியிடவும், விநியோகிக்கவும் என்னோடு இணைந்து தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரதிபலன் பாராமல் உழைத்து உதவியிருக்கும் நல்ல இதயங்களுக்கு என் நன்றி. - ஆசிரியர்

பொது ஆராதனையும் ஓய்வு நாளும்

சமீபத்தில் நான் ஒரு போதகர்களுக்கான கிறிஸ்தவ மகாநாட்டில் கலந்துகொண்டேன். மகாநாட்டில் பேசப்பட்ட விஷயம், 'கர்த்தரின் நியாயப்பிரமாணம்'. இந்தத் தலைப்பிற்கான காரணத்தை மகாநாட்டில் பேசியவர்கள் விளக்கத் தவறவில்லை. நம்மைச் சுற்றிலும் இன்றைக்கு 'அன்டிநோமியனிசம்' கிஸீ௴வீஸீஷீனீவீணீஸீவீ௳னீ (நியாயப்பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு அவசியமில்லை என்று வாதிடுபவர்கள்) அதிகமாகவே பரவிக்காணப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாக இருந்தார்கள். கீழைத்தேய நாடுகளில் கிறிஸ்தவம் 'அன்டிநோமியனிசத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் நியாயப்பிரமாணத்தின் அவசியம் இறையியல்பூர்வமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் விளக்கமாக போதிக்கப்படாததே. மேலைத்தேய நாடுகளில் கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் அறிந்து தவறு செய்கிறார்கள்; கீழைத்தேய நாடுகளில் பெரும்பாலும் சத்தியத்தை அறியாமல் தவறு செய்கிறார்கள். அதுதான் வித்தியாசம். அன்டிநோமியனிசம் (நியாயப்பிரமாணத்தை நிராகரித்தல்) ஆபத்தான போதனை. அதைப் பின்பற்றுபவர்கள் கர்த்தரின் நியாயப்பிரமாணம், அதாவது கர்த்தரின் பத்துக் கட்டளைகளை கிறிஸ்தவர்கள் இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கை நியதிகளாக கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று விளக்குகிறார்கள். இதை மேலும் விளக்குவதானால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடமைப்பாட்டோடு நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய, பரிசுத்த வாழ்க்கைக்கு அவசியமான வாழ்க்கை விதிகளாக பத்துக் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பது இவர்களுடைய வாதம். இதை இவர்கள் நியாயப்படுத்த பயன்படுத்துகிற வாதம், 'நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, கிருபையின் கீழ் இருக்கிறோம்' என்ற ரோமர் 6:15ன் பவுலின் வார்த்தைகள்தான். இந்த ஆக்கத்தில் பவுலின் வார்த்தைகளுக்கு நான் நீண்ட விளக்கத்தைத் தர வசதியில்லை. பவுல், 'நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை' என்று எழுதியபோது பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் போன்றவற்றில் விளக்கப்பட்டிருக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கு சொந்தமான பலி, சடங்கு போன்ற நியாயப்பிரமாணத்தின் அம்சங்களை மனதில் வைத்து எழுதினாரே தவிர பத்துக்கட்டளைகளைக் குறித்து எழுதவில்லை. இதை நான் சொன்னவுடனேயே அன்டிநோமியனிசத்தார் அதை ஆக்ரோஷத்தோடு மறுதலிப்பார்கள். ஏனெனில், சீர்திருத்தவாத போதனையாளர்கள் நியாயப்பிரமாணத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து விளக்குவதை அவர்கள் அடியோடு எதிர்க்கிறார்கள். நியாயப்பிரமாணத்தை வேதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கவில்லை என்றும், அது ஒன்றுதான் என்றும், நியாயப்பிரமாணம் நமக்கில்லை என்று பவுல் எழுதியபோது நியாயப்பிரமாணம் முழுவதும் முற்றாக இந்தப் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவசியமில்லை என்றே பவுல் கூறுகிறார் என்றும் அவர்கள் வாதம் செளிணிவார்கள். அவர்களுடைய இந்த வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நியாயப்பிரமாணம் மூன்று பிரிவுகளை, அதாவது, (1) பலி மற்றும் சடங்குகள், (2) நீதிச் சட்டங்கள், (3) பத்துக் கட்டளைகள் (ஒழுக்க நியதிகள்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை வேதம் பல இடங்களில் தெளிவாக விளக்குகிறது. இந்தப்போதனையை வேதத்தை ஆராளிணிந்து விளங்கிக்கொள்ள வேண்டுமே தவிர ஒரே பகுதியில் அதை எதிர்பார்ப்பது பெருந்தவறு. நாம் திரித்துவ போதனையையும், சபை அங்கத்துவம் பற்றிய போதனையையும் அவற்றைப் போன்ற வேறு பல அவசியமான போதனைகளையும் எவ்வாறு ஆராளிணிந்து விளங்கிக்கொள்ளுகிறோமோ அதேபோலத்தான் நியாயப்பிரமாணத்தைப் பற்றிய போதனையையும் ஆராளிணிந்து விளங்கிக்கொள்ள வேண்டும். நியாயப்பிரமாணம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது என்று ஒரே வசனத்தில் எங்கும் விளக்கப்படவில்லை என்று வாதிடுவது, திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை அதனால் திரித்துவம் என்ற போதனை வேதத்தில் காணப்படவில்லை என்று விளக்குகிற முட்டாள்தனமான வாதமாக அமைந்துவிடும்.

நியாயப்பிரமாணத்தில் காணப்படும் மூன்று பிரிவுகளை சீர்திருத்தப் பெரியவர்கள் தெளிவாக விசுவாச அறிக்கைகளில் விளக்கியிருக்கிறார்கள். அதை 1689 விசுவாச அறிக்கையில் 19ம் அதிகாரத்தில் (கர்த்தரின் நியாயப்பிரமாணம்) காணலாம். இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு பத்திகளும் கர்த்தர் நியாயப்பிரமாணத்தை (ஒழுக்க விதிகள்) ஆதியில் ஆதாமின் இருதயத்தில் எழுதியதாகவும், ஆதாம் பாவத்தில் விழுந்த பிறகு அந்த நியாயப்பிரமாணமே மனிதன் நீதியாக வாழ்வதற்கு அடிப்படையாக இருந்ததென்றும், அவற்றையே கர்த்தர் மோசேக்கு சீனாய்மலையில் பத்துக்கட்டளையாக எழுத்தில் தந்ததையும் விளக்குகிறது. தொடர்ந்து இந்த அதிகாரம் நியாயப்பிரமாணத்தின் எந்தெந்தப் பகுதிகள் யூதர்களுக்கு மட்டும் பொருத்தமானவை என்பதையும் (பத்தி 4), எந்தெந்தப்பகுதிகள் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு என்றும் அவசியமானவை என்பதையும் (பத்தி 5, 6) விளக்கமாகத் தருகின்றது. பவுல், ரோமர் 6:7-12லும், 6:14லும் ந¤யாயப்பிரமாணம் பரிசுத்தமானதென்றும், அதன் மூலமே பாவத்தை தான் அறிந்துகொண்டதாகவும், அதுவே தன்னைப் பாவ வாழ்க்கையில் போளிணிவிடாதபடி தடுத்து உதவுகின்றது என்பதையும் ஆணித்தரமாக விளக்குவதை அன்டிநோமியனிசத்தார் கவனிப்பதில்லை. கிருபையின் காலத்தில் நியாயப்பிரமாணத்தின் ஒருபகுதியான, ஒழுக்க விதிகளான பத்துக் கட்டளைகளை கிறிஸ்தவர்கள் சாகும் வரையிலும் பின்பற்றி வாழவேண்டுமென்பதை பவுல் ரோமர் மற்றும் கலாத்தியர் நிருபங்களில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இதுவரை நான் விளக்கியிருப்பது சபையின் பொது ஆராதனை பற்றிய இந்த ஆக்கத்தோடு எந்தவிதத்தில் சம்பந்தப்பட்டது என்று நீங்கள் யோசிக்கலாம். அது நியாயமானதுதான். இந்த ஆக்கத்தில் நான் ஆராதனையோடு பிரிக்க முடியாத தொடர்புடையதாக ஓளிணிவு நாளை இணைத்து விளக்கப் போவதால் ஓளிணிவு நாளை கிருபையின் காலத்தில் பின்பற்ற அவசியமில்லை என்று விளக்கும் அன்டிநோமியனிசப் போதனையை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் என்றைக்கும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகளான பத்துக் கட்டளைகளில் ஒன்றான ஓளிணிவு நாளை அன்டிநோமியனிசத்தார் நமக்கு அவசியமில்லை என்று நிராகரிக்கிறார்கள். அன்டிநோமியனிசப் போதனையினால் பாதிக்கப்பட்டுள்ள அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரின் நாளான ஓளிணிவு நாளை முறையாகக் கடைப்பிடிக்காமல் அதை வெறும் சாதாரண நாளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கர்¢த்தரின் நாளான ஓளிணிவு நாளை அநேக கிறிஸ்தவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருவதற்கு இறையியல் காரணங்களும், நடைமுறைக் காரணங்களும் இருக்கின்றன என்பதற்காகத்தான் இதை நான் விளக்க வேண்டியது அவசியமாயிற்று. பழைய அன்டிநோமியனிசப் போதனை இன்றைக்கு புதிய பெயர்களிலும், புதிய ரூபங்களிலும் உலவி வருகின்றது. செயற்கையாக காலங்களைப் பகுத்து விளக்கும் டிஸ்பென்சேஷனலிசம் நியாயப்பிரமாணத்தை நிராகரிக்கும் ஒரு போதனை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பத்துக் கட்டளைகளை என்றைக்கும் அவசியமான ஒழுக்க விதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த பத்து வருடங்களுக்குள் மேலை நாட்டு பாப்திஸ்து சபைகளின் மத்தியில் உருவான 'புதிய உடன்படிக்கை இறையியல்' போதனையையும் நியாயப்பிரமாணத்தையும், பத்துக் கட்டளைகளையும் கிறிஸ்தவர்களுக்கு அவசியமில்லாதவைகளாக விளக்குகின்றது. இதற்குப் பிறகு சமீப காலமாக உருவாகியுள்ள 'புதிய கல்வினிசம்' என்ற குழுவினர் கிருபையின் போதனைகளைத் தவிர வேறெதற்கும் கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையில் நடந்து வருகின்றது. பழைய அன்டிநோமியனிசப் போதனை இவ்வாறாக புதிய ரூபங்களில் உருமாற்றம் அடைந்து கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் ஒன்றான ஓளிணிவுநாளின் அவசியத்தை நிராகரித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்கின்றது. கர்த்தரின் நாளான ஓளிணிவு நாளை எந்தளவுக்கு கிறிஸ்தவர்கள் இன்றைக்கு பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை விளக்கும்போது மேலே நான் விளக்கியுள்ள தவறான இறையியல் கருத்துக்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இனி, நாம் சபை ஆராதனையான பொது ஆராதனைக்கும் (றி௵தீறீவீநீ ஷ்ஷீக்ஷீ௳லீவீஜீ) ஓளிணிவு நாளுக்கும் (லிஷீக்ஷீபீ'௳ ஞிணீஹ்) இடையில் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை அறிந்துகொள்வது அவசியமாகின்றது. சமீபத்தில் எங்கள் சபையில் புதிதாக அங்கத்தவர்களாக இணைய விரும்புகிறவர்களுக்கான வகுப்பை நான் என்னுடைய சக மூப்பரோடு சேர்ந்து எடுக்க நேர்ந்தது. அதில் அங்கத்தவர்களுக்கான பொறுப்புக்களைப் பற்றி விளக்குவதற்கான பாடத்தை நான் தயாரித்துக்கொண்டிருந்தபோது சபைக்கு விசுவாசமாக இருந்து ஆராதனைக்குரிய சபைக்கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் தவறாது வருகை தர வேண்டும் என்ற அம்சத்தை எந்த முறையில் தெளிவாக விளக்கலாம் என்று ஜெபத்தோடு சிந்தித்து பாடத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு முக்கியமான விஷயத்தை நான் உணர்ந்தேன். அதாவது, சபை அங்கத்தவர்கள் சபை ஆராதனை மற்றும் ஜெபக்கூட்டங்களில் கர்த்தருக்குரிய பயத்தோடு தவறாது கலந்துகொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் ஓளிணிவு நாளைக் குறித்த அசையாத நம்பிக்கையும், அதை மாசுபடுத்தாமல் கர்த்தருடைய நாளாகக் கருதி பயன்படுத்த வேண்டும் என்ற வாஞ்சையும் இருக்க வேண்டும் என்பதுதான். சபை ஆராதனைக்கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் தவறாது வர வேண்டும் என்று நாம் நம்புகிறோம், அதைக்குறித்து அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். ஆனால், அது பற்றிய பலத்த நம்பிக்கை சபைக்கும், அங்கத்தவர்களுக்கும் இல்லாவிட்டால் ஆராதனைக் கூட்டங்களுக்கு ஒருபோதும் எவரும் தேவபயத்தோடு வரப்போவதில்லை. ஆகவே அந்தப் பாடத்தை நான் நேர்த்தியாக தயாரித்து புதிதாக அங்கத்தவர்களாக வரப்போகிறவர்களுக்கு விளக்க முடிந்தது. அதை இந்த ஆக்கத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியே.

ஓளிணிவு நாளும், பொது ஆராதனையும்

ஓளிணிவு நாளான ஞாயிறு தினத்தில் திருச்சபை அநேகமாக உலகமெங்கும் கூடி வருவது தற்செயலான ஒரு நிகழ்ச்சி அல்ல. உலக நாடுகள் அதை விடுமுறை தினமாக வைத்திருப்பதனால்தான் திருச்சபை அந்த நாளை ஓளிணிவு நாளாக பயன்படுத்தி வருகிறதென்று எண்ணுவது வேத அறியாமையையே உணர்த்துகிறது. நடைமுறைக்கு வசதியாக இருக்குமென்பதால்தான் சபை ஞாயிறு தினத்தில் கூடிவருகிறதென்று எண்ணுவது வேதத்திற்கு முரணான சிந்தனை. ஓளிணிவு நாளை கர்த்தர் பத்துக்கட்டளைகளைக் கொடுப்பதற்கு முன்பே சிருஷ்டியில் உருவாக்கியிருந்தார். அத்தோடு தானே அந்நாளில் ஓளிணிவு எடுத்து நமக்கு ஓர் உதாரணமாக இருந்து காட்டியிருக்கிறார். கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்துவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான். ஆகவே, தன்னை அவன் ஆராதிக்க கர்த்தர் அவனுக்கு ஒரு நாளை உருவாக்கித் தந்திருப்பதில் ஆச்சரியமில்லை. மனிதன் கர்த்தரை வேறுவிதத்தில் மகிமைப்படுத்த முடியாது. அவரை அவன் வாழ்நாள் முழுவதும் ஆராதித்து வாழ வேண்டும். ஆனால், தன் பாவத்தினால் அவன் அந்த நிலையை இழந்து நிற்கிறான். பரலோகத்தில் பரிசுத்தவான்கள் நிரந்தரமாக கர்த்தரை ஆராதித்து வாழ்வார்கள் என்று வேதம் காட்டுகிறது. இதிலிருந்து ஆராதனைக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் இடத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஆதாமுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் ஓளிணிவு நாளின் அருமை தெரிந்திருந்தது. ஆதாம் தன்னுடைய குடும்பத்தாரோடு ஓளிணிவு நாளில் கர்த்தரை ஆராதித்து வந்திருந்தான். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணங்களை இஸ்ரவேலர் பின்பற்றுமாறு மோசே மூலம் கொடுத்தபோது பத்துக் கட்டளைகளைக் கொடுத்து ஓளிணிவு நாள் பற்றிய வெளிப்படுத்தல் எழுத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். பத்துக் கட்டளைகள் முழு மனித குலமும் பின்பற்றுவதற்காகவும், முக்கியமாக கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் விதிமுறைகளாக மீறாமல் பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டது. அக்கட்டளைகளில் ஒன்றாக ஓளிணிவு நாள் இருக்கிறது.

இஸ்ரவேலர் ஓளிணிவு நாளில் தன்னை ஆராதனை செளிணிய வேண்டுமென்று கர்த்தர் விதித்திருந்தார். அதற்கான வழிமுறைகளை அவர் லேவியராகமத்தில் விளக்கியிருக்கிறார். இஸ்ரவேல் தேசத்தைப் பொருத்தவரையில் ஓளிணிவு நாள் ஆராதனை நாளாக இருந்து வந்தது. அதற்குக் காரணம் அது சிருஷ்டியிலேயே ஆராதனைக்குரிய நாளாக உருவாக்கப்பட்டிருந்ததுதான். இதிலிருந்து ஓளிணிவு நாள் ஆராதனையோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதை அறிந்துகொள்ளுகிறோம். உண்மையில் ஓளிணிவு நாளில்லாமல் ஆராதனை இருக்க முடியாது. கிறிஸ்தவ சபை துன்புறுத்தலுக்குள்ளாகி ஓளிணிவு நாளில் பகிரங்கமாக ஆராதிக்க முடியாத நிலை ஆதி சபைக் காலத்திலும் அதற்குப் பின்னால் வரலாற்றின் சில காலங்களிலும் இருந்திருக்கிறது. இருந்தபோதும் அத்தகைய அசாதாரண நிலை ஓளிணிவு நாளின் அவசியத்தைக் குறைத்துவிடவில்லை. ஓளிணிவு நாளில்லாவிட்டால் கிறிஸ்தவ ஆராதனைக்கே வழியில்லை என்று ஜே. சி. ரைல் குறிப்பிட்டிருப்பது சபை ஆராதனைக்கு ஓளிணிவு நாள் எந்தளவுக்கு அவசியமாயிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. சீர்திருத்தவாத பெரியவர்களும், பியூரிட்டன் பெரியவர்களும் ஓளிணிவு நாளில்லாத ஆராதனையை நினைத்துப் பார்த்ததில்லை. இதற்கு ஓர் உதாரணத்தைத் தர விரும்புகிறேன். அவர்கள் நமக்களித்திருக்கும் 1689 விசுவாச அறிக்கையை எடுத்துப்பார்த்தால், அதில் 'வழிபாடும், ஆண்டவருடைய நாளும்' என்ற ஒரு பகுதி (அதிகாரம் 22) இருக்கிறது. அங்கே பியூரிட்டன் பெரியவர்கள் இந்த இரண்டிற்கும் தனித்தனியே இரு அதிகாரங்களைக் கொடுக்காமல் இரண்டையும் இணைத்து விளக்கியிருக்கிறார்கள். இந்த அதிகாரத்தின் எட்டுப் பத்திகளில் (றிணீக்ஷீணீரீக்ஷீணீஜீலீ௳) கடைசி இரண்டும் ஆராதனையின் நாளான ஓளிணிவு நாளைப் பற்றியது. இதன் ஆரம்ப பத்திகள் ஆராதனையின் அம்சங்களை விளக்கி அதற்குப் பிறகு கடைசி இரண்டும் பத்திகளும் ஆராதனைக்குரிய நாளாக ஓளிணிவு நாளை அடையாளம் காட்டி அந்த நாள் உருவான முறையையும், அந்த நாளில் செளிணிய வேண்டிய பணிகளையும் விளக்குகின்றன. இதிலிருந்து சபைகூடி வந்து ஆராதனை செளிணிவதற்கும், ஓளிணிவு நாளுக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

மேலே நாம் பார்த்த காரணங்களின் காரணமாகத்தான் ஓளிணிவு நாளைப் பற்றிய உறுதியான நம்பிக்கை (நீஷீஸீஸ்வீநீ௴வீஷீஸீ) நமக்கில்லாவிட்டால் ஆராதனையையும் நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடிய நிலை ஏற்படு¢ம் என்று அறிவுறுத்துகிறேன். அப்போஸ்தலர் காலத்து கிறிஸ்தவர்களுக்கு ஓளிணிவு நாளைப் பற்றிய பிரச்சனை இருக்கவில்லை. அதன் அவசியத்தை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியவர்கள் காலத்திலும் அந்தப் பிரச்சனை இருக்கவில்லை. அக்காலத்தில் ஓளிணிவு நாள் அனுசரிப்பு பயபக்தியோடு இருந்ததோடு சபை ஆராதனையும் தலைசிறந்த நிலையில் இருந்தது. இன்றைக்கு நாம் வாழ்கின்ற காலப்பகுதியில் அன்டிநோமியனிச எண்ணப்போக்குகள் ஓளிணிவு நாளை சுயமாக நாம் செயல்படுவதற்கு தடங்கலாக இருக்கும் ஒரு தடைகல்லாகக் கருதுகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அன்டிநோமியனிசம் திருச்சபைக்கும் மதிப்பளிக்கின்ற ஒரு போதனையல்ல. இந்த சமூகப் போக்குக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிற கிறிஸ்தவர்களும் இந்த எண்ணங்களினால் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக நம்மினத்தில் திருச்சபைகள் ஓளிணிவு நாளின் அவசியத்தை உணர்வோடு அறிந்திருந்து அமைக்கப்பட்டவையாக இருப்பதில்லை. அதனால் சபைகளில் இதன் அவசியம் அறிவுறுத்தப்படுவதில்லை. நம்மக்கள் அந்நாளை அசட்டை செளிணிவதற்கு இது முக்கியமான காரணம். அத்தோடு புறஜாதி சமூகம் இன்றைக்கு ஓளிணிவு நாளை நாம் அனுசரிக்கத் தடையாக அந்நாளில் சாதாரண வேலைகளைச் செளிணிய தொழிலகங்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தும், சகலவிதமாத விளையாட்டுப் போட்டிகள், களியாட்டங்களை அந்நாளில் ஏற்படுத்தியும், கடைகளையும், பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களை அந்நாளில் திறந்து வைத்தும் பிசாசைப்போல சோதனைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தப் போராட்டங்களில் இருந்து இருதயத்தைக் காத்துக்கொண்டு பக்தி வைராக்கியத்தோடு கர்த்தரை மகிமைப்படுத்த ஓளிணிவு நாளை அனுசரித்து சபை ஆராதனைக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமானால் ஓளிணிவு நாள் பற்றிய உறுதியான வேத நம்பிக்கைகள் நம்மில் இருந்தால் மட்டுமே முடியும். அத்தகைய நம்பிக்கையில்லாதவர்கள் அந்நாளில் ஆராதனைக்காக ஆலயத்துக்கு ஆர்வத்தோடு போனாலும் ஓளிணிவு நாளை சரியாகப் பயன்படுத்துகிற அறிவோ உணர்வோ இருக்கவேண்டிய அளவுக்கு அவர்களிடம் இருக்காது. ஆராதனைக்கு ஒரு முறை போளிணிவிட்டேனே அது போதாதா என்கிறவர்களையும், வேலை இல்லாமல் வாழ முடியுமா, அதனால் இருந்திருந்து என்றைக்காவது ஆராதனைக்கு போளிணிவந்து அந்நாளில் வேலை செளிணிதால் அதில் என்ன தப்பு என்கிறவர்களையும், ஆறு நாட்களில் குடும்பத்துக்கு நேரம் கொடுக்க முடியவில்லை, நிம்மதியாக தூங்க முடியவில்லை அதனால் ஆராதனைக்கு ஒரு தடவை போளிணிவிட்டு மற்ற நேரத்தை குடும்பத்துக்குக் கொடுத்தால் அதில் என்ன தவறு என்கிறவர்களையும், ஓளிணிவு நாளில் ஆரதனைக்கு போனாலும் மிகுதி நாளை ஷாப்பிங்கிலும், வேறு வேலைகளிலும் செலவிடுகிறவர்களையும் நாம் பார்க்கிற நிலைமைக்கு எது தள்ளியிருக்கிறது? ஆராதனையைப் பற்றியும் ஓளிணிவு நாளைப்பற்றியும் இருக்க வேண்டிய வேதநம்பிக்கைகள் அடியோடில்லாத நிலைதான். என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரையில் ஆலயத்துக்குப் போய்ஆராதனை செளிணிய வேண்டும் என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட அதற்குத் தடையாக வேறு காரியங்கள் வருகிறபோது ஆராதனைக்கு இருந்திருந்து போகிற நிலைமைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். வேறு எதற்கும் ஓளிணிவு நாளில் என் வாழ்க்கையில் இடங்கொடுத்து விடக்கூடாது (கருணைக்கிடமான காரியங்களைத் தவிர) ஆராதனைக்கான அந்நாளில் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன் என்று வைராக்கியத்தோடு இருக்கிற எத்தனை பேரை நம்மினத்தில் நாம் சந்தித்திருக்கிறோம்?அத்தகையோரின் தொகை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலை இன்று இருப்பதற்கு என்ன காரணம்? ஓளிணிவு நாளைப்பற்றிய அசைக்க முடியாத வேத நம்பிக்கைகள் இருதயத்தில் பக்தி வைராக்கியத்தோடு பதியாததால்தான்.

"என் பரிசுத்த நாளாகிய ஓளிணிவு நாளில் உனக்கு இஷ்டமானதைச் செளிணியாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செளிணியாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலுமிருந்து, ஓளிணிவு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்¢த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாளிணி; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய்இதைச் சொல்லிற்று." (ஏசாயா 58:13-14). ஏசாயா மூலம் கர்த்தர் பேசிய இந்த வார்த்தைகள் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமானதல்ல, புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

ஓளிணிவு நாளும், சபை அங்கத்தவமும்

அங்கத்துவமில்லாத திருச்சபையா? என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருந்தேன். (தற்போது இப்புத்தகம் விற்பனைக்குள்ளது. பிரதிக்கு பத்திரிகையின் பின்அட்டையிலுள்ள முகவரிகளில் தொடர்புகொள்ளுங்கள்.) அதில் சபை அங்கத்துவத்திற்கான வேத ஆதாரங்களை விளக்கியிருந்தேன். அந்தளவுக்கு வேதம் போதிக்கும் சபை அங்கத்துவம் இருந்து திருச்சபை செயல்பட வேண்டுமானால் இதுவரை நான் விளக்கிய ஓளிணிவு நாளைப் பற்றிய நம்பிக்கைகள் அவசியம். திருச்சபை கூடி வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காக. அதுவே திருச்சபையை கர்த்தர் ஏற்படுத்தியதற்கான முதன்மையான காரணம். ஆராதிக்கிற ஆத்துமாக்களைக் கொண்டதே திருச்சபை. இன்றைக்கு பல இடங்களில் திருச்சபை சமூக சேவை நிலையங்களைப் போல செயல்பட்டு என்னென்னவோ காரியங்களைச் செளிணிய ஆரம்பித்துவிட்டன. எத்தனையோ நல்ல காரியங்களை திருச்சபை செளிணிய முடியும் என்றாலும் அதை எதற்காக என்ன நோக்கத்திற்காக கூடி வரும்படியாக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்துவதே அதன் அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும். பழைய ஏற்பாட்டில் அந¢த நோக்கத்திற்காகவே ஆலயம் கட்டப்பட்டது. கர்த்தரை ஆராதிப்பத்தற்காக எழுப்பப்பட்ட தேசமாக, இனமாக அது இருந்தது. ஆலய ஆராதனை இஸ்ரவேலின் வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல, அதுவே அதன் உயிர்நாடியாக இருந்தது. கர்த்தருடைய பிரசன்னமும் அந்த ஆலயத்திலேயே இருந்தது. இஸ்ரவேலர் செளிணித ஏனைய எல்லா பாவங்களையும்விட வேறு தேவர்களை வணங்க ஆரம்பித்து ஆலயத்தை அசுத்தப்படுத்தியதே கர்த்தருக்கு மகா கோபத்தை உண்டாக்கி அந்த தேசத்தை அழிக்கும்படி செளிணிதது. இஸ்ரவேல் தான் எழுப்பப்பட்ட நோக்கத்திற்கு எதிராக நடந்து அழிவை சந்தித்தது.

இஸ்ரவேலைப் பார்த்து நாம் படிக்கும் பாடங்களை மறந்துவிடக்கூடாது. புதிய ஏற்பாட்டு திருச்சபை இன்றைக்கு கர்த்தரின் ஆலயமாக இருக்கிறது. கர்த்தரின் மக்களே அவருடைய ஆசாரியர்களாக இருக்கின்றனர். பழைய ஏற்பாட்டு ஆலய வழிபாட்டைப்போல திருச்சபை ஆராதனை புதிய ஏற்பாட்டு திருச்சபையின் பிரதான கடமையாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இருந்ததுபோலவே ஞாயிறு தினமாகிய ஓளிணிவு நாளில் புதிய ஏற்பாட்டு திருச்சபை கூடி வந்து கர்த்தரை ஆராதிக்க வேண்டும். அந்த நாளை கர்த்தருக்காகப் பயன்படுத்த வேண்டும். பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரைப்போல புதிய ஏற்பாட்டு மக்கள் ஆராதனை செளிணிபவர்களாக ஆலய ஆராதனைக்கு பிரதான இடத்தை வாழ்க்கையில் கொடுக்க வேண்டும். கர்த்தரை ஆராதிக்கும் மக்களாக, அதற்காக நியமிக்கப்பட்டவர்களாக தங்களைக் கருதி வாழ வேண்டும். அதனால்தான் வாரத்தின் முதல் நாளான ஆராதனை நாளில் கர்த்தரை ஆராதித்து நாம் வாரத்தை ஆரம்பிக்கிறோம். நம்முடைய ஆலய ஆராதனை, ஆத்துமாக்களோடு நாம் கூடிவந்து ஓளிணிவு நாளை பயன்படுத்தும் முறை நமக்கு பரலோகத்தை நினைவுபடுத்த வேண்டும்.

ஆராதனைக்கும், ஓளிணிவு நாளுக்கும் இந்தப் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் முக்கியத்துவம் கொடுத்து வாழும் நிறுவனமாக திருச்சபை இருக்க வேண்டும். இந்தளவுக்கு ஆராதனையும், ஓளிணிவு நாளும் திருச்சபையின் முக்கிய அம்சங்களாக இருக்கும்போது அதன் அங்கத்தவர்கள் இவற்றைப் பற்றிய போதிய அறிவும், உணர்வும் இல்லாதவர்களாக இருந்தால் பொறுப்புள்ள சபை அங்கத்தவர்களாக இருப்பது இயலாத காரியம். திருச்சபை எதற்காக கூடிவருகிறது, அதில் என்னுடைய பிரதான பங்கு என்ன என்பதை ஒவ்வொரு அங்கத்தவரும் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அறிந்திருக்க வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான சபைகள் இந்த அடிப்படையில் செயல்படுவதில்லை. ஞானஸ்நானம் எடுத்து, காணிக்கை கொடுத்து ஓர் ஆராதனைக்கு போய்வருவதோடு கடமை முடிந்ததுபோல் அநேகர் நடந்து வருகிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஆலயத்துக்கு நோயுள்ள ஆட்டை குறைந்த விலைக்கு வாங்கி பலிகொடுக்க கடமைக்காக போய்வந்த இஸ்ரவேலனைப் போலத்தான் இன்றைக்கு அநேகர் சபைக்கு போய்வந்துகொண்டிருக்கிறார்கள். ஓளிணிவு நாளில் ஆலயத்தில் கர்த்தரின் பிரசன்னத்தை அறிந்துகொள்ளப் போகிறோம், பரிசுத்த ஆவியின் கிரியைகளை ஆராதனையின் போது உணர்வதற்காகப் போகிறோம், கர்த்தரின் வார்த்தையைக் கேட்கப் போகிறோம் என்ற ஆர்வமும், துடிப்பும், பயபக்தியும் பெரும்பாலும் இன்றைக்கு இல்லாமலிருப்பதற்குக் காரணம் ஓளிணிவு நாளைப்பற்றியும், ஆராதனையைப் பற்றியும் வேத உணர்வுகள் இல்லாததே.

ஓளிணிவு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராதனைபற்றிய அறிவோடு சபை அங்கத்தவர்களாக வராதவர்கள் திருச்சபை அங்கத்துவப் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாது. அவற்றை நிறைவேற்றுவது இயலாத காரியம். ஓளிணிவு நாளிலேயே ஆராதனை, ஜெபக்கூட்டம், வேதபாடம் உட்பட அநேக ஆத்மீக காரியங்களை சபை ஆத்துமாக்களுக்காக நடத்துகிறது. அத்தோடு ஆத்துமாக்கள் அன்றே சக ஆத்துமாக்களோடு ஐக்கியத்திலும் வருகிறார்கள். ஆராதனை ஆரம்பித்து பத்து நிமிடத்துக்குப் பிறகு ஆலயத்துக்கு வந்து எப்போது முடியும் என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்து முடிந்தவுடன் பறந்துவிடுகிறவர்களுக்கு சபை அங்கத்துவம் அவசியமில்லை. அவர்களில் பயங்கரமான ஆத்மீகக் குறைபாடு இருக்கிறதென்பதையே அவர்களுடைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஓளிணிவு நாள் தவிர ஏனைய நாட்களிலும் நாம் ஆத்மீகக் காரியங்களில் ஈடுபட வேண்டியிருந்தாலும் கர்த்தருக்குரிய பொது ஆராதனையை பக்தி விருத்தியோடு ஓளிணிவு நாளில் நடத்த அனைத்து அங்கத்தவர்களும் ஆர்வத்தோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தக் காரியத்தில் போதகர்களுக்கும், சபை உதவிக்காரர்களுக்கும் பெரும் பங்கு இருந்தபோதும் ஏனைய ஆத்துமாக்களும் ஆர்வத்தோடு கலந்து ஆராதனையை வேதபூர்வமாகவும், பரிசுத்தத்தோடும் நடத்த உதவ வேண்டும். ஓளிணிவு நாளைப் பற்றிய கரிசனையே இல்லாதவர்களால் இவற்றை எப்படிச் செளிணிய முடியும்? ஆகவே, ஆராதனையைப் பற்றி மட்டும் நாம் எண்ணிப்பார்க்காமல் அதோடு பிரிக்க முடியாதபடி தொடர்புடைய ஓளிணிவு நாளை பரிசுத்தத்தோடு வைத்திருப்பதன் அவசியத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எத்தனை தடைகளை புறஜாதி சமுதாயம் ஓளிணிவு நாளுக்கெதிராக உருவாக்குகின்றபோதும், பிசாசு சோதனைகளை ஏற்படுத்துகின்றபோதும், கிறிஸ்தவத்தின் பெயரில் அன்டிநோமியனிச வாடையுள்ள போதனைகள் நம்மைத் தாக்குகின்ற போதும் நாம் கர்த்தருக்குப் பயந்து ஓளிணிவு நாளைப் பரிசுத்தத்தோடு வைத்திருந்து அந்நாளில் பொது ஆராதனையில் சபையில் கலந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதை நம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

 

பொது ஆராதனை

- ஜே. சி. ரைல் -

_____________________________________________________________________________

ஜே. சி. ரைல் ஆங்கிலேய திருச்சபையின் (Church of England) போதகராக இங்கிலாந்தில் இருந்தார். இந்த ஆக்கம் ஜே. சி. ரைலினுடைய “Knots United” என்கிற ஆக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவர் எழுதிய காலப்பகுதியில், உயர் வர்க்க ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்துக்குச் செல்வதை நாகரீகமானதாக கருதி வந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த 130 ஆண்டுகளில் இந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டாலும், ஆராதனையைக் குறித்து ரைல் எழுதியிருக்கின்ற வேதபூர்வமான கருத்துக்கள்உலகமெங்கும் வாழுகின்ற எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்விதத்தில் அமைந்திருக்கின்றது.

_____________________________________________________________________________

 

"வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்" (மத் 15:9)

சுயஇஷ்டமான ஆராதனை, மாயமான தாழ்மை, ஞானமென்கிற பேர்கொண்டவை (கொலோ 2:23)

சபை ஆராதனைகள்பெருகியிருக்கின்ற ரைலின் காலத்தில் ஒரு காலப்பகுதியிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று சமுதாயத்தில் அநேகர் ஞாயிற்றுக் கிழமைகளிலே ஏதாவதொரு ஆலயத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், அநேகமாக எல்லோருமே ஆலயத்துக்குச் செல்வதை ஒரு கடமையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், நல்ல தரம் இல்லாமல் சபைகள்வெறும் எண்ணிக்கையை மட்டும் கொண்டிருப்பதில் பெருமை இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏதோ சில சமயங்களில் நாம் ஆண்டவருக்கு ஆராதனை செலுத்துகிறோம் என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதற்குப் பின்னால் ஒரு பெரிய கேள்வி இருக்கிறது: "நாம் எப்படி ஆராதனை செய்கிறோம்?" என்பதே அந்தக் கேள்வி.

நாம் செய்கின்ற ஆராதனைகள்அனைத்தும் கர்த்தரின் பார்வையில் சரியானதாக இருக்கும் எனக் கூற முடியாது. வேதாகமத்தை ஒழுங்காகப் படிக்கிற அனைவருக்கும் இது வெட்ட வெளிச்சமாகத் தெரியும் என நான் நம்புகிறேன். வேதம் "வீணான ஆராதனை"யைப் பற்றி தெளிவாகப் பேசுகிறது. "உண்மையோடுள்ள ஆராதனை", "சுயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆராதனை", "ஆவியோடு ஆராதித்தல்" போன்ற பலவிதமான கோணங்களில் ஆராதனையைக் குறித்து விளக்கப்பட்டிருப்பதை வேதாகமத்தில் வாசிக்கிறோம். நாம் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல, ஆனால் ஏதோவொரு ஆராதனைக்குப் போனால் மட்டும் போதும் என்று சிலர் மூடத்தனமாக நினைத்துக் கொள்வது சிந்திக்கத் தெரியாத குழந்தைத்தனமான செயல். வியாபாரிகளும், தொழில் செய்கிறவர்களும் தங்கள்தொழிலை இந்தவிதமாக நடத்துவதில்லை. எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என அவர்கள்திருப்திப்பட்டுக் கொள்வதில்லை. எந்தக் காரியமும் ஒழுங்காக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள்கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆராதனை பற்றிய இந்த விஷயத்தில் வஞ்சிக்கப்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கடவுள்தம்மைப் பரியாசம் செய்ய விடமாட்டார். எனவே "தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும்?" என்பது மிகவும் முக்கியமானதொரு கேள்வி.

இந்த ஆக்கத்தில் நான் ஆராதனையைக் குறித்த காரியங்களை வேதாகம வசனத்தோடு தொடர்புபடுத்தி விளக்கப் போகிறேன். ஆராதனையைக் குறித்து வேதம் போதிக்கின்ற கோட்பாடுகளை உங்கள்முன் வைக்கப் போகிறேன். அறியாமை பெருகியிருக்கும் இந்த காலகட்டத்தில், கள்ள உபதேசங்கள்எங்கும் பெருகியிருக்கின்ற வேளையில் ஆராதனையைக் குறித்து பலர் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை அகற்றுவது மிகவும் முக்கியமானது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தாங்கள்விசுவாசிப்பதைக் குறித்தும், எதனால் சில விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள்என்பதைக் குறித்தும் எந்தக் காரணமும் சொல்ல முடியாதவர்களாக இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஏன் விசுவாசிக்கிறார்கள்என்பதே அவர்களுக்குத் தெரியாது. எதை விசுவாசிக்கிறார்கள்என்பதும் அவர்களுக்குத் தெரியாது. தாங்கள்செய்கிறவைகளை எதற்காக செய்கிறார்கள்என்பதும் அவர்களுக்குத் தெரியாது. சிறுபிள்ளைகளைப் போல பலவிதமான போதகமாகிய காற்றினாலே அடிபட்டு அவர்கள்அலைக்கழிக்கப்படுகிறார்கள். கள்ளப்போதகத்தைக் கொண்டுவருகிற எந்த உபதேசத்துக்கும் செவிகொடுத்து, உடனடியாக சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போய்விடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதிரியான இந்த காலகட்டத்தில், ஆராதனையைக் குறித்த சில முக்கியமான காரியங்களை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆக்கத்திலே கீழ்வரும் விஷயங்களை நாம் கவனிக்கப் போகிறோம்:

  1. முதலில், பொது ஆராதனையின் முக்கியத்துவத்தை நான் உங்களுக்கு விளக்குவேன்.
  2. அடுத்தபடியாக, பொது ஆராதனையின் முக்கியமான கொள்கைகளை விளக்குவேன்.
  3. ஒரு முழுமையான பொது ஆராதனையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களை அதற்கடுத்து கவனிப்போம்.
  4. அடுத்து, பொது ஆராதனையில் தவிர்க்க வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்.
  5. இறுதியாக, பொது ஆராதனையை பரிசோதித்துப் பார்க்கும் முறைகளைப் பார்ப்போம்

நான் இந்தத் தியானத்தில் சபையில் நடத்தப்படும் பொது ஆராதனையைக் குறித்த காரியங்களில் மாத்திரமே கவனத்தை செலுத்த விரும்புகிறேன். பக்திவிருத்திக்குரிய தனிப்பட்ட காரியங்களாகிய ஜெபம், வேதவாசிப்பு, சுயபரிசோதனை, தியானித்தல் ஆகியவைகளைக் குறித்து நான் இதில் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவை யாவும் கிறிஸ்தவத்தின் அத்திவாரமாக இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவை இல்லாமல் பொது ஆராதனைகளில் பங்கெடுப்பதாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனால், இங்கு நான் அவற்றில் எதைக் குறித்தும் விளக்காமல், பொது ஆராதனையோடு தொடர்புள்ள காரியங்களைப் பற்றி மட்டுமே விளக்க விரும்புகிறேன்.

  1. சபைப் பொது ஆராதனையின் முக்கியத்துவம்

இந்த ஆக்கத்தை கிறிஸ்தவர்களே வாசிக்கப்போவதால் 'பக்திமார்க்கமானது தனிமனித விஷயம், அதைப் பெரிதுபடுத்தி எல்லோருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என யாரும் துணிகரமாக சொல்ல மாட்டார்கள்என நம்புகிறேன். கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களும், கிறிஸ்தவர்கள்எனக் கூறிக் கொள்பவர்களில் ஒருசிலரும் மாத்திரமே இம்மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கக்கூடும். அநேக கிறிஸ்தவர்கள், தங்கள்சொந்தப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட தினங்களிலே, குறிப்பிட்ட இடத்திலே சக கிறிஸ்தவர்களை சந்தித்து, அவர்களோடு சேர்ந்து ஒன்றாக தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளுவார்கள்.

பியூரிட்டன் பெரியவராகிய ஸ்டீபன் சார்நொக் ஆராதனையைப் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார். "கடவுளுக்கு ஆராதனை செலுத்த மறுப்பது, அவர் இருக்கிறார் என்பதையே ஏற்றுக் கொள்ளாத முட்டாள்தனமாகும், தன்னை சிருஷ்டித்தவருக்கு மரியாதை செலுத்த விரும்பாதவனுக்கு, அவர் இருக்கிறார் என்கிற உண்மையை எடுத்துப் போட தன்னால் இயலவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கும். கடவுள்என்கிற ஒரு மகா பெரிதான சக்தி இருக்கிறதென்றும், அந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்கிற கருத்தும் உலகம் எங்கும் உண்டு. அப்படி இல்லாமலிருந்தால் விக்கிரக வழிபாடுகள்தோன்றியிருக்க வழியேயில்லை. கடவுள்என்று ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணம் மனித மனதில் தோன்றியதால்தான், ஒவ்வொரு தேசமும் தன் எண்ணப்போக்கின்படி சிலைகளை உருவாக்கி, அதனை வழிபட்டு வணங்கி வந்திருக்கிறார்கள். இயற்கையின் காரியங்களை வழிபடாத அநேகர்கூட கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாபெரும் சக்தி இருக்கிறதென நம்பி, அதற்கு எப்போதும் மரியாதை செலுத்தி வந்திருக்கிறார்கள். மனிதன், ஓய்வுநாளுக்கு முந்தைய மாலை வேளையிலே ஏன் சிருஷ்டிக்கப்பட்டான் என்பதற்கு யூதர்கள்ஒரு காரணம் கூறுவார்கள். ஏனென்றால் அவன் கண்விழித்து மனிதனாக செயல்பட ஆரம்பிக்கும்போது, தனது சிருஷ்டிகரை ஓய்வு நாளிலே ஆராதிப்பவனாக முதலில் செயல்பட வேண்டுமென்பதற்காகவே தேவன் அவனை அந்நாளிலே உருவாக்கினார் என்பார்கள். தான் ஒரு சிருஷ்டி என்பதை அவன் உணர்ந்தவுடனேயே, தன்னை உருவாக்கிய சிருஷ்டிகரை தொழுது வணங்குதலே அவனுடைய முதல் பணியாக இருக்க வேண்டும். தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்வதே எல்லா மனிதர்களுடைய கடமையாகும் (பிரசங்கி 12:13). அப்படி செய்கிறவனே "முழுமையான மனிதன்" ஆவான். கடவுளை அறியாத மனிதன் மனிதனல்ல, அவன் ஒரு மிருகம்! ஒரு மனிதனை முழுமையானவனாக ஆக்குவதற்கு கடவுள்பக்தி தேவையாக இருக்கிறது. கடவுள்பயம் இல்லையானால் மனிதன் நியாயமாக நடந்து கொள்ள மாட்டான். ஏனென்றால் கடவுளை அலட்சியப்படுத்துகிறவன் நியாயத்தையும் அலட்சியப்படுத்துகிறவனாகத்தான் இருப்பான்." (Charnock’s Works,

Nichol’s Edition, Vol. 1, Pg.182).

கடவுளின் மக்கள்யாரென அடையாளங்காட்டுவதில் பொது ஆராதனைக்கு பெரும்பங்கு இருக்கிறது என நான் தைரியமாகக் கூறுவேன். பொதுவாகவே மனிதன் ஒரு சமுதாயப் பிறவியாக இருக்கிறான். அவன் தன் சகமனிதர்களைப் பிரிந்து தனித்து வாழ விரும்புவதில்லை. எல்லா காலகட்டத்திலும் தேவனானவர் மனிதனுடைய இந்த குணாதிசயத்தை வல்லமையாக உபயோகித்திருக்கிறார். தனது ஜனங்களுக்கு பொது ஆராதனையையும், அந்தரங்கத்தில் ஆராதிப்பதையும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள், மற்றவர்களோடு சேர்ந்தும், தனிப்பட்ட விதத்திலும் தம்மை வணங்கச் செய்திருக்கிறார். கடவுளுடைய ஜனங்கள்எங்கெல்லாம் இருந்திருக்கிறார்களோ அங்கேயெல்லாம் நிச்சயமாக ஒரு சபையை தேவன் கூட்டியிருந்திருக்கிறார் என்பதை நாம் உலகமுடிவின் கடைசியில் அறிந்து கொள்வோம். அவருடைய ஜனமானது, எண்ணிக்கையிலே எவ்வளவு சிறிய தொகையினராக இருந்தாலும் அவர்கள்ஒன்றாகக் கூடி வந்து, தமது பரம தகப்பனை ஆராதித்திருக்கிறார்கள். இப்படியாக அவர்கள்கூடுவதற்கு பல ஞானமான காரணங்கள்இருந்திருக்கின்றன. உலகத்தாருக்கு தங்களை கடவுளின் சாட்சியாகக் காண்பிக்கவும், தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும், தைரியப்படுத்திக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் ஆறுதல் பெறவும் இப்படியாக அவர்கள்கூடினார்கள். இவை எல்லாவற்றைக் காட்டிலும் மோட்சத்திலுள்ள பரலோகவாசிகள்அனைவரோடும் சேர்ந்து இருப்பதற்கான பயிற்சியையும், ஆயத்தத்தையும் பெற்றுக் கொள்வதற்காகவும் அவர்கள்பொது ஆராதனையில் ஈடுபட்டார்கள். "இரும்பு இரும்பைக் கருக்கிடும் (Sharpens). அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்" (நீதி 27:17) என்று வேதம் சொல்லுகிறது. நாம் நம்புகிற, செய்கிற காரியங்களையே மற்றவர்களும் நம்பி, செய்து கொண்டிருக்கிறார்கள்என்பதை உணராமல் தனித்து வாழப் பார்க்கும் மனிதன் மற்றவர்களைக் குறித்து உணர்வில்லாதவனாக இருக்கிறான். மற்றவர்களும் நம்மைப் போலவே நினைக்கிறார்கள்என்பதை உணர்வது நமது ஆத்துமாவுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். பொது ஆராதனைக்கான காரணங்களுள்இதுவும் ஒன்று.

வேதாகமத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரையுள்ள வரலாற்றை நீங்கள்தியானித்துப் பார்த்தீர்களானால், கர்த்தருடைய மக்கள்பொது ஆராதனையில் ஈடுபட்டிருந்ததை கவனிப்பீர்கள். உலகத்தில் வாழ்ந்த முதலாவது குடும்பத்தாரிடமே அது காணப்பட்டதை கவனிக்கலாம். காயீனும், ஆபேலும் வரலாற்றில் ஒன்று சேர்ந்து கடவுளிடம் வந்த கதையை நாம் அறிவோம். நோவாவின் சரித்திரத்திலும் பொது ஆராதனையைக் காணலாம். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழையிலிருந்து வெளியில் வந்தவுடன் முதலாவதாக செய்த காரியம், கடவுளுக்கு பொது ஆராதனை செலுத்தியதுதான். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முற்பிதாக்களின் வாழ்க்கையிலும் நீங்கள்பொது ஆராதனையை கவனிக்க முடியும். எங்கெல்லாம் அவர்கள்தங்கள்கூடாரங்களைப் போட்டார்களோ அங்கெல்லாம் நிச்சயமாக ஒரு பலிபீடம் கட்டப்பட்டிருந்தது. அவர்கள்தனிமையில் இருந்து ஜெபித்தது மாத்திரமல்லாமல், மற்றவர்களோடு சேர்ந்தும் பொது ஆராதனை செய்தார்கள். மோசேயின் காலத்தில் சீனாய் மலையில் தொடங்கி, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூலோகத்தில் பிறந்த காலம் வரையிலும் இஸ்ரவேல் ஜனங்கள்தொடர்ந்து பொது ஆராதனையில் ஈடுபட்டிருந்ததை நாம் வேதத்தில் காண்கிறோம். ஆசரிப்புக் கூடாரத்திலோ, ஆலயத்திலோ கடவுளைத் தொழுதுகொள்ள வராத யூதன் இஸ்ரவேல் ஜனத்தாரிலிருந்து அறுப்புண்டு போகிறான். புதிய ஏற்பாட்டிலும் நீங்கள்பொது ஆராதனையைக் காணமுடியும். எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் தமது நாமத்தினாலே கூடி வருகிறார்களோ அங்கே தான் இருப்பதாக இயேசு கிறிஸ்து ஒரு விசேஷமான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர்களும் தாங்கள்சபை நிறுவிய இடங்களிலே, சபையாகக் கூடிவருவதையே முதலாவது கடமையாக விசுவாசிகளுக்கு வலியுறுத்தினார்கள். "சபை கூடுதலை விட்டுவிடாதிருங்கள்" (எபி 10:25) என்பதே பிரதானமான கட்டளையாக இருந்தது. இவையெல்லாம் தெரிந்த காரியங்கள்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இவற்றை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது மிகவும் நல்லது. தனி ஜெபத்தில் ஈடுபடாத மனிதனுடைய இருதயத்தில் கிருபை இல்லை என்பது மிகவும் நிச்சயம். அதேபோல பொது ஆராதனை இல்லையென்றால் கிறிஸ்தவம் இருப்பதற்கே வழியில்லை. (சபை துன்புறுத்தப்பட்ட காலத்திலே பொது ஆராதனைகள்நடந்திருக்க முடியது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ரோம சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரிகள்ஆதித்திருச்சபையைத் துன்பப்படுத்திய காலத்தில், அதாவது கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் பகிரங்கமான பொது ஆராதனைக்கு வழியிருக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் ஒருசில சந்தர்ப்பங்களில் மாத்திரம் நிகழ்ந்த விதிவிலக்கான காரியங்கள்மட்டுமே).

கர்த்தருடைய வார்த்தையிலிருந்து இப்போது சபை சரித்திரத்திற்கு உங்கள்கவனத்தைக் கொஞ்சம் திருப்புங்கள். அதில் என்ன பார்க்கிறீர்கள்? அப்போஸ்தலர் காலந்தொடங்கி இன்றைய காலம் வரைக்கும், ஆத்துமாக்களின் பக்திவிருத்திக்கு, தேவன் சபையைப் பெரிதும் பயன்படுத்தியிருப்பதைக் காண்பீர்கள். தூங்கிக் கொண்டிருந்த ஆத்துமாக்கள்விழிப்படைந்தது எந்த இடத்தில்? இருளில் இருந்த ஆத்துமாக்கள்வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்டது எங்கே? மரித்த நிலையிலிருந்த ஆத்துமாக்கள்உயிர்பெற்றது எந்த இடத்திலே? சந்தேகத்தில் இருந்தவர்கள்தெளிவைப் பெற்றுக் கொண்டதும், துயரத்தில் இருந்தவர்கள்சந்தோஷம் அடைந்ததும், வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருந்தவர்கள்இளைப்பாறுதலைப் பெற்றுக் கொண்டதும் எந்த இடத்தில்? கிறிஸ்துவை ஆராதித்துக் கொண்டிருக்கிற விசுவாசிகளின் மத்தியிலே, வேதவசனம் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டிருந்த இடமாகிய சபையிலேதானே இவையெல்லாம் நிகழ்ந்தன! ஒரு தேசத்தில் பொது ஆராதனையை அகற்றிவிட்டு, சபைகளையும் ஆராதனை ஸ்தலங்களையும் மூடிவிட்டு, மதசம்பந்தமான காரியங்களுக்காக ஜனங்கள்ஒன்று சேர்ந்து கூடி வரக்கூடாது என தடை செய்துவிட்டு, தனி ஆராதனையைத் தவிர்த்து மற்ற எல்லா வழிபாடுகளையும் தடுத்துவிட்டால் அந்த தேசத்திலே என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது அந்த தேசத்தின் மீது பயங்கரமான ஆவிக்குரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும். வேதாகமத்தை தடை செய்தால், மக்கள்கிறிஸ்துவுக்குரிய காரியங்களில் முன்னேற முடியாத நிலை ஏற்படும். அது சாத்தானுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். வேதத்துக்கு அடுத்தபடியாக பொது ஆராதனையே மக்களுக்கு பெரும் நன்மையை அளிப்பதாக இருக்கிறது. "விசுவாசம் கேள்வியினால் வரும்" (ரோமர் 10:17) என வாசிக்கிறோம். மக்கள்ஆராதனைக்கென்று கூடி வரும்போது அங்கே கிறிஸ்துவின் விசேஷமான பிரசன்னம் இருக்கிறது.

ஆனாலும் பொது ஆராதனை வெறும் சடங்காக மாறிப் போயிருப்பதையும் நான் உணருகிறேன். ஆயிரக்கணக்கான பெயர் கிறிஸ்தவர்கள், சபைக்கும் ஆலயத்துக்கும் பெயரளவில் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலமாக கிடைக்கக் கூடிய நன்மையைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகவே அவர்கள்இருந்து வருகிறார்கள். பார்வோனின் கனவில் வந்த அவலட்சணமான ஏழு பசுக்களைப் போல அவர்கள்இளைத்துப் போயிருக்கிறார்கள். மேலும் மேலும் மோசமான நிலையை அடைகிறார்கள். மனந்திரும்ப மறுக்கிறார்கள். அவர்களின் இருதயம் மேலும் கடினமடைந்து கொண்டே போகிறது. இவர்களுடைய நிலையைப் பார்த்து, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க மறுக்கிறவர்கள்அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. "ஆலயத்துக்குப் போகாதவர்களும் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறவர்களைப் போலத்தான் இருக்கிறார்கள்" என அவர்கள்சொல்லுகிறார்கள். ஒரு நல்ல காரியத்தை ஒருவன் தவறாக பயன்படுத்துவதால் அது நல்ல காரியமே இல்லை என்று சொல்லுவது அறியாமை என நமக்குத் தெரியும். தவறாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற நல்ல காரியங்களையெல்லாம் இந்த பாவம் நிறைந்த உலகத்திலிருந்து அகற்றிவிட்டுப் பார்த்தீர்களானால், நல்ல காரியம் என எதுவுமே மிஞ்சாது. உங்களுக்கு முன்பாக இருக்கின்ற ஜனங்களை இரண்டு பிரிவாகப் பிரியுங்கள். ஆலயத்திற்கு தவறாமல் செல்லுகிறவர்கள், ஆலயத்துக்குப் போகாதவர்கள்எனப் பிரியுங்கள். ஆலயத்துக்குப் போய் கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களிடத்தில்தான் நீங்கள்அநேக நல்ல காரியங்களைப் பார்க்க முடியும். யார் என்ன சொன்னாலும் நீங்கள்அந்த வித்தியாசத்தை மறுக்க முடியாது. கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களும், தொழுது கொள்ளாதவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்என்று சொல்லுவது தவறானது.

எபிரெய நிருபத்தை எழுதியவர் சொன்ன காரியத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது: "சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக் கடவோம்" (எபி 10:25). இந்த புத்திமதியை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். பிறர், நன்மையாகக் கூறினாலும், தீமையாகக் கூறினாலும் பொது ஆராதனையில் தவறாமல் பங்குகொள்ள வேண்டும். தேவனுடைய ஆலயத்துக்கு வருஷம் முழுவதும் செல்லாதவர்களாக இருந்து, அவருடைய நாளைத் திருடி வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துகிறவர்களின் தவறான நடவடிக்கையை நாம் பின்பற்றாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எவ்வளவுதான் மனச்சோர்வு ஏற்பட்டாலும் அவருக்கு செலுத்த வேண்டிய ஆராதனையை தொடர்ந்து செலுத்த வேண்டும். காலப்போக்கில் அது நமக்கு நன்மையைத் தரும் என்பதைக் குறித்து நாம் சந்தேகமே அடையத் தேவையில்லை. நமக்கு இருக்கும் பரலோக வாஞ்சையை, பூலோகத்திலே கடவுளுடைய ஜனங்களோடு ஒன்று சேர்ந்து அவருக்கு ஆராதனை செலுத்துவதின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தாவீது சொன்னதைப்போல சொல்லக் கூடிய மனிதன் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறவனாக இருப்பான்: "கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவோம் வாருங்கள்என்று எனக்கு அவர்கள்சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்"; "ஆகாமியக்கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்" (சங் 122:1, 84:10).

  1. பொது ஆராதனையின் முக்கியமான கோட்பாடுகள்

வேதத்தை நன்றாக ஆராய்ந்து படிக்கிற எவருக்கும் ஆராதனையின் முக்கியமான கோட்பாடுகள்தெளிவாக விளங்கும். ஆனால், இந்த விஷயத்தில் இதுவரைக்கும் அதிக கவனம் செலுத்தியிராதவர்களுக்காக நான் அவைகளை வரிசைப்படுத்திக் விளக்குவது பிரயோஜனமாயிருக்கும் எனக் கருதுகிறேன்.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, ஆராதனைக்குரியவருக்கு மாத்திரமே நாம் பொது ஆராதனை செலுத்த வேண்டும். இதைக் குறித்து பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" (உபா 6:13, மத் 4:10). கன்னி மரியாளுக்கும், புனிதர்களுக்கும், தேவதூதர்களுக்கும் செலுத்தப்படுகின்ற கனமும், ஏறெடுக்கப்படுகின்ற ஜெபங்களும் ஒன்றுக்கும் உதவாது. கர்த்தருடைய வேதம் அதை அங்கீகரிப்பதில்லை. அந்தவிதமான ஆராதனைகளால் நேரம்தான் வீணாகிறது. மரித்துப் போன பரிசுத்தவான்களோ அல்லது தேவதூதர்களோ அப்படி ஏறெடுக்கப்படும் ஆராதனையை ஏற்கிறார்கள்என்பதற்கு எந்தவிதமான அத்தாட்சியும் இல்லை. அப்படியே அவர்கள்அதை கவனித்துக் கொண்டிருந்தாலும் அவர்களால் நமக்கு எதுவும் செய்ய முடியாது. அந்தவிதமான ஆராதனையானது தேவனுக்கு விரோதமான ஆராதனையாகும். தேவன் எரிச்சலுள்ளவராயிருக்கிறார். தமது மகிமையை அவர் யாரோடும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். பத்து கட்டளைகளிலே இரண்டாவது கட்டளையைப்போல கண்டிப்பான கட்டளை வேறு எதுவும் இல்லை. அதிலே அவர் உண்மையான தேவனாகிய தம்மைத் தவிர வேறு எதற்கும் ஆராதனை செலுத்தக்கூடாது என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல், எந்தவிதமான தேவர்களையும் உண்டாக்கவோ, வணங்கவோ கூடாது என்று ஆணித்தரமாகக் கட்டளையிட்டிருக்கிறார்.

இரண்டாவதாக, உண்மையான பொது ஆராதனையில் விசுவாசிகள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கர்த்தருக்கு ஆராதனையை ஏறெடுக்க வேண்டும். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே (கிறிஸ்துவினால்) அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்களைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? "கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்கள்" (எபி 7:25) என்று அவர்களைப் பற்றி விளக்குகிறது. அளவிட முடியாத அன்பும், இரக்கமும், பட்சமும் உள்ள வல்லமையான கடவுளிடம் நாம் சேருகிறோம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. "தேவன் அன்பாயிருக்கிறார்". ஆனால் அதே சமயத்தில் அவர் நியாயமுள்ளவராயும், தூய்மையானவராயும், பரிசுத்தமுள்ளவராயும், பாவத்தின் மீது தீராத வெறுப்புள்ளவராயும், தீமையை சகிக்க முடியாதவராயும் இருக்கிறார் என்பதும் உண்மையாயிருக்கிறது. அன்பு நிறைந்தவராகிய அதே கர்த்தர்தான் தூதர்களை வானத்திலிருந்து தள்ளினார். அவரேதான் உலகத்தை வெள்ளத்தால் அழித்தார். சோதோம் கொமோராவை நெருப்பினால் சுட்டெரித்துப் போட்டவரும் அவரே. மனிதன் அவரிடம் நேரிடையாக வர முடியாது. இயேசுவே கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்தராக இருக்கிறார்.

பரிகாரப் பலியில்லாமலும், மத்தியஸ்தரொருவர் இல்லாமலும், கர்த்தர் ஏற்படுத்தியிருக்கிற மத்தியஸ்தரை தவிர்த்து தனது சுய இஷ்டத்தின் அடிப்படையிலான மத்தியஸ்தர்களை வைத்துக் கொண்டும் அவரிடம் அலட்சியமாக வரத் துணிகிறவனின் ஆராதனையினால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை. "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்" (எபி 12:29) என்கிற வேத வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்றாவதாக, சபை ஆராதனையானது, நேரிடையாக வேதாகமத்தில் போதிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையிலோ அல்லது, அதன் போதனைகளை யூகித்து அறிந்து கொண்டதன் அடிப்படையிலோ, அல்லது வேத போதனைகளோடு இசைந்து இருக்கிறபடியாகவோ எப்போதும் அமைய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் காலத்திலே யூதர்கள்தேவனுக்கு வீணான ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள்என்பதை இயேசுவே குறிப்பிடுகிறார்: "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்" (மத் 15:9). புதிய ஏற்பாட்டு ஆராதனையானது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டளை எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆராதனை ஏற்பாடுகளில் தனிப்பட்ட சபைகளுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. இருந்தாலும், வேதம் தெளிவாக விளக்குகின்ற ஆராதனைக்குரிய விதிமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

வேதாகமத்திற்கு விரோதமான எதையும் செய்யும்படி தேவன் மனிதனிடம் எதிர்பார்ப்பதில்லை. இங்கிலாந்து சபையின் விசுவாச அறிக்கையின் இருபதாவது அம்சம் ஆராதனையைப்பற்றி பின்வருமாறு விளக்குகிறது. "ஆராதனை சம்பந்தமான காரியங்களை நிர்ணயிக்க சபைக்கு உரிமை இருக்கிறது. விசுவாசம் சம்பந்தமான கோட்பாடுகளை முடிவு செய்யவும் சபைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றிலும் கடவுளுடைய வார்த்தைக்கு விரோதமான எதையும் ஏற்படுத்த சபைக்கு அதிகாரமில்லை."

நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், வேதம் இரண்டு தவிர்க்கமுடியாத திருநியமங்களை (ஞானஸ்நானமும், திருவிருந்தும்) மாத்திரம் கொடுத்திருக்கும்போது, ஒருவன் வந்து ஏழு திருநியமங்கள்உண்டு என சொல்வானாகில் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. அதேபோல வேதாகமம் குறிப்பிடாத சில காரியங்களை, அவை இரட்சிப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று கூறி, மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த கட்டளைகளின் மூலமாக நமது மனசாட்சியை வசியப்படுத்த எவனாவது முயற்சித்தால் அப்படி சொல்லுவதற்கு அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவன் கூறுவதை நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவன் தவறு செய்வது மாத்திரமல்ல, பாவமும் செய்கிறவனாய் இருக்கிறான். "சுய இஷ்டமான ஆராதனை" என்கிற ஒன்று இருக்கிறது என்பதை பவுல் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அது "ஞானமென்ற பேர் கொண்டிருக்கிறது" என்கிறார். ஆனால் நடைமுறையில் அது மாம்சத்தை திருப்தி செய்யுமேயொழிய வேறொன்றிற்கும் பிரயோஜனப்படாது என்கிறார் (கொலோ 2:23).

நான்காவதாக, பொது ஆராதனையானது புத்திசாலித்தனமாகவும் ஏறெடுக்கப்பட வேண்டும். அதாவது, கடவுளை ஆராதிப்பவர்களுக்கு தாங்கள்என்ன செய்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி செய்யாத சமாரியர்களைக் குறித்து, "நீங்கள்அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்" (யோவான் 4:22) என இயேசு கூறுகிறார். அத்தேனே பட்டணத்தாரும் அறியாமையுடையவர்களாக, "அறியப்படாத" ஒரு தேவனை தொழுது கொண்டிருந்தார்கள். அறியாமையினால் வருகின்ற பக்திமார்க்கமானது மிகவும் தவறானதாகும். ஸ்பெயின் தேசத்தின் ரோமன் கத்தோலிக்க சமயத்தவர்கள்வேதாகமத்திலிருந்து ஒரு வார்த்தையையும் அறியாதவர்களாக, மிகுந்த பயபக்தியோடு கன்னி மரியாளின் முன்பாக கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து முழங்கால்படியிட்டு தொழுதுகொள்வதால் ஒரு பயனும் இல்லை. அல்லது தாங்கள்அறியாத லத்தீன் பாஷையிலே ஏறெடுக்கப்படுகின்ற ஜெபங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தவிதமான ஆராதனையையும், தங்களுடைய பயபக்தியையும் கர்த்தர் ஏற்றுக்கொள்வார் என நினைப்பது முட்டாள்தனமாகும். ஆதியிலே தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனை அறிவுள்ளவனாக, சிந்தித்து செயலாற்றக் கூடியவனாகத்தான் படைத்தார். மனதினாலே சிந்தித்து ஏறெடுக்காத ஆராதனையினாலே எந்தவிதமான நன்மையும் பிரயோஜனமும் இல்லை. செய்வதறியாமல் செயல்படுகிறவன் சிந்திக்க முடியாத மிருகத்திற்கு சமமானவன்.

ஐந்தாவதாக, பொது ஆராதனையானது இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படுவதாய் இருக்க வேண்டும். புத்தியை உபயோகித்து செலுத்தப்படுவது மாத்திரமல்லாமல் தேவன் மீதுள்ள அன்போடும் ஆராதனையானது அவருக்கு செலுத்தப்பட வேண்டும். வெளிப்பிரகாரமாக காண்பிக்கும் பக்தியோடு உள்ளான மனிதனிலும் அவரை நாம் வணங்க வேண்டும். இதைக் குறித்து பழைய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அதைப் புதிய ஏற்பாட்டிலே குறிப்பிடுகிறார்: "இந்த ஜனங்கள்தங்கள்வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள்உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள்இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள்எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசா 29:13; மத் 15:8-9). எசேக்கியேலின் காலத்திலும் இந்தவிதமாக யூதர்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது: "ஜனங்கள்கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்கள்அவைகளின்படி செய்கிறதில்லை. அவர்கள்தங்கள்வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள். அவர்கள்இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது" (எசேக் 33:31). தேவனிடத்தில் ஒருவன் தனியாக வந்தாலும், பொது ஆராதனை செய்ய வந்தாலும் அவனுடைய இருதயத்தைத்தான் கர்த்தர் பார்க்கிறார். ஆராதிக்க வந்தவர்களால் ஒரு சபையானது முழுவதுமாக நிரம்பி வழிவதாக இருக்கலாம். அவர்கள்சரீரப்பிரகாரமாக அந்தக் கூட்டத்திலே இருப்பார்கள். சரீர அங்கங்களைப் பயன்படுத்தி செய்கின்ற பலவிதமான சைகைகளும், உட்காருதலும், எழுந்திருக்குதலும், கிழக்கு நோக்கித் திரும்புதலும், தலைகுணிந்து வணங்குதலும், சிலுவைக் குறியிடுதலும், முகங்குப்புற விழுந்து நமஸ்கரித்தலும், இறுகிய முகத்தோற்றமும், மேல்நோக்கிய கண்களும் இப்படியாக அளவில்லாத வெளிப்பிரகாரமான காரியங்களை செய்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய இருதயமோ தேவனை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கலாம். ஆலயத்தில் சரீரப்பிரகாரமாக இருந்தாலும் இருதயம் உலக இன்பங்களிலும், வியாபாரத்திலும், மற்ற காரியங்களிலும் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கக்கூடும். அந்த மாதிரியான ஆராதனைகள்கடவுளின் பார்வையில் அருவருப்பானதாக இருக்கிறது. அவை கேடுகெட்டவிதமான ஆராதனைகள். அது அருவருப்பான மாய்மாலமாகும். கடவுள்ஆவியாயிருக்கிறார். மனிதனுடைய இருதயம் சம்பந்தப்படாத, வெறும் சரீரப்பிரகாரமான ஆராதனையை அவர் ஏற்பதில்லை. சரீரப்பிரகாரமான ஆராதனைகளினால் பயன் ஒன்றுமில்லை. "மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்"; "தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (1 சாமு 16:7; சங் 51:17).

மறுபடியும் பியூரிட்டன் பெரியவராகிய ஸ்டீபன் சார்நொக்கின் வார்¢த்தைகளைக் கவனியுங்கள். "இருதயத்தில் ஆர்வமில்லாமலும், நல்மனசாட்சியில்லாமலும் மனிதர்கள், தங்கள்வாழ்நாள்முழுவதும் பொது ஆராதனைகளில் கலந்து கொள்ளக்கூடும். வெளிப்பிரகாரமாக ஆராதனைகளுக்கு சென்று வருவது போதுமானது என்று அவர்கள்தங்களை சமாதானப்படுத்திக் கொள்வார்கள். அரசாங்க, இராணுவப் பணிகளில் இருப்பவர்கள்அவர்கள்பணிக்குரியதான சீருடைகளைத் தரித்துக் கொள்வதும், அடையாள அட்டைகளை அணிந்து கொள்வதும் அவர்களை யாரென அடையாளங்காட்டுவதற்கேயொழிய, அதுவே அவர்கள்வேலையாகாது. வெளிப்பிரகாரமாக ஆராதனைகளில் கலந்து கொள்வதும் அதுபோன்ற ஓர் அடையாளந்தான். அதுவே ஆராதனையாகிவிடாது. பாவத்தின் முழு வீரியமும் ஒருவனுடைய இருதயத்தின் ஆழத்திலே புதையுண்டு கிடப்பது போலவே, ஆராதனைக்குரிய முழு பலனும் அது அவன் ஆத்துமாவிற்குள்ளிருந்து வந்தால்தான் கிடைக்கும். மாமிச இச்சைகளை அடக்காமல் ஆயிரக்கணக்கான முறை தேவனை ஆராதிப்பதால் என்ன பயன்? தெய்வீக அன்பு இல்லாமல், மிகுதியான ஜெபங்களை ஏறெடுப்பது, சத்தமிடுகிற வெண்கலமாகவும் ஓசையிடுகிற கைத்தாளமாகவும்தான் தேவனுடைய பார்வையில் காணப்படும். வெளிப்பிரகாரமாக மாத்திரம் கொண்டிருக்கிற பரிசேய வழிபாட்டு முறைகளை நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாய்மாலம் என்கிற பெயரால்தான் அழைக்கிறார். பலியையும் தகனபலிகளையும் தேவன் விரும்புகிறவர் அல்ல. நிழல்களை அல்ல, நிஜத்தையே அவருக்கு செலுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். மனிதனுடைய இருதயத்திலிருந்து வருவதையே அவர் கேட்கிறார். உள்ளான இருதயத்தின் பிரதிபலிப்பாக வெளிப்படையான ஆராதனை முறைமைகளை அவர் கட்டளையிட்டிருக்கிறார். இவைகள்மனிதனின் உள்ளான இருதயத்தைத் தூண்டி, அவனை உற்சாகப்படுத்தி, இருதயத்திலிருந்து ஆராதனையை அவருக்கு ஏறெடுக்க உதவியாயிருக்கும்படிக்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்படையாக காணப்படுபவைகள்உள்ளான இருதயத்திற்கு உதவியாயிருக்க வேண்டுமேயொழிய, வெளிப்பிரகாரமான முறைமைகளுக்கு முதலிடம் கொடுத்து அவைகளை உயர்த்திவிடக் கூடாது."

"வீட்டிலேயே மரித்துப் போன ஆயிரம் ஆடுகளை இஸ்ரவேலர், கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்து அவருக்கு பலி செலுத்தினால் அதை சிறந்த ஆராதனையாக தேவன் ஏற்றுக் கொள்ளுவாரா? அது அவருக்கு உகந்த ஆராதனையாக இருக்குமா? உயிரோடுள்ள ஆட்டை ஆலயத்திற்குக் கொண்டுவந்து, அங்கே அந்த பலிபீடத்திலே அது அடிக்கப்பட்டு, அதன் இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பது அவர் ஏற்படுத்திய முறைமை. இறந்த நிலையில் கொண்டுவரப்படும் ஆயிரம் ஆடுகளைப் பார்க்கிலும், உயிரோடு கொண்டுவரப்படும் ஒரே ஆடுதான் அதிக மதிப்புள்ளது" (Charnock, Vol.1 Pg. 323).

ஆறாவதாக, பொது ஆராதனையானது அதிக கனத்தோடு நடத்தப்பட வேண்டும். "நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக் கொள். மூடர் பலியிடுவதைப் போல பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள்செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்" (பிரசங்கி 5:1) என்கிறது வேதம். இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திலே ஆரம்பத்திலும் முடிவிலும் அவர் தவறான ஆராதனை முறையைக் குறித்துக் கண்டித்ததை நாம் வேதத்திலே காண்கிறோம். இரண்டு வெவ்வேறான சந்தர்ப்பங்களிலே அவர் ஆலயத்திலே காசுக்காரரையும், புறா விற்கிறவர்களையும் பார்த்து, ஆலயத்தை அவர்கள்தங்கள்அநீதிகளால் நிரப்பியிருந்ததைக் குறித்து கண்டிக்கிறார். அவ்விடத்திலே அவர்களை அவர் கடுமையான வார்த்தைகளால் கடிந்து கொள்கிறார். "என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்" (மத் 21:13) எனக் கடிந்து கொள்கிறார். கிறிஸ்தவர்கள்என்று தங்களைக் கூறிக் கொள்ளுகிறவர்கள்இன்றைக்கு சபைகளுக்குப் போகிறார்கள். அங்கு போய் எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஆராதனையின்போது தங்களுக்குள்இரகசியமாக பேசிக் கொள்ளுகிறார்கள். மனதை இங்குமங்குமாக அலைபாய விடுகிறார்கள். கொட்டாவி விடுகிறார்கள். தூங்குகிறார்கள். அங்கு போய் ஜெபிப்பதோ, கடவுளைப் புகழ்வதோ, கவனித்து வார்த்தையைக் கேட்பதோ கிடையாது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பொல்லாத யூதர்களைப் போலவே இவர்களும் மாய்மாலக்காரர்களாய் இருக்கிறார்கள். தமது பிரசன்னம் உள்ள இடத்தில் காணப்படும் அலட்சியப் போக்கையும், மரியாதைக் குறைச்சலையும் தேவன் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே மாட்டார் என்பதை அவர்கள்பொருட்படுத்துவதில்லை. தங்கள்சொந்த வீட்டில் இருப்பது போன்றவிதத்தில் தேவசந்நிதியில் நடந்துகொள்வது பெரும் குற்றமாகும். தாம் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியின் முன்னிலையில்கூட இப்படி நடந்து கொள்ளத் துணியாத இவர்கள்தேவன் பிரசன்னமாயிருக்கிற இடத்திலே அலட்சியமாக இருப்பது மாபெரும் தவறாகும். வெறும் வெளிப்பிரகாரமான ஆராதனையை அவர் விரும்புவதில்லை என்பதற்காக நாம் மிகவும் நிர்விசாரமாக நடந்து கொள்வது சரியல்ல. அப்படியிராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். சரீரப்பிரகாரமாக மட்டும் நடந்து கொள்ளும் பக்தியை அவர் விரும்புவதில்லை என்பதால் நாம் பொது ஆராதனையில் மற்றவர்களுடன் கூடி வந்திருக்கையில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைப்பது முட்டாள்தனம். மனிதர்களாகிய நாம் அழிந்து போகக் கூடிய நிலையில் இருக்கிறோம். நம்மைப் படைத்தவராகிய தேவனோ சதாகாலமும் இருப்பவர். அவர் முன்னிலையில் வருகின்ற ஈனப் பிறவிகளாகிய நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயற்கையைப் பார்த்தும், நமது பகுத்தறிவு மூலமும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். "தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபையில் மிகவும் பயப்படத்தக்கவர். தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப் படத்தக்கவர்" (சங் 89:7) என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது? சபைப் பொது ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்றால், அதை மிகவும் கவனத்தோடும் நன்றாகவும் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியமாகும். கடவுள்வானத்தில் இருக்கிறார். நாம் பூலோகத்தில் இருக்கிறோம். நாம் அஜாக்கிரதையாகவோ பதறியோ எதையும் செய்யாதபடிக்கு கவனமாக இருப்போம். நாம் யாரென்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். "நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக் கடவோம்" (எபி. 12:28).

நான் எடுத்துக்கூறிய இந்த 6 முக்கிய கொள்கைகளில் விசேஷித்த கவனம் செலுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நமது தேசத்தில், ஆராதனையின் ஆணிவேரையே அவை அசைப்பதாய் இருக்கிறது. அப்படியிருக்க, உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் ரோமன் கத்தோலிக்கர், முஸ்லீம், விக்கிரக ஆராதனைக்காரர்கள்இவர்கள்மெய்யான தேவனை வணங்காததைக் குறித்து நாம் எதுவும் சொல்லுவதற்கில்லை! ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள்நம் நாட்டில் வாரந்தோறும் ஆராதனைக்கு தவறாமல் சென்றாலும் அவர்களின் ஆராதனையில் எந்த பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஆராதனையில் வேதத்திற்கு இடமில்லை, இயேசு கிறிஸ்துக்கு இடமில்லை, பரிசுத்த ஆவிக்கு இடமில்லை. அதில் புத்திசாலித்தனமோ, மனித இருதயத்தின் ஈடுபாடோ இல்லை. அப்படி ஆராதனை செய்வதால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பிரயோஜனமற்ற ஆராதனையில் ஈடுபடுவதைக் காட்டிலும் அவர்கள்வீட்டிலே உட்கார்ந்திருக்கலாம். நமது நிலைமை இப்படி ஆகாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். நமது உயிருள்ள வரைக்கும், நாம் எத்தனை முறை ஆராதனைகளில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டிலும், அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எத்தனை முறை அவரை ஆராதித்திருக்கிறோம் என்பதையே அவர் கவனிக்கிறார். எண்ணிக்கை முக்கியமல்ல, தரமே முக்கியம். எத்தனை பேர் அவரை ஆராதிக்கிறார்கள்என்பதில் அவருக்கு நாட்டமில்லை, ஆவிக்குரியவிதத்தில் உள்ளான மனிதனில் செயல்படுகிற சிறுகூட்டமே அவரை திருப்திப்படுத்தும். மற்றவர்கள்பார்க்கும்படியாக காண்பிக்கிற பக்திவேஷங்கள்ஒருபோதும் கடவுளை திருப்திப்படுத்தாது. ஞானமில்லாதவர்களும், குழந்தைகளும்தான் விளையாட்டுத்தனமான காரியங்களை மிகவும் விரும்புவார்கள். ஆராதனையில் செய்யப்படுகின்ற வெளிவேஷங்களில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கடவுள்அவைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சகலத்தையும் காண்கிறதான அவருடைய கண்கள்உள்ளான மனிதனின் செயல்பாடுகளையே கவனிக்கிறது. (இனியும் வரும்)

 

கீழ்ப்படிவில்லாத அன்பா, அன்பு சார்ந்த கீழ்ப்படிவா?

(பாவத்தை அழித்தல் - 2)

கடந்த இதழில் கொலோ. 3:5ல் இருந்து 'பாவத்தை அழித்தல்' பற்றிய முதலாவது ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம். அதில் பாவத்தை அழித்தல் பற்றிய தவறான போதனைகளை விளக்கியிருந்தேன். அத்தோடு கொலோ. 3:5, அந்த நூலில் எத்தகைய சந்தர்ப்பத்தில் அமைந்து காணப்படுகிறது என்பதையும் விளக்கியிருந்தேன். கிறிஸ்தவர்கள் மத்தியில் இரண்டு வகையான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், அதாவது ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் ஒரு வகை என்றும், இன்னொரு வகை ஆவியில் பலவீனமுள்ள கிறிஸ்தவர்கள் என்றும் கொலோ 3:1-11ன் அடிப்படையில் விளக்க முற்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அந்த ஆக்கத்தில் கொலோ 3:5ன் ஆரம்பத்தில் காணப்படும் வார்த்தையான 'ஆகவே' மூன்றுவித பணிகளைச் செய்கின்றது என்பதையும் விளக்கியிருந்தேன். அந்த மூன்று பணிகளின் மூலம் கொலோ 3:5, அதற்கு முன்னாலுள்ள வசனங்களான 1-4 வரையுள்ள வசனங்களில் இருந்து பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்படுகிறது என்பதையும், கொலோ 3:1-4 வரையுள்ள வசனங்கள் கிறிஸ்தவர்களைப் பற்றியே விளக்கிப் பேசுகிறது என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த ஆக்கத்தில் நாம் தொடர்ந்து பாவத்தை அழித்தல் பற்றிய தெளிவான வேத போதனைகளை கவனிப்பதற்கு முன்பாக வேதத்திற்கு முரணான இது பற்றிய இன்னும் சில தவறான போதனைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. பாவத்தை அழித்தல் பற்றிய தெளிவான வேதபோதனைகளை விளங்கிக் கொள்ளுவதற்கு நாம் இந்த ஆக்கத்தில் கவனிக்கப்போகும் அம்சங்கள் மிகவும் அவசியமானவையாகும்.

நான் ஏன் நேரடியாக கொலோ 3:5 எதைப் போதிக்கிறது என்பதை விளக்க ஆரம்பிக்கக் கூடாது, எதற்காக இப்படி தவறான போதனைகளை முதலில் பார்க்க வேண்டியது அவசியம்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் பதிலளிப்பதும் அவசியம். வேதம் மட்டுமே நமக்கு அதிகாரம் என்பதை நான் பலதடவைகள் இந்தப் பத்திரிகையில் சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் விசுவாச நடவடிக்கைகளில் நம்மை வழிகாட்ட வேண்டும் என்பதையும் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தபோதும் வேத போதனைகளை நாம் வாழும் காலத்திலும், சமூகத்திலும் நடைமுறைக்குப் பயன்படும்படியாக வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமானால் வேதத்தை அது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையிலும், எத்தகைய கிறிஸ்தவ சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற அடிப்படையிலும் ஆராய்ந்து பார்க்கிறபோதே அதன் பயன்பாடுகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இதை இன்னொரு வகையில் விளக்குவதானால், எந்த வேதப்பகுதியையும் நம் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு அதை நாம் வாழும் கிறிஸ்தவ சூழ்நிலையை மனதில் வைத்துப் படித்தே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் ஒரு பின்னணி இருக்கின்றது. அதேபோல், நமக்கும் இந்த இருபத்தியோராவது நூற்றாண்டில் ஒரு பின்னணி இருக்கின்றது. எந்த வேதப்பகுதியினதும் போதனை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நமக்கு என்ன சொல்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். வேதத்தின் போதனை ஒரு காலத்திலும் மாற்றமடையாது, மாறவும் முடியாது. ஆனால் அது நாம் வாழும் சூழ்நிலைக்கு பயன்பட வேண்டும். ஒரு போதகன் என்ற முறையில் எந்த வேதப்பகுதியின் போதனையையும் நான் நாமிருக்கும் சூழ்நிலைக்கு பயன்படும்விதத்தில் வியாக்கியானம் செய்ய வேண்டும். ஆகவே, என்னை, நம்மை சுற்றிக் காணப்படும் கிறிஸ்தவ சூழ்நிலையையும், உலவி வரும் போதனைகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. அவற்றை அலட்சியப்படுத்துவது நமக்கு நன்மையைத் தராது.

இதற்கு ஓர் உதாரணத்தைத் தர விரும்புகிறேன். அப்போஸ்தலர் நடபடிகள் ஒரு வரலாற்றுப் புத்தகம் என்பது நமக்குத் தெரியும். அதை நாம் எப்படிப் படித்து புரிந்துகொள்ள வேண்டும்? அதைப்படிக்கும்போது இதுவரை கடந்துள்ள இருபது நூற்றாண்டு சபை வரலாற்றையும், கர்த்தர் இந்த உலகத்தில் நடத்தி வந்திருக்கும் காரியங்களையும் நாம் மறந்துவிட்டு எதுவுமே நிகழவில்லை என்ற எண்ணத்தில் படிக்க முடியுமா? அப்படிப் படித்தால் என்ன நடக்கும்? அப்போஸ்தல நடபடிகளில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் நம் காலத்திலும், திருச்சபையிலும் மாற்றங்கள் எதுவுமில்லாமல் அந்தப்படியே நடக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். பரிசுத்த ஆவியானவர் நம்மீது வர வேண்டும் என்றும், வானமும், பூமியும் நடுங்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்போம். சபையில் காணிக்கை எடுக்கிறபோது தவறான எண்ணத்தோடு அதைக்கொடுத்தால் சிலர் பொத்தென்று உடனடியாக விழுந்து இறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். எவராவது வேதத்தை ஆர்வத்தோடு படித்து அதை விளங்கிக் கொள்ளக் கஷ்டப்பட்டால் பிலிப்பைப் போல யாராவது திடீரெனத் தோன்றி அப்பகுதிக்கு விளக்கங்கொடுத்து அந்த நபருக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி எதிர்பார்ப்போம். ஆனால், உண்மையில் நாம் அந்த வகையில் அப்போஸ்தல நடபடிகளை வாசிக்காமல் அந்த முதல் நூற்றாண்டு வரலாற்று நிகழ்ச்சிகள் போதிக்கும் எக்காலத்துக்குமுரிய நடைமுறை அம்சங்களையும், பயன்பாடுகளையும் மட்டுமே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் திருச்சபை சூழ்நிலையில் பயன்படுத்திக்கொள்ள வேத போதனைகளை நாம் வாழும் காலத்திலும், சமூகத்திலும் நடைமுறைக்குப் பயன்படும்படியாக வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமானால் வேதத்தை அது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையிலும், எத்தகைய கிறிஸ்தவ சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற அடிப்படையிலும் ஆராய்ந்து பார்க்கிறபோதே அதன் பயன்பாடுகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இதை இன்னொரு வகையில் விளக்குவதானால், எந்த வேதப்பகுதியையும் நம் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு அதை நாம் வாழும் கிறிஸ்தவ சூழ்நிலையை மனதில் வைத்துப் படித்தே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் ஒரு பின்னணி இருக்கின்றது. அதேபோல், நமக்கும் இந்த இருபத்தியோராவது நூற்றாண்டில் ஒரு பின்னணி இருக்கின்றது. எந்த வேதப்பகுதியினதும் போதனை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நமக்கு என்ன சொல்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். வேதத்தின் போதனை ஒரு காலத்திலும் மாற்றமடையாது, மாறவும் முடியாது. ஆனால் அது நாம் வாழும் சூழ்நிலைக்கு பயன்பட வேண்டும். ஒரு போதகன் என்ற முறையில் எந்த வேதப்பகுதியின் போதனையையும் நான் நாமிருக்கும் சூழ்நிலைக்கு பயன்படும்விதத்தில் வியாக்கியானம் செய்ய வேண்டும். ஆகவே, என்னை, நம்மை சுற்றிக் காணப்படும் கிறிஸ்தவ சூழ்நிலையையும், உலவி வரும் போதனைகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. அவற்றை அலட்சியப்படுத்துவது நமக்கு நன்மையைத் தராது.

இதற்கு ஓர் உதாரணத்தைத் தர விரும்புகிறேன். அப்போஸ்தலர் நடபடிகள் ஒரு வரலாற்றுப் புத்தகம் என்பது நமக்குத் தெரியும். அதை நாம் எப்படிப் படித்து புரிந்துகொள்ள வேண்டும்? அதைப்படிக்கும்போது இதுவரை கடந்துள்ள இருபது நூற்றாண்டு சபை வரலாற்றையும், கர்த்தர் இந்த உலகத்தில் நடத்தி வந்திருக்கும் காரியங்களையும் நாம் மறந்துவிட்டு எதுவுமே நிகழவில்லை என்ற எண்ணத்தில் படிக்க முடியுமா? அப்படிப் படித்தால் என்ன நடக்கும்? அப்போஸ்தல நடபடிகளில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் நம் காலத்திலும், திருச்சபையிலும் மாற்றங்கள் எதுவுமில்லாமல் அந்தப்படியே நடக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். பரிசுத்த ஆவியானவர் நம்மீது வர வேண்டும் என்றும், வானமும், பூமியும் நடுங்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்போம். சபையில் காணிக்கை எடுக்கிறபோது தவறான எண்ணத்தோடு அதைக்கொடுத்தால் சிலர் பொத்தென்று உடனடியாக விழுந்து இறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். எவராவது வேதத்தை ஆர்வத்தோடு படித்து அதை விளங்கிக் கொள்ளக் கஷ்டப்பட்டால் பிலிப்பைப் போல யாராவது திடீரெனத் தோன்றி அப்பகுதிக்கு விளக்கங்கொடுத்து அந்த நபருக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி எதிர்பார்ப்போம். ஆனால், உண்மையில் நாம் அந்த வகையில் அப்போஸ்தல நடபடிகளை வாசிக்காமல் அந்த முதல் நூற்றாண்டு வரலாற்று நிகழ்ச்சிகள் போதிக்கும் எக்காலத்துக்குமுரிய நடைமுறை அம்சங்களையும், பயன்பாடுகளையும் மட்டுமே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் திருச்சபை சூழ்நிலையில் பயன்படுத்திக்கொள்ள இல்லாவிட்டாலும் நிச்சயம் பரலோகம் போவான். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் அவனுடைய விசுவாசத்தோடு எந்தப் பாவம் இணைந்திருந்தாலும் (அல்லது கீழ்ப்படியாமை காணப்பட்டாலும்) அவன் நிச்சயம் பரலோகம் போவான்.' 'இரட்சிக்கப்பட்ட ஒருவன் (அவன் எந்தவிதத்தில் வாழ்க்கை நடத்தினாலும்) எப்போதும் இரட்சிக்கப்பட்டவன்' என்ற போதனையை பின்பற்றுகிற கென்டல் இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார். இது வேதத்தில் காணப்படுகின்ற ஒரு போதனை அல்ல. இந்தவிதமான போதனையை அளிக்கிறவர்கள் வேதத்தின் நீதிமானாக்குதல் போதனையோடு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதபடி பரிசுத்தமாக்குதல் போதனையை முற்றாக விலக்கிவிடுகிறார்கள். உண்மையில், ஒரு மனிதன் பரிசுத்தமான வாழ்க்கையை நடத்தாவிட்டால் அவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிவித்துக்கொள்ளவே முடியாது.

பரிசுத்தமாக்குதலைப் பற்றிய தவறான போதனைகளில் ஒன்று நாம் மேலே பார்த்தது. அதையும்விட வேறு தவறான எண்ணப்போக்குகளும் உலவி வருகின்றன. இவை வேத போதனைகளுக்கு முரணானவை மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களைப் பாதித்தும் வருகின்றன. இன்னொருவர் பரிசுத்தமாக்குதல் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார், "நீங்கள் கிறிஸ்தவ கீழ்ப்படிதலை ஒரு கடமையாக விளக்குகிறீர்கள் . . . அதனால் கீழ்ப்படிதலுக்கு கடமைப்பட்டவனாக கிறிஸ்தவனை பார்க்கிறீர்கள். வேதம் வேறுவிதமாக போதிப்பதாக நான் காண்கிறேன். விசுவாசம் அன்பின் அடிப்படையில் இயங்குகிறது. கிறிஸ்துமேல் இருக்கும் ஆழமான அன்பினாலேயே கிறிஸ்தவன் அவருக்குக் கீழ்ப்படிகிறான். நாங்கள் அன்பின் மூலமாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறோமே அல்லாமல் கடமைப்பாட்டால் அல்ல". இந்த மனிதரின் வாதம் உங்களுக்குப் புரிகிறதா? இவர் சொல்லுவதில் ஓரளவுக்கு உண்மை இருந்தபோதும் அநேக தவறுகளும் இருக்கின்றன. இது ஒருபக்கப் பார்வையாக இருக்கிறது. இந்த மனிதருக்கு 'கீழ்ப்படிவு', 'கடமை', 'பொறுப்பு', 'கட்டுப்பாடு' என்ற வார்த்தைகள் பிடிக்காதவை. கிறிஸ்துவில் இருக்கும் அன்பால் மட்டுமே பரிசுத்தமாக இருக்கப்போகிறேன் என்று இந்த மனிதர் சொல்லுகிறார். ஆனால், வேதம் அந்த முறையில் பரிசுத்தமாக்குதலாகிய கிருபையை விளக்கவில்லை.

கிறிஸ்தவர்களுக்கு, கீழ்ப்படிதல், கடமை, கட்டுப்பாடு, பொறுப்பு என்ற வார்த்தைகள் பிடிக்காமல் போயிருக்கின்ற ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறிய அழுத்தத்தை 'அன்பு' என்ற வார்த்தைக்கு கொடுத்து 'கடமை' என்ற வார்த்தைக்கே இடமில்லாதபடி செய்திருக்கிறார்கள் பலர். இதனால் சபைப் போதகர்களும் எங்கே, 'அதிகாரம் செலுத்துகிறவனாக இருக்கிறான்' என்ற மக்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் கீழ்ப்படிதல், கடமை என்ற வார்த்தைகளை பிரசங்க மேடைகளில் பயன்படுத்தத் தவறுகிறார்கள். ஆகவே, இன்றைக்கு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து கடமைப்பாட்டோடு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு கிருபையாக பரிசுத்தமாக்குதல் பலருடைய எண்ணங்களில் பதிவதில்லை. கிறிஸ்து மேல் இருக்கும் அளவுக்கதிகமான அன்பு தங்களில் ஏற்படுத்தும் ஓர் அடையாளமாக மட்டுமே அவர்கள் அதைப் பார்க்கிறார்கள் கர்த்தருடைய நீதிச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது கிறிஸ்தவனின் வழமையான கடமையாக இன்று விளக்கப்படுவதில்லை. 'கிறிஸ்துவின் மேல் இருக்கும் அன்பால் பத்துக் கட்டளைகளை நான் பின்பற்றுவேனே தவிர கடமையின் அடிப்படையில் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நான் நடக்கத் தேவையில்லை' என்று சொன்னவர்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் கிறிஸ்து தங்கள் மேல் வைத்திருக்கும் அன்பினால் பத்துக் கட்டளைகளைத் தங்களில் நிறைவேற்றுகிறார் என்று நம்புகிறார்கள். 'அன்பே கட்டளைகளை நிறைவேற்றுகிறது' என்பது இவர்களுடைய வாதம். அப்படியானால் பத்துக் கட்டளைகளை நீங்கள் எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்? என்று நாம் அவர்களைப் பார்த்துக் கேட்டால் அதற்குப் பதிலாக அவர்கள், 'கிறிஸ்து மேல் நாம் அதிகமாக அன்பு செலுத்தினால் நம்மில் இருக்கும் கிறிஸ்து அந்தக் கட்டளைகள் நம்மில் நிறைவேறும்படி பார்த்துக்கொள்ளுவார்' என்று அவர்கள் சொல்லுவார்கள். இத்தகைய எண்ணப்போக்கு கர்த்தர் நம்மில் எதிர்பார்க்கும் கடமையையும், பொறுப்புணர்வையும் அவசியமில்லாதவையாகப் பார்க்கிறது. கிறிஸ்துவில் இருக்க வேண்டிய அன்பைப் பற்றிய எந்தவிதமான போதனையும் நம்முடைய கிறிஸ்தவ கடமைகளை நிராகரிக்குமானால் அது வேதபோதனையாக இருக்க வழியில்லை.

இத்தகைய வாதத்தில் இருக்கும் கோளாறை சிறிது கவனித்துப் பார்ப்போம். கிறிஸ்து மேல் அன்பு காட்டுவோம், ஆனால், கட்டுப்பாடுகளோடு வாழ மாட்டோம் என்று சொல்லுவது பெருந்தவறு. இப்படிச் சொல்லுவதன் மூலம் அன்புக்கும் கீழ்ப்படிவுக்கும் சம்பந்தமில்லை என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிடுகிறார்கள். அன்பும் கீழ்ப்படிதலும் ஒன்றுக்கு ஒன்று முரணானவையல்ல. உதாரணத்திற்கு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றிவைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் அதை அன்போடுதான் செய்வார்கள். இருந்தபோதும் அது அவர்களுடைய கடமையாகவும் இருப்பதாக பத்துக் கட்டளைகள் காண்பிக்கின்றன. தங்களுடைய பிள்ளைகளில் பெற்றோர்கள் காட்டுகின்ற அன்பு அவர்களுடைய பொறுப்பை இல்லாமலாக்கிவிடுவதில்லை. எந்தளவுக்கு பிள்ளைகள் மேல் பெற்றோர்களின் அன்பு வளர்கிறதோ அந்தளவுக்கு அவர்களுடைய பொறுப்புணர்வும் வளரும். பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் வைக்கும் அதிக அன்பு அவர்களுடைய கடமையிலிருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்துவிடாது. அதேபோல், மனைவிமார் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அதை அவர்கள் கர்த்தர் மேல் இருக்கும் அன்பின் காரணமாக மட்டுமல்லாமல் கர்த்தர் தங்கள் மேல் சுமத்தியிருக்கும் கடமையாகவும் நினைத்து நடந்துகொள்ள வேண்டும். கணவன் தன் மனைவி மீது அன்பு காட்ட வேண்டும். அதேவேளை வீட்டு வேலைகளிலும் துணையாக இருக்க வேண்டும். அன்பின் காரணமாக மட்டுமல்லாமல் கடமையாகவும் எண்ணி அந்தக் காரியங்களை வீட்டில் செய்து கொடுக்க வேண்டும்.

இதேபோல்தான் நாம் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்து மேல் பேரன்பு வைத்திருந்தாலும் அந்த அன்பு கிறிஸ்துவுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய கடமையை அகற்றி விடாது. அவர் நம்முடைய எஜமான், நாம் அவருக்கு அடிமைகள். நம்முடைய எஜமானை நாம் நேசிக்கிறோம், இருப்பினும் அவருடைய அடிமைகளாக நாமிருந்து அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதும் அவசியம். நாம் அவருக்கு கட்டுப்பட்ட அடிமைகள் (தீஷீஸீபீ ௳மீக்ஷீஸ்ணீஸீ௴) என்ற வார்த்தையையே புதிய ஏற்பாடு பயன்படுத்துகிறது. கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் உறவு அவருக்கு நாம் கீழ்ப்படியவும், பொறுப்போடு நடந்துகொள்ளவுமான கடமைகளை உள்ளடக்கியிருக்கிறது. பெரும் பொறுப்புணர்வோடும் அன்போடும் நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதை இயேசு விளக்கியிருக்கும் முறையைக் கவனியுங்கள்:

"உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக¢கி: நீ முன்பு போய் சாப்பிட்டு வா என்று அவனுக்கு சொல்வானோ? நீ எனக்கு சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு நான் போஜனம் பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ் செய், அதற்குப் பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்கு சொல்வானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ் செய்வானோ? அப்படிச் செய்ய மாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்." (லூக்கா 17:8-10). இந்த முறையில்தான் நாம் பணிபுரிய வேண்டும் என்று இயேசு நமக்கு இதன் மூலம் விளக்கிக் காட்டுகிறார். அவர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பும், நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பும் கடமைப்பொறுப்போடு நாம் அவருக்கு பணிசெய்வதில் இருந்து நமக்கு விடுதலையளித்துவிடவில்லை.

'நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்' என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 14:15). இதில் இயேசு 'கைக்கொள்ளுங்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். அந்த வார்த்தையில் கட்டளைத்தொனி காணப்படுகிறது. அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதன்மூலம் அவர் மீதிருக்கும் நமதன்பை வெளிப்படுத்தும்படி அவர் கேட்கிறார். இந்தவிதத்தில் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களை அவர் தன் 'நண்பர்களாகக்' கருதுகிறார் (யோவான் 15:14-15). இயேசு இணைத்து வைத்திருப்பதை நாம் பிரிக்கப் பார்க்கக் கூடாது. அவரைப் பொறுத்தவரையில் அன்பும், கடமையும் இணைந்தே காணப்படுகிறது. அன்பு கடமைக்கு விரோதமானதல்ல. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவர் மேல் அன்பு செலுத்த மட்டும் விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் வாழ்க்கையில் பெருந்தவறிழைக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்களுடைய நம்பிக்கைகள் தவறானவையும், வேதத்திற்கு புறம்பானவையுமாகவும் காணப்படுகின்றது. நீங்கள் கிருபையை அடைந்திருப்பதால் கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டு அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும் கடமையில் இருந்து தப்ப முடியாது. நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் பாவத்தை அழித்தல் பற்றிய கடமையோடு இது பெருந்தொடர்புடையது. நீங்கள் கிறிஸ்தவர் என்று உங்களை அழைத்துக்கொண்டு கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டு அவரது கட்டளைகளின்படி பாவத்தோடு போராடி அதை அழிக்கும் கடமையை செய்ய மறுத்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாவத்தை அழிக்கும் விஷயத்தில் நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்தவ அன்பும், சமாதானமும் இருக்காது. ஏன் தெரியுமா? நாம் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கும் விஷயம் எல்லாக் கிறிஸ்தவர்களையும் கட்டுப்படுத்துகிற, எல்லாக் கிறிஸ்தவர்களும் கடமைப்பாட்டோடு பின்பற்ற வேண்டியது. கொலோ 3:5ல் பவுலின் 'அழித்துப்போடுங்கள்' என்ற வார்த்தை ஆணித்தரமான கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வசதியிருந்தால் அல்லது விருப்பமானால் அல்லது கூடுமானால் அப்படிச் செய்யுங்கள் என்று பவுல் எழுதவில்லை. தெளிவான நிராகரிக்க முடியாத கட்டளையாக பவுல் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். நம்முடைய அவயவங்கள் செய்கின்ற பாவங்கள் தானாய் நின்றுவிடுவதில்லை அவற்றை நாம் அழித்துப்போட வேண்டும் என்கிறார் பவுல்.

இதுவரை நாம் கீழ்ப்படிவும், பொறுப்பான பரிசுத்த நடவடிக்கைகளும் கிறிஸ்தவ வாழ்க்கையில் இல்லாமல் பரலோகம் போக முடியாது என்பதைப் பார்த்திருக்கிறோம். அன்பு மட்டும் நமக்கு நித்திய வாழ்க்கையைத் தர முடியாது என்பதையும் அறிந்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்து நம்மிடம் அன்போடு கூடிய கீழ்ப்படிதலையும், அவருடைய கட்டளைகளைப் பொறுப்போடு செய்கின்ற கடமைப்பாட்டையும் எதிர்பார்க்கிறார். பாவத்தை அழித்தலைப் பற்றி ஆழமாகப் படிப்பதற்கு முன்பாக இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இனி நாம் ஒரு மனத்துடன் கடமைப்பாட்டோடு கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி ஈடுபட வேண்டிய பாவத்தை அழித்தலை ஓரங்கமாகக் கொண்டிருக்கும் பரிசுத்தமாக்குதலாகிய கடமையை ஆராய்வோம்.

பரிசுத்தமாக்குதல் என்றால் என்ன?

பாவத்தை அழித்தல் பரிசுத்தமாக்குதலின் ஒருபகுதியாக இருக்குமானால் பரிசுத்தமாக்குதல் என்றால் என்ன என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். வேதம் பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால் அந்த வார்த்தையை விளங்கிக்கொள்ளுவது அவசியம். யோவான் 17:19ல் இயேசு, 'அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்' என்கிறார். இந்த வசனத்தில் இயேசு பரிசுத்தமாக்குதல் என்ற பதத்தை இரண்டுவிதமாக பயன்படுத்தியிருக்கிறார். பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையின் கிரேக்க மூலம் ஒரு மனிதனோ அல்லது பொருளோ 'கர்த்தரின் பரிசுத்த பயன்படுத்தலுக்காக பிரித்து வைக்கப்படுதல்' என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தை வெவ்வேறுவிதங்களில் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் 12:14ல், '. . . பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே' என்றிருக்கிறது. (ஆங்கில வேதத்தில் Sanctification, holiness என்ற வார்த்தைகள் பரிசுத்தமாக்குதலை விவரிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பதங்கள். தமிழ் வேதத்தில் பரிசுத்தமாக்குதல் என்ற பதமே எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையின் அடிப்படை அர்த்தத்தைப் பார்த்தோம். இறையியல் ரீதியில் அந்தப் போதனையை இனி விளங்கிக் கொள்ளுவது அவசியம். அதாவது, இதற்கும் கிறிஸ்துவில் நாம் அடைந்திருக்கும் இரட்சிப்புக்கும் என்ன தொடர்பு? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால் விசுவாசிகளுக்கான கிறிஸ்து பெற்றுத் தந்திருக்கும் மீட்பின் பயன்பாட்டில் இதன் பங்கு என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பரிசுத்தமாக்குதலைப் பற்றி 1689 விசுவாச அறிக்கை தெளிவானதொரு விளக்கத்தைத் தருகிறது. அதிகாரம் 13:1, "கிறிஸ்துவின் திட்ப உறுதியான அழைப்பினால் அழைக்கப்பட்டும் மறுபிறப்பைப் பெற்றும் அவரோடு இணைக்கப்பட்டவர்களில் புதிய இருதயமும், புதிய ஆவியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தோடு கடவுளினுடைய வார்த்தையினாலும், விசுவாசிகளில் வாசம் செய்யும் ஆவியினாலும் விசுவாசிகளில் பரிசுத்தமாக்குதலாகிய செயல் நடைபெறுகிறது. கிறிஸ்துவின் மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும் ஏற்பட்ட பலாபலன்களினால் இவ்வாசீர்வாதங்களனைத்தும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. விசுவாசிகளில் பாவத்திற்கு இருந்த ஆளுகை பூரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அது ஏற்படுத்தும் கேடான இச்சைகள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு ஒறுத்தடக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களில் காணப்படும் இரட்சிப்பின் கிருபைகள் தொடர்ந்து உயிர்ப்பிக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. எந்தப் பரிசுத்தமில்லாமல் ஒருவர் கர்த்தரைத் தரிசிக்க முடியாதோ அம்மெய்யான பரிசுத்தத்திற்கான பயிற்சி இவ்வாறாகவே விசுவாசிகளில் நடைபெறுகிறது."

இந்த விளக்கத்தில் காணப்படும் பரிசுத்தமாக்குதல் பற்றிய இரண்டு அம்சங்களை வேத வசனங்களின் அடிப்படையில் சிந்திப்போம்.

  1. கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவில் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது திட்ப உறுதியாக கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள், பரிசுத்த ஆவியினால் மறுபிறப்பை அடைந்து கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவர்களை வேதம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக அடையாளம் காட்டுகிறது. 1 கொரி 1:2, ரோமர் 1:2, எபேசி 1:1 ஆகிய வசனங்களில் கிறிஸ்தவ சபைகளுக்கு நிருபங்களை எழுதியிருக்கும் பவுல் அந்த சபைகள் மறுபிறப்படைந்தவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் அவர்களை பரிசுத்தவான்கள் என்று அழைக்கிறார். அவர்கள் கிறிஸ்துவில் மறுபிறப்பை அடைந்து ஆவியின் பரிசுத்தமாக்குதலுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

1 கொரி 6:11ல் பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியர்களைப் பார்த்து சொல்லுகிறார், ". . . ஆயினும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" என்று. விசுவாசிகள் எந்தவகையில் கிறிஸ்துவால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்று சிந்திப்பது அவசியம். பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தவரையில் அதை இரண்டுவகையாக இறையியல் ரீதியில் பிரித்து விளக்கலாம்.

ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் மூலம் மறுபிறப்பை அடைந்து கிறிஸ்துவை விசுவாசிக்கின்றபோது அவன் கிறிஸ்துவில் பரிசுத்தப்படுத்தப்படுகிறான். கிறிஸ்துவுக்காக பரிசுத்தப்படுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறான். அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கர்த்தரின் நீதிச்சட்டங்களின்படி நடக்கக்கூடிய புதிய இருதயம் கொடுக்கப்பட்டு கிறிஸ்துவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறான். இந்த வகையில் அவனில் பரிசுத்தமாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. மறுபிறப்பு அடைந்திருக்கும் ஒருவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தில் கிறிஸ்துவின் நீதியின் காரணமாக நீதிமானாக அறிக்கையிடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் பரிசுத்தத்தின் அடிப்படையில் பரிசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறான். இதுவே அந்த மனிதனின் பரிசுத்தமாக்குதலின் ஆரம்பம். அவன் இன்னும் பரிசுத்தத்தில் பூரணத்துவத்தை அடைந்துவிடவில்லை. விசுவாசத்தில் முதிர்ந்த ஒரு கிறிஸ்தவனில் காணப்படும் பாவத்தின் எச்சங்களை சரீரத்தில் அழித்து, பாவத்தை அடக்கி ஆளுகின்ற முதிர்ச்சியை அவன் இன்னும் பெற்றிருக்கவில்லை. இருந்தபோதும் பரிசுத்தமாக்குதலுக்கான ஆரம்பத்தை கிறிஸ்துவில் ஆரம்பித்து பாவத்தை சரீரத்தில் அடக்கி ஆளுவதற்கான அத்தனை வல்லமைகளையும் கிறிஸ்துவில் பெற்றிருக்கிறான்.

மறுபிறப்பின் மூலம் அடையும் பரிசுத்தமாக்குதலின் மூலம் ஒரு மனிதனில் பாவத்தின் ஆளுகை முறியடிக்கப்படுகிறது. அதன் மூலம் பாவம் அவனில் நிரந்தரமாக இன்னும் மரித்துவிடாதபோதும் அதன் ஆட்சிக்கு முடிவு ஏற்படுகிறது. பாவங்களிலிருந்து அவன் மன்னிப்புப் பெற்றிருக்கிறான் அதனால், பாவம் அந்த மனிதனை தொடர்ந்து ஆள வழியில்லை. பவுல் ரோமர் 6:6ல் சொல்லுகிறார், 'நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.' கொலோ 3:9-10ல் பவுல், 'ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே' என்று விளக்குகிறார். அதே பவுல் ரோமர் 6:18ல், 'பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமையானீர்கள்' என்று கூறுகிறார்.

கிறிஸ்துவில் இணைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் பாவத்துக்கு மரித்து புதிய வாழ்க்கைக்காக எழுப்பப்பட்டிருக்கிறார்கள். மறுபிறப்பின் மூலம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கும் விசுவாசி பாவத்துக்கு அடிமையாகாதபடிக்கு முற்றாக விடுதலையடைந்திருக்கிறான். ஜோசப் பைப்பர் என்னும் கிறிஸ்தவ போதகர் இதுபற்றி விளக்கும்போது, 'நீங்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பீர்களானால் உங்களுடைய பழைய மனிதன் (பாவத்தில் இன்பம் காணும் இருதயம்), பாவத்துக்கு அடிமையாயிருக்கும் தன்மை அழிக்கப்பட்டு நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு நீதியுள்ளவர்களாக கிறிஸ்துவின் மகிமைக்காக வாழும் வல்லமையை அடைந்திருக்கிறீர்கள்' என்று எழுதியிருக்கிறார்.

  1. பரிசுத்தமாக்குதல் படிமுறையாகத் தொடர்கின்ற கிருபை

முதலாவதாக, பரிசுத்தமாக்குதல் மறுபிறப்பின்போது ஆரம்பமாகிறது என்று கவனித்தோம். அதன் அடுத்த பக்கத்தையும் இனிப் பார்ப்பது அவசியம். பரிசுத்தமாக்குதல் கிறிஸ்தவனில் தொடர்கின்ற ஒரு கிருபையாக இருப்பதாக வேதம் விளக்குகிறது. அதையே 1689 விசுவாச அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது. இறையியல் ரீதியில் நாம் சிந்தித்துப் பார்க்கிறபோது மறுபிறப்பு பரிசுத்த ஆவியின் மூலம் ஒருவரில் உடனடியாக நிகழ்ந்து முடியும் கிருபையாகக் காண்கிறோம். அதாவது, அது படிப்படியாக வளர்கின்ற, தொடருகின்ற கிருபையல்ல. அதேபோல, நீதிமானாக்குதலும் ஒருதடவை நிகழ்கின்ற கிருபை, படிப்படியாக வளர்கிறதொன்றல்ல. ஆனால், பரிசுத்தமாக்குதலை நாம் அப்படிக் காண்பதில்லை. அது மறுபிறப்பின்போது ஒருவனில் திட்ப உறுதியாக ஆரம்பித்து அவன் கிறிஸ்துவில் மரிக்கும்வரை தொடர்ந்து நிகழ்கின்ற ஒரு கிருபை. அதனால் பரிசுத்தமாக்குதலை படிமுறையாக தொடர்கின்ற கிருபையாக வேதம் அடையாளம் காட்டுகின்றது. இதையே 1689 விசுவாச அறிக்கையும், 'கடவுளினுடைய வார்த்தையினாலும், விசுவாசிகளில் வாசம் செய்யும் ஆவியினாலும் விசுவாசிகளில் பரிசுத்தமாக்குதலாகிய செயல் (தொடர்ந்து) நடைபெறுகிறது' என்று விளக்குகிறது.

இம்முறையிலான படிமுறைப் பரிசுத்தமாக்குதலின் மூலமாக, 'விசுவாசிகளில் பாவத்திற்கு இருந்த ஆளுகை பூரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அது ஏற்படுத்தும் கேடான இச்சைகள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு ஒறுத்தடக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களில் காணப்படும் இரட்சிப்பின் கிருபைகள் தொடர்ந்து உயிர்ப்பிக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன' என்று விசுவாச அறிக்கை தொடர்ந்து விளக்குகிறது. இவ்வகையிலான படிமுறையாகத் தொடரும் பரிசுத்தமாக்குதலைப் பற்றி ரோமர் 6:1-8; 6:11-14; 1 தெசலோ 5:21-23; எபிரெ 12:14 ஆகிய வசனங்களில் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதுவரை நாம் பரிசுத்தமாக்குதல் என்றால் என்ன என்றும், அதன் இருபுறங்களான மறுபிறப்பில் நிகழும் பரிசுத்தமாக்குதலையும், படிமுறையாக வளரும் பரிசுத்தமாக்குதலையும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். இனி நாம் மிகவும் அவசியமான ஒரு கேள்வியை ஆராய வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். அந்தக் கேள்வி, பாவத்தை அழித்தலாகிய செயல் இவற்றில் என்ன பங்கு வகிக்கிறது? என்பதுதான். கொலோசேயர் 3:5 விளக்கும் பாவத்தை அழித்தலாகிய கிருபை கிறிஸ்துவின் மீட்பின் பயன்பாட்டில் எந்தப் பங்கை வகிக்கிறது என்பதை நாம் இனி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுபற்றி விளக்கும் பியூரிட்டன்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஜோன் ஓவன், 'கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்டிருக்கும் பரலோக வாழ்க்கையும் அதற்குரிய நடவடிக்கைகள் அனைத்திற்கும் எதிரான மாம்சத்திற்குரியவற்றை நாடும் பாவத்தால் மாசடைந்துள்ள இருதயத்தின் வல்லமையையும், இச்சையையும் அழித்து இல்லாமலாக்குவதை பாவத்தை அழித்தலாகிய செயல்' என்று விளக்கியிருக்கிறார் (Works of Owen, Vol 3, p.540). நாம் ஏற்கனவே விசுவாச அறிக்கையில் இதுபற்றி பின்வருமாறு எழுதியிருப்பதை வாசித்திருக்கிறோம், 'விசுவாசிகளில் பாவத்திற்கு இருந்த ஆளுகை பூரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அது ஏற்படுத்தும் கேடான இச்சைகள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு ஒறுத்தடக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களில் காணப்படும் இரட்சிப்பின் கிருபைகள் தொடர்ந்து உயிர்ப்பிக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன'. ஆனால், நடைமுறையில் இது எப்படி விசுவாசியில் நிகழ்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த நோக்கத்தோடு உணர்வுபூர்வமாக தன்னுடைய வாழ்நாள் முழுவதுமான கடமையாகக் கருதி தனக்குத் தெரிந்திருக்கும் அத்தனைப் பாவங்களையும் தன்னில் வெறுத்து அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறபோதே பாவத்தை அழித்தலாகிய கிருபையின் செயலில் அவன் ஈடுபடுகிறான்.

மறுபடியும் ஜோன் ஓவனுடைய இன்னுமொரு விளக்கத்தைக் கவனிப்போம். 'பரிசுத்த ஆவியின் மூலமாக பாவத்தோடு போராடி பழைய மனிதனை அன்றாடம் பலவீனப்படுத்தி அழிப்பதே பாவத்தை அழித்தலாகும். ஓவன் கேட்கிறார், 'கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்திருந்தால் நீங்கள் ஏன் அந்தப் பாவங்களுக்கு எதிராக போராடாமல் இருக்கிறீர்கள்? கிறிஸ்தவர்களான நாம் உலகத்துக்கும், மாம்சத்துக்கும், பிசாசுக்கும் எதிரான வாழ்நாள் முழுவதற்குமான போராட்டத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறோம். பாவத்தை அழித்தல் என்பது மாம்சத்திற்கெதிரான தீவிரமான போராட்டம்.'

கொலோ 3:5ஐ நேரடியாக, உடனடியாக இலக்கண, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் விளக்க ஆரம்பிக்காமல் இந்தளவுக்கு விளக்கங்களை நான் கொடுத்திருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? மறுப்பிறப்படைந்தவுடனேயே ஒருவனில் பரிசுத்தமாக்குதலுக்கான அத்திவாரம் போடப்பட்டுவிட்டது என்ற அனுமானத்துடனேயே கொலோ 3:5ம் அதே போன்ற போதனையை அளிக்கின்ற ஏனைய புதிய ஏற்பாட்டு வேதப்பகுதிகளும் பாவத்தை அழித்தலைப் பற்றிய போதனையை அளிப்பதால்தான். கிறிஸ்தவனில் படிமுறையாகத் தொடரும் பரிசுத்தமாக்குதலாகிய (Progressive sanctification) நதியில் ஒருவன் நீச்சலடிக்க வேண்டுமானால் அதற்கான அத்திவாரமாகிய மறுப்பிறப்பில் நிகழும் பரிசுத்தமாக்குதலாகிய (Definitive sanctification) நீச்சலுடையை அவன் அணிந்திருந்தால் மட்டுமே அது முடியும். ஆவியின் மறுப்பிறப்பால் நம்மில் ஆரம்பிக்கும் பரிசுத்தமாக்குதலே வல்லமையான பாவத்தின் ஆளுகையிலிருந்து நமக்கு விடுதலை அளித்து பாவத்தை நம்மில் அழிப்பதற்கான போராட்டத்தை நாம் நடத்த உதவுகிறது.

அதனால்தான் பாவத்தை அழித்தலைப் பற்றி கொலோ 3:5 அளிக்கும் விளக்கத்தை விபரமாக பார்ப்பதற்கு முன் பரிசுத்தமாக்குதல் சம்பந்தமான தவறான எண்ணப்போக்குகளை ஆராய்ந்து அதன்பிறகு பரிசுத்தமாக்குதலை இறையியல் ரீதியில் விளங்கிக்கொள்ள முயன்றிருக்கிறோம்.

 

 

தாம்பத்திய உறவில் நெருக்கம் - அலன் டன் -

அத்தியாயம் 11

தவிர்க்க முடியாத மரணமாகிய சவால்

திருமணத்தில் மனைவி!

நம்முடைய துணையோடு, வாழ்நாள் முழுவதுமாக, சுவிசேஷ அன்பைக் கொண்டு, ஆத்மீகமான திருமண நெருக்கத்தை அடைவதற்கு நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் வயது ஏற ஏற நமது புறம்பான மனிதனானது நாளுக்கு நாள் அழிந்து கொண்டு வருவதை உணருகிறோம் (2 கொரி 4:16). மரணம் நம்மை நோக்கி முன்னேறி வருவதைக் காண்கிறோம். மரணம் என்பது பிரிவு என பொருள்படும். வாழ்க்கையின் உறவுகளை மரணம் பிரிக்கிறது. திருமண நெருக்கத்தை அடைவதற்கு நாம் ஒருபுறம் வாழ்நாளில் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மறுபுறம் மரணம் முன்னேறி வந்து நம்மைப் பிரிக்கும்படியாக முயற்சி செய்து, முடிவில் பிரித்தே விடுகிறது. நமது புறம்பான மனிதன் அழிந்து கொண்டே வருகையிலும், திருமண நெருக்கத்தை நமது வாழ்நாளில் எப்படி நாம் அதிகப்படுத்துவது? மண்ணான இந்த சரீரம் மண்ணுக்கே போகிற போராட்டம் இருக்கும்போது, தாம்பத்திய உறவில் நெருக்கத்தை அடைய எது தூண்டுதலாக இருக்கக் கூடும்?

படைப்பும், மீட்பும் விவரிக்கும் வண்ணமாக புருஷர்களே, நீங்கள் உங்கள் மனைவிகளிடத்தில் அன்பு செலுத்துங்கள் என்று பேதுரு புத்தி சொல்லுகிறார் (1 பேதுரு 3:7). இந்த வசனத்தின் முதல் பகுதியில், புருஷர்கள் படைப்பின் தத்துவம் என்கிற முதலாவது நட்சத்திர வழிகாட்டி வழிகாட்டுகிற விதத்தில் மனைவிகளின் மீது அன்பு செலுத்த வேண்டும். "அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்கு செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்". ஆதி 2:23ல் ஆதாம் தன் மனைவியை குறிப்பிட்டவிதமாக பேதுருவும் இந்த இடத்திலே மனுஷி என்கிற அர்த்தத்தில் குறிப்பிடுகிறார். கடவுளின் படைப்பின் நோக்கங்கள் நமது பாலின வேறுபாட்டிலே இன்னமும் செயல்படுவ தாக இருக்கிறது. அவர் படைத்த ஆண்-பெண் வித்தியாசங்கள் நமது திருமணத்தை ஒழுங்குபடுத்துவதாயும் இருக்கிறது.

மேலும் பேதுரு, "அவர்களுடனே (மனைவியோடு) வாழுங்கள்" என கணவர்களுக்கு கட்டளையிடுகிறார். வாழுங்கள் என்பதற்கு அவர் உபயோகித்திருக்கிற வார்த்தை நேரம் செலவிடுங்கள் என்கிற அர்த்தத்தை உள்ளடக்கியது. மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல (ஆதி 2:18). நமக்கு நண்பர்கள் தேவை. சமுதாயம் தேவை. சேர்ந்து வாழ்தல் அவசியம். நாமெல்லாரும் நேரமில்லாமல் அவதிப்படுகிறவர்களாய் இருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். நமது இல்லம் ஓரிடத்தில் இருக்கிறது. பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி போன்றவை வேறொரு இடத்தில் இருக்கிறது. சபைகூடுதலுக்காக நாம் மற்றுமொரு இடத்திற்குப் போக வேண்டியதாயிருக்கிறது. நமது அலுவலகமோ வேறு திசையில் இருக்கிறது. நமது தொழில் சம்பந்தமாக உலகம் முழுவதும்கூட போய் வர வேண்டியவர்களாக இருக்கிறோம். நவீன காலம் எல்லாவற்றிற்கும் தொலைவாக சென்றுவர வேண்டிய பிரிவினைகளை நம்மிடையே ஏற்படுத்திவிட்டது. ஆனால் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். தம்பதிகளாகிய நீங்கள் தனித்தனியான பாதைகளில் சென்று தனித்தனியான வாழ்க்கையை வாழும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை முறையை அனுமதிக்கக் கூடாது. மனைவிகளுடனே வாழுங்கள் என்று பேதுரு கூறுகிறார். நீங்களும் உங்கள் மனைவியும் ஒரே இடத்திலே வசியுங்கள். மனைவியுடனே நேரம் செலவிடுங்கள்.

என்ன? நேரம் செலவிடுவதா? எங்களுக்குத் தான் எதற்குமே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறோமே! இக்காலத்து வாழ்க்கை முறையில் மனைவியோடு செலவிடும் நேரத்தை எங்கிருந்து பெறுவது? இக்காலத்தின் துரிதகதியான வாழ்க்கை முறைக்கு பேதுரு கூறும் புத்திமதி பொருந்துமா? இருபதாம் நூற்றாண்டிற்கு, அவர் கூறும் முதலாம் நூற்றாண்டின் புத்திமதியெல்லாம் ஒத்து வராது என்று நமக்கு சொல்லத் தோன்றும். மனைவியோடு எப்படி நேரம் செலவிட முடியும்? ஓயாத வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றனவே! அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் 20ஆம் நூற்றாண்டின் நேரமில்லாத தன்மையைக் குறித்து நான் நன்றாக அறிவேன். வீட்டிலிருந்து எங்கு செல்ல வேண்டுமென்றாலும் அரை மணி நேரமாவது பயணம் செய்தால்தான் அவ்விடத்தை அடைய முடியும். ஆறு பேர் உள்ள ஒரு குடும்பத்தில் அவரவர் பணியின் நிமித்தமாக வெளியே செல்லுகையில், எதை எந்த நேரத்தில் எப்படி செய்வது என்பதையெல்லாம் திட்டம் வகுத்து செயல்பட வேண்டியதாயிருக்கிறது. எனது தினசரி வாழ்க்கைக்கு நான் வேதாகமத்தை எவ்வளவு பயன்படுத்துகிறேனோ அதே போல தினசரி வேலைகளுக்கென ஒரு அட்டவணை தயாரித்து அதன்படி நடக்கிறேன். நான் கிறிஸ்துவுக்கு மகிமையாக ஓர் ஆரோக்கியமான திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென பேதுரு சொல்லுகிறார். உன் மனைவியோடு நேரம் செலவழி என்கிறார். நான் என் தினசரி வேலைப்பட்டியலைப் பார்க்கிறேன். அதில் என் மனைவிக்கென நேரம் எங்கே இருக்கிறது?

மனைவியோடு நேரம் செலவிடும் கட்டளையை நிறைவேற்ற உங்களால் முடியவில்லையா? நான் ஒரு யோசனை கூறுகிறேன். நேரத்தைத் திட்டமிடுதலில் வேதாகமம் காட்டுகின்ற முதலாவது கொள்கையை கவனித்துப் பாருங்கள். அதாவது, ஏழு நாட்களில் ஒரு நாளைக் கர்த்தருடைய நாளாக அனுசரிக்கிற திட்டம். நமது அவசரகதியான வாழ்க்கை முறையின் நேர இழப்பை கர்த்தருடைய நாளின் ஆசீர்வாதம் ஈடு செய்கிறது. ஓய்வுநாள் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது (மாற் 2:27). அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் உங்கள் வேலைகளை விட்டு ஓய்ந்திருக்கும்படியாக அவர் ஒரு நாளை நியமித்திருக்கிறார். அந்த நாளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நீங்கள் உங்கள் காரியங்களை ஒழுங்குபடுத்தி, புத்துணர்வை அளிக்கும் அவருடைய பிரசன்னத்திலே தரித்திருக்கும்படியாக அந்நாளைக் கட்டளையிட்டிருக்கிறார். கர்த்தருடைய நாளை அவரோடு செலவிடுவதற்காக, நமது மற்ற வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு, அந்நாளில் அவர் பிரசன்னத்திற்கு வருகிறோமல்லவா? கர்த்தருடைய நாளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் உங்களது மற்ற வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு தேவனோடு அந்நாளை செலவிடுவதைப் போலவே, உங்கள் மனைவியோடு செலவிடவும் ஒரு செயல் திட்டத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டீர்களானால் அது உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பேதுரு இன்னும் விளக்கமாகக் கூறுகிறார்: "நீங்கள் விவேகத்துடனே அவளுடன் வாழுங்கள்". விவேகம் என்கிற வார்த்தையின் கிரேக்கபதம் விஞ்ஞானம் என்கிற வார்த்தையோடு சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. விஞ் ஞானத்தின் மூலமாக நாம் சகல காரியங்களையும் குறித்த அறிவைப் பெற்றுக்கொள்கிறோம். உங்கள் மனைவியை நன்றாக கவனித்துப் பார்த்து, அவளுடைய மனதை விஞ்ஞானபூர்வமாக அறிந்துகொள்ளுங்கள் என்கிற அர்த்தத்தில் பேதுரு சொல்லுகிறார். அவளை ஆராய்ந்தறியுங்கள்! அவளைக் குறித்ததான சகல காரியங்களையும் தெரிந்து கொண்டு, நீங்கள் யாரை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து விளங்கிக்கொள்ளுங்கள். நான் ஓர் அலுவலகத்தை திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் "திருமணம்" என்கிற காரியத்தை மணந்து கொண்டிருக்கவில்லை. நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். அவளும் ஏதோ ஒரு பெண் அல்ல. இந்த குறிப்பிட்டப் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே அவளைக் குறித்து நான் நன்றாக அறிந்து புரிந்துகொள்ள வேண்டியது எனக்கு அவசியமாக இருக்கிறது. பெலவீனபாத்திரமான அவளை நான் எப்படி போஷித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளை நான் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்விடத்தில் பெலவீன பாத்திரம் என்பது அவளுடைய சரீரப்பிரகாரமான நிலையையே குறிக்கிறது. பாத்திரம் என்பது அவளுடைய சரீரத் தேவைகளினிமித்தமாக அவள் எவ்வளவு பெலனற்றவளாய் இருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவள் எளிதில் உடைந்துவிடக்கூடிய ஒரு பீங்கான் பாத்திரத்தைப் போலவும், நானோ ஒரு ஸ்டீல் பக்கெட் போலவும் இருப்பதாகத் தெரிகிறது. அவள் ஒரு பெண். கடவுள் அவளை யாராக, எதற்காகப் படைத்திருக்கிறார் என நான் தெரிந்து கொள்ள வேண்டும். படைப்பின் தத்துவமாகிய நட்சத்திர வழிகாட்டி, ஒரு கிறிஸ்தவ கணவனாக எனது பொறுப்பு என்னவென்பதை அறியும்படிக்கு எனக்கு வழிகாட்டுகிறது.

சகோதரியாகிய மனைவி!

கடவுளின் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மனைவியை நேசிக்கும்படி கூறிய பேதுரு, அவளை மீட்பின் நோக்கத்தோடு நேசிக்கும்படியாகவும் புத்தி சொல்லுகிறார் "உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்". "மனைவிகளை கனம் பண்ணுங்கள்" என்று பேதுரு சொல்லுகிறார். மனைவிகளுக்கு நல்ல மதிப்பு கொடுத்து அவர்களை பொக்கிஷமாக நினையுங்கள் என்கிற அர்த்தத்தைத் தருகின்ற கிரேக்க வழக்கச் சொல் இது. நமது கிறிஸ்தவ மனைவிகளை நாம் எவ்விதமாக மதிப்பிடலாம்? நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள். இந்த உலகத்தில் அவள் உங்களுக்கு மனைவியாக இருக்கிறாள். ஆனால் மறு உலகத்திலோ அவள் உங்களுடைய சகோதரியாக இருக்கிறாள். உங்களைப் போலவே அவளும் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டவளாக, கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரியாக இருக்கிறாள் "கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் இல்லை, பெண்ணென்றும் இல்லை" (கலா 3:28). கிறிஸ்துவுக்குள் அவள் உங்களுக்கு சமமானவளாக, உங்கள் சகோதரியாக இருக்கிறாள்.

அவளை கனம் செய்யுங்கள். அவள் தன்னுடைய ஆவிக்குரிய வரங்களை பிரயோகிப்பதால் அவளுக்கு மரியாதை கொடுங்கள். ஆவியின் வரங்களை அவளும் பெற்றிருக்கிறாள். தனது ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் நலனுக்காக, முக்கியமாக தனது கணவனின் நலனுக்காக தான் பெற்றிருக்கும் வரங்களைக் கொண்டு அவள் பண்புடன் தனது ஊழியங்களை நிறைவேற்றி வருகிறாள். அவளுடைய அறிவுக்கும், ஆலோசனைகளுக்கும் இடம் கொடுங்கள். உங்களுடைய திருமண வாழ்க்கையில் மானசீகமான ஒரு பிரசங்க மேடையை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது இரண்டு பேருக்கும் பொதுவானதாக இருக்கட்டும். அதில் நின்றவர்களாக, வேதவசனங்களைக் கொண்டு, ஒருவருக்கொருவர் உங்கள் மனசாட்சியோடு பேசுங்கள். நாங்கள் அங்கத்தினர்களாக இருக்கின்ற சபையின் பிரசங்க மேடையில் நின்று என் மனைவி பேசுவதை நீங்கள் காணமாட்டீர்கள். ஆனால், எங்கள் திருமணத்தில் நாங்கள் எங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் பிரசங்க மேடையில் என்னுடைய ஆவிக்குரிய சகோதரியாக நின்று கொண்டு வேதத்தின் மூலமாக தனது கருத்தை எனக்குத் தெரிவிப்பதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. அவள் எனது ஆவிக்குரிய சகோதரியாக இருப்பதினால், எனது தலைமைத்துவ கொள்கையை அவள் அலட்சியம் செய்யலாம் என நான் கூறவில்லை. ஆனால், எனது தோழியாக, எனக்கு உதவி செய்பவளாக எனது தலைமைத்துவத்தில் அன்போடு அவளும் தன் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறுகிறேன். ஏதாவதொரு பிரச்சனைக்கு அவள் வசனத்தின் மூலமாக ஒரு தீர்வைக் கூறுவாளானால் நான் அவளை என் ஆவிக்குரிய சகோதரியாகக் கருதி அவள் கருத்தை மதிக்க வேண்டும். இந்த உலகத்தில் நான் அவளுடைய கணவனாக இருந்தபோதிலும், என்னை கிறிஸ்துவுக்குள் சகோதரனாகக் கொண்டு அவள் பேசுகிறாள். கிறிஸ்துவின் சரீரத்தில் நானொரு அங்கத்தினனாக இருப்பது போலவே அவளும் அதே சரீரத்தின் அங்கமாயிருக்கிறாள். நாங்கள் ஒரே சபையில் அங்கத்தினராக இருப்பதால், திருமணத்தில் எங்களுடைய பொறுப்பு இன்னும் அதிகமாயிருக்கிறது. அவள் கிறிஸ்துவின் அங்கம். கிறிஸ்துவின் அன்பை என் மீது காண்பிக்கும்படியாக, கிறிஸ்து அவளை எனக்குக் கொடுத்திருக்கிறார். இவ்விடத்தில் மீட்பின் கோட்பாடாகிய நட்சத்திரம் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு வழிகாட்டுவதாய் இருக்கிறது.

படைப்பின் பிரகாரமாகவும், மீட்பின் பிரகாரமாகவும் கிறிஸ்தவ கணவர்களாகிய நாம் ஏன் நமது மனைவிகளை புரிந்து கொண்டு, அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்? ஏனென்றால் நமது மனைவிகளோடு நாம் கொள்ளுகின்ற நெருக்கமான அன்பு, கிறிஸ்துவோடுள்ள நமது அன்பை ஒழுக்கத்திற்குக் கொண்டுவருகிறது: "உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு". பிரியமானவர்களே, உங்கள் மனைவியோடு நெருங்கிப் பழக உங்களுக்குத் தெரியாவிட்டால், கிறிஸ்துவோடும் உங்களால் ஐக்கியப்பட முடியாது. உங்கள் மனைவியோடு நீங்கள் நன்றாக ஒருமித்துப் பழகாவிட்டால் கிறிஸ்துவோடு தொடர்புகொள்வதும் உங்களுக்குக் கடினமாயிருக்கும். நீங்கள் அவளோடு ஒரே மாம்சமாயிருக்கும்படி அவர் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவிடம் ஜெபிக்கும்போது, அவருக்கு உங்கள் இருவர் இடையே நிலவுகின்ற ஐக்கிய நிலை எப்படியிருக்கிறதென்பது தெரியும். ஜெபிக்கையில் அவர், "என்ன, உன் மனைவியோடு சுமுகமான நிலைமை இருக்கிறதா?" என அவர் கேட்பது போலிருக்கும். சில விஷயங்களில் பிரச்சனை இருக்குமானால், அந்த பிரச்சனைகளே ஜெபங்களில் ஆவிக்குரிய மந்த நிலையை உருவாக்கி, கிறிஸ்துவோடு நமக்குள்ள ஐக்கியத்திற்குத் தடையாக இருக்கும் "ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே, பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து" (மத் 5:23,24). கிறிஸ்தவக் கணவர்களாகிய நாம், மனைவியோடுள்ள நெருக்கத்தை அதிகரித்துக்கொள்ளாவிட்டால், கிறிஸ்துவில் நாம் வளருகிற கணவனாயிருக்க முடியாது.

சீஷத்துவம் - "மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும்"

நேரத்தையும் நித்தியத்தையும் சேர்த்து பேதுரு இவ்வார்த்தைகளால் குறிப்பிடுகிறார். இந்த படைப்பிலே தனது மனைவி, படைப்பின் ஒழுங்காகிய பெண்மையின் வடிவிலே இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனாக கணவன் அவளை அறிந்து நேசிக்க வேண்டும். அதே சமயத்தில் மறுமையிலே, தேவனுடைய நித்தியராஜ்ஜியத்திலே அவளும் நித்தியஜீவனாகிய கிருபைக்கு உடன்பங்காளியாக இருக்கிறாள் என்பதையும் உணர்ந்தவனாக அவளை நேசிக்க வேண்டும். நமது மனைவிகளை கடந்தகாலம், நிகழ்காலம் மட்டுமல்லாது, அவர்களை நித்தியமாகிய மறுமை வரைக்கும் மனக்கண்களால் பார்த்து, அதன் அடிப்படையில் அவர்களை நேசிக்க வேண்டுமென பேதுரு நமக்கு புத்தி சொல்லுகிறார். இந்த வசனத்தின் அடிப்படையில், நமது அனுபவங்களின் இடையிலே நமக்கு ஒரு காரியம் சம்பவிக்கிறது. நான் இவளை இவ்வுலகிலே எனது மனைவியாகக் கொண்டிருக்கிறேன் என்கிற அனுபவத்திற்கும், நித்தியத்திலே இவள் எனக்கு சகோதரியாக இருப்பாள் என்பதைத் தெரிந்து கொள்கிற அனுபவத்திறகும் இடையிலே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. என்னுடைய இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுஉலக வாழ்க்கைக்கும் இடையிலே ஒரு காரியம் நடக்கிறது. அது இவ்விரண்டையும் பிரிப்பது. மிகப் பெரிய பிரிவினையாகிய மரணம்.

நமது விவாக அறிக்கையிலே நாம் எல்லோரும், "மரணம் நம்மைப் பிரிக்கும் மட்டும்" என்கிற வார்த்தையை அறிக்கையிட்டிருக்கிறோம். ஆம், மரணம் நம்மை ஒருநாளில் பிரித்தே தீரும். ஏனென்றால், "மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது, கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களைப் போலிருப்பார்கள்" (மாற்கு 12:23). திருமணம் என்பது நித்தியத்திற்குரிய உடன்படிக்கையல்ல. இவ்வுலக வாழ்க்கைக்கென திருமணம் ஏற்பட்டது. அது நமது மரணத்தோடு முடிந்துவிடுகிறது. கடந்து போகிற இவ்வுலகத்திற்கென ஏற்பட்டது; முடிந்து கொண்டிருக்கின்ற உலகமும் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது (1 யோவான் 2:17). மரணம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. திருமண நெருக்கத்திற்கான நேரமும் குறைந்து கொண்டேயிருக்கிறது. நாம் ஒருவரையொருவர் சுவிசேஷ அன்பினாலே நேசிக்க வேண்டுமானால் அதை நாம் துரிதமாக செயல்படுத்த வேண்டும். அதை அடைய வைராக்கியமாக முயற்சிக்க வேண்டும்.

மரணம் நம்மை நோக்கி முன்னேறி வந்து கொண்டேயிருக்கிறது. நானும் என் மனைவியும் எந்த அளவுக்கு ஒரே மாம்ச நிலையை அடைய முடியுமோ அதை அடைந்து கொள்ள வேண்டிய நேரம் இதுவே. யாராலும் தவிர்க்க முடியாத மரணம் வெகுதுரிதமாக நம்மை நோக்கி வருகிறது. மரணம் நெருங்கி வருவதை அறியும் வேளையிலே நான் மிகவும் அவசரப்படுகிறேன். எதற்குத் தெரியுமா? எனது மனைவியை இன்னும் விளங்கிக்கொள்ளவும், நான் என் மனைவியால் நன்றாக அறியப்பட்டு, மேலும் நெருக்கத்தை அடைய வேண்டுமென துடிக்கிறேன். அன்பின் அழைப்புகளை என்னால் தள்ளிப்போட முடியாது. தீர்வுகாணாத பிரச்சனைகள் எங்கள் திருமண நெருக்கத்தை குலைத்துப் போடுவதை என்னால் அனுமதிக்க இயலாது. தவறுகளை அறிக்கையிடுதலிலும், மன்னிப்பை வழங்குதலிலும் தள்ளிப்போட்ட காலங்கள் வீணானதாகவும், திரும்பப் பெற முடியாததாகவும் இருக்கிறது. நமக்கு மீதியாக இருக்கும் சொற்ப காலத்தையும் பாவமானது அழித்துப் போட்டுவிடாதபடிக்கு கவனமாக இருப்போம். மரணம் நெருங்கி வருவதை எந்தளவுக்கு உணருகிறேனோ அந்தளவுக்கு எனது நெருக்கத்தை அதிகரிக்க முயலுகிறேன். இவ்வுலக உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானதான உறவு எனது துணையே. இன்னும் சிலகாலம் மட்டுந்தான் இருக்கப் போகிறதான இந்த திருமண உறவின் நெருக்கத்தை மேலும் மேலும் அடைய வாஞ்சிக்கிறேன்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறோம். இப்போதுள்ள எங்கள் நிலையையும் பார்க்கிறோம். மரணம் எங்களை நோக்கி முன்னேறி வருவது தெளிவாகத் தெரிகிறது. ஒரே சரீரமாக இருந்த எங்களுடைய உடல்கள் அழிந்து வருவதை உணர முடிகிறது: காது கேட்பதில்லை. பற்களை இழந்து கொண்டிருக்கிறோம். உடல் பெலன் குறைகிறது. தோலில் சுருக்கம் விழுகிறது. சுறுசுறுப்பு குறைகிறது.

சிலவேளைகளில் நான் என் கரங்களை உற்றுப் பார்த்து, இது என் தாத்தாவின் கரங்கள் அல்லவா? இது ஏன் என் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற குழப்பங்களுக்கு ஆளாகிறேன். இதில் காணப்படும் சுருக்கங்கள் என்ன என்பதை ஆராய்கிறேன். அதுதான் மரணத்தின் அடையாளங்கள். மரணம் மெதுவாக என்னை கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறது. எங்கள் மீது அது ஏற்கனவே தனது ஏவுகனைகளை ஏவ ஆரம்பித்துவிட்டது. அது தனது வருகையை முன்னறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த கடைசி நாட்களில் நாம் மேலும் திருமண நெருக்கத்தை அடைவதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கையில், மரணமும் நெருங்கி வருகிறது. அது மிகவும் சமீபமாயிருக்கிறது. அதன் நோக்கம் நம்மைப் பிரிப்பதே. ஆம் அதைத்தான் மரணம் செய்கிறது. பிரிவை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம் "மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது . . . மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?" (1 கொரி 15:54,55). நாம் ஒருவரையொருவர் சுவிசேஷ அன்பினாலே நேசிக்கிறோம். மரணத்தின் பிடிகள் சூழ்ந்து இருந்த போதிலும் நாம் ஜீவனையும், நெருக்கத்தையும் நாடுகிறவர்களாய் இருக்கிறோம். இது முரண்பாடாக இருந்தாலும் உண்மை அதுதான். சுயவெறுப்பு, உதவியாயிருத்தல் இவைகளைக் கொண்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருப்பதில் நாம் முழுநிறைவை அடைகிறோம். கிறிஸ்துவின் சீஷர்களாக நமது திருமண வாழ்க்கையை வாழுகிறோம். அனுதினமும் சிலுவையை சுமந்தவர்களாக, தன்னைத்தானே வெறுத்து, பாவத்திற்கு மரித்து, மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக நம்மை தேவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம் (ரோமர் 6:13). கிறிஸ்துவினாலே நாம் மரணத்தை வெற்றி கொள்கிறவர்களாய் இருக்கிறோம். கணவன் மனைவியாகிய நாம், கிருபைக்கு உடன் சுதந்தரவாளிகளாயும், கிறிஸ்துவுக்குள் என்றென்றும் சகோதர-சகோதரியாயும் இருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதால், நாம் மரித்தாலும், பிழைத்திருக்கிறவர்களாய் இருக்கிறோம் (யோவான் 11:25,26).

எனக்குத் தெளிவாக விளங்காவிட்டாலுங்கூட என் மனைவி என் சொந்த மாம்சமாய் இருக்கிறாள் என வேதம் கூறும் கருத்தை ஏற்கிறேன். எனது சீஷத்துவம், இயேசுவைப் பின்பற்றுதல் ஆகிய யாவும் அவளில் அடங்கியிருக்கிறது. தன்னைத்தானே வெறுத்தல் என்கிற கிறிஸ்துவின் கட்டளையினால், நான் என்னையே அவளுக்குள்ளாக புதைத்துப் போடக் கற்றுக்கொள்கிறேன். என் மனைவியோடு நெருக்கமான ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்கையில் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் அதிகரிப்பதை உணருகிறேன். அவளோடு நான் ஐக்கியமாக இருக்கையில் என் ஜெபங்களுக்குத் தடை ஏற்படுவதில்லை என்பதை அனுபவிக்கிறேன். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து நான் நடக்க வேண்டிய எனது "குறுகலான பாதையை" என் மனைவி பழக்கப்படுத்தித் தருகிறாள். எனது சீஷத்துவம் அவளில் அடங்கியிருக்கிறது. அவளை நேசிக்க நான் கற்றுக்கொள்கையில் நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாகிறேன். மீட்கப்பட்ட பாவிகள் ஒருவரையொருவர் நேசிக்கக் கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட அவளுடைய அன்பு காரணமாயிருக்கிறது. வரப்போகின்ற உலகத்தில் இருக்கும் மீட்கப்பட்டவர்களிடையே ஊடுருவியிருக்கிறதான அன்பில் ஒரு சிறு துளியை நான் இப்போதே ருசித்த அனுபவத்தை திருமணத்தில் அடைகிறேன். தம்பதிகள் ஒருவரையொருவர் சுவிசேஷ அன்பினாலே நேசித்து, உள்ளத்தில் ஒருமைப்பட்டவர்களாக ஒரே மாம்ச நிலையை அடைகிறபோது, பரலோக ராஜ்ஜியத்திலே மனிதர்களிடையே என்னவிதமான உறவு நிலவும் என்பதை ஓரளவிற்கு ருசிபார்க்க முடிகிறது. நித்திய ஜீவனாகிய கிருபைக்கு உடன்பங்காளியாகிய என் மனைவியும் நானும், நித்திய வாழ்க்கையிலே எவ்விதமாக நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமோ அதே விதத்தில் இந்த பூலோகத்திலும் ஒருவரையொருவர் பரிசுத்த ஆவியின் பெலத்தினாலே ஏற்கனவே அறிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டோம். மரணத்திற்குப் பின்னால் வருகின்ற வாழ்க்கையை ஆவியானவரின் உதவியினாலே இப்போதே அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். அந்த வாழ்க்கை மரணத்தை வெற்றி கொண்ட வாழ்க்கை. "மரணமே! உன் ஜெயம் எங்கே?" (1 கொரி 15:55).

மரணம் ஜெயிக்காது

என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைத்திருப்பான் என்கிறார் இயேசு. கர்த்தர் வரத் தாமதமாகுமானால் நாம் நிச்சயமாக மரித்துப் போவோம். நாம் மரிக்கும்போது நமது திருமணம் முடிவுக்கு வருகிறது. மரணம் நம்மை நோக்கி உறுமிக் கொண்டு முன்னேறி வருகிறது. ஒரு நாள் மரணம் நம்மை பிரிக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நமது திருமண உறவின் ஐக்கியம் கிறிஸ்துவில் கட்டப்பட்டிருக்குமானால், நாம் எப்படி பிரிக்கப்படுவோம்? கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் நடந்து வந்திருந்தோமானால், அது நமது திருமண நெருக்கத்தில் கண்கூடாகக் காட்சியளிக்குமானால் நாம் எப்படி பிரிக்கப்படுவோம்?

நாம் மெதுவாக மரணத்தை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு நாள் மரணம் சம்பவித்து நம்மை பிரித்துவிடும் "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (1 கொரி 11:25-26). இந்த வசனங்களை நான் எனது திருமண வாழ்க்கைக்கும் உபயோகித்துக்கொள்ளலாமா? நானும் என் மனைவியும் மரணத்தினால் பிரிந்தாலும் மீண்டும் இணைவோம் என நான் யோசிப்பது துணிகரமானதா? ஒருபோதும் துண்டிக்கப்பட முடியாததான நித்திய இணைப்பாகிய கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தில் அல்லவா நாங்கள் இணைந்திருக்கிறோம்? ஆம், கிறிஸ்துவில் நாங்கள் நித்தியத்துக்கும் இணைக்கப்பட்டவர்கள். திருமண பந்தம் என்பது இந்த உலக வாழ்க்கைக்கு மாத்திரமே உரித்தான ஒரு படைப்பின் ஒழுங்காகும். அது மரணத்திலே நிறைவடைகிறது. உலகத்தோடு அது முடிவடைந்துவிடுகிறது. ஆனால் நமது திருமணத்தில் இயேசு கிறிஸ்து சுவிசேஷ அன்பையும் வரப்போகின்ற உலகத்திற்கே உரித்தான ஜீவனையும் புகுத்தி இருக்கிறார். புதியவானத்திலும் புதியபூமியிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறவர்களாகக் காணப்பட மாட்டோம்; ஆனால் இவ்வுலகத்திலேயே நமது திருமண வாழ்க்கையில் "புது படைப்புக்கு" உரியதான அன்பை ருசித்தவர்களாக இருப்பதால் நமது திருமண வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போனாலும் அந்த வகையான அன்பு தொடர்ந்து நம்மிடையே காணப்படும். நானும் என் மனைவியும் பரலோகத்தில் தம்பதிகளாகக் காணப்பட மாட்டோம். ஆனால், நித்தியஜீவனுக்கு உடன்பங்காளிகளாயும், கிறிஸ்துவில் இணைக்கப்பட்டவர்களாயும் நித்தியத்தில் வாழுவோம். சொல்லப்போனால், கிறிஸ்துவால் மீட்கப் பட்டிருக்கும் ஒரு மாபெரும் சமுதாயத்தில் சேர்ந்து, நாங்களும் கிறிஸ்துவின் அங்கத்தினர்களாக இருப்போம்.

சமுதாய நேசம்

இந்த உலகத்திலே திருமணம் என்பது ஒரு ஸ்தாபனமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலே தம்பதிகள் ஒருவருக்கொருவர் சுவிசேஷ அன்பை பகிர்ந்துகொள்ளக் கற்றுக்கொள்ளும்போது அவர்களுக்குள் நெருக்கம் வளர ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு திருமணமும் இருவர் அடங்கிய சிறிய சமுதாயமாக ஆரம்பிக்கிறது. அதிலே நாம் பாவத்தையும், பிரிவையும் மேற்கொள்ளக் கூடியதான அன்பை அனுபவிக்கிறோம். இத்தகைய சுவிசேஷ அன்பை நாம் நமது திருமணத்தில் செயல்படுத்துகையில், நமது பிள்ளைகளுக்கும் அவ்வித சுவிசேஷ அன்பில் பயிற்சி பெற கற்றுக் கொடுக்கிறவர்களாகிறோம். இல்லங்களில் கற்றுக் கொண்ட சுவிசேஷ அன்பின் குணாதிசயங்களை சபையாகிய சமுதாயத்திலும் பிரயோகப்படுத்துகிறோம். சபை அங்கத்தினர்களிடையேயும் சுவிசேஷ அன்பு பரிமாறப்பட வேண்டியது அவசியம். வரப்போகின்ற உலகத்திலே இவ்விதமான சமுதாய நேசமே வளர்ச்சியடைந்து, கடவுள் எதிர்பார்க்கின்ற பூரண நிலையை அடைந்ததாகக் காணப்படும். பாவமற்ற, வெற்றிகொண்ட, உயிர்த்தெழுந்ததான அன்பைக் குறித்து பூரணப்படுத்தப்பட்டதான மறு உலக சமுதாயம் நன்கு உணர்ந்திருக்கும். சுவிசேஷ அன்பு உருவாக்குகின்ற சமுதாயம் வரப்போகின்ற உலகத்திலே இரண்டோ, ஆறோ, நூறு பேர்களோ அடங்கியதான ஒரு சிறிய சமுதாயம் அல்ல. அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் தொகையை ஒரு மனிதனாலும் எண்ண முடியாது. ஒவ்வொரு ஜாதியிலிருந்தும், மொழியிலிருந்தும், தேசத்திலிருந்தும் மீட்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட மக்கள் சமுதாயம் நித்திய அன்பிலே திளைத்து என்றென்றுமாக வாழுவார்கள். உலகம் தொடங்கி எல்லா காலகட்டத்தையும் சேர்ந்த பூரணப்படுத்தப்பட்ட, கடவுளின் சகல மக்களையும் பரிசுத்த ஆவியானவர் மிகவும் நெருக்கமாக இணைப்பார். இரட்சிக்கப்பட்ட அந்த சமுதாயத்தினர் நெருக்கமான அன்பை அனுபவிப்பார்கள். இவ்வுலகத்திலே, ஒரு நல்ல கிறிஸ்தவத் திருமணத்திலேகூட முழுவதுமாக ருசிக்க முடியாததான பரிபூரணமான அன்பை பரலோகத்திலே மீட்கப்பட்ட சமுதாயத்தினர் அனுபவிப்பார்கள். அங்கேதான் நமக்கு கிறிஸ்துவின் மணவாட்டி என்பது எப்பேர்பட்ட நிலை என்பதும், கிறிஸ்துவையே நித்திய மணவாளனாக நாம் அடைந்திருப்பது எவ்வித சிலாக்கியம் என்பதும் பூரணமாக விளங்கும். அன்பு, சகல பாவத்தையும் வெற்றிகொண்டு, மரணத்தை அழித்துப் போடுதலே உயிர்த்தெழுதலின் இறுதி வெற்றியாகும். கடவுளின் பெரிதான கிருபையால் நானும் என் மனைவியும் பூரணப்படுத்தப்பட்டதான அந்த அன்பின் சமுதாயத்தில் இருப்போம். பரலோகத்தில் நாம் ஒருவரையொருவர் அடையாளங் கண்டுகொள்வோம் என்பதற்கு வேத ஆதாரங்கள் இருக்கிறது. எங்களுடைய தாம்பத்திய நெருக்கத்தின் மூலமாக கர்த்தர் எங்களைப் பரிசுத்தப்படுத்தி, நித்தியத்திற்கு எங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பதை நாங்கள் அங்கே உணர்ந்துகொள்ளுவோம். சுவிசேஷ அன்பினால் வெற்றிகொள்ளப்பட்டதான ஒரு பூரணப்படுத்தப்பட்ட சமுதாயத்தில் நாங்கள் வாழுவதற்கு எங்கள் திருமண வாழ்க்கை கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு பயிற்சி ஸ்தலமாக இருந்திருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளுவோம்.

நான் மிகவும் பிரபலமான பெரிய பட்டணங்களுக்குப் போக நேரிடும்போது, பரலோக சமுதாயத்தையும் கடவுளுடைய நகரத்தையும் நினைத்துப் பார்ப்பேன். இங்குள்ள பெரிய பட்டணங்களில் ஆட்கள் நிரம்பி வழிந்தாலும் ஒருவருக்கொருவர் சற்றும் தொடர்பில்லாத நிலையையே காணமுடிகிறது. சாலைகளில் எங்கும் கூட்டமாக ஜனங்கள், கடைகளில் மக்கள், வாகனங்களில் மனிதர்கள் என்று எங்கு பார்த்தாலும் மனித தலைகள்தான். சிமென்டினால் செய்யப்பட்டிருக்கும் ஒரு சரீரத்திற்குள்ளாக அமைக்கப்பட்டுள்ள நாடிநரம்புகளில் தொடர்பற்று காணப்படும் செல்கள் போன்று அவர்கள் காட்சியளிக்கிறார்கள். பெரிய பட்டணங்கள் எவ்வளவுதான் கவர்ச்சிகரமாகக் காட்சியளித்தாலும், மக்கள் உண்மையான அன்போ, நேசமோ இல்லாது, இயந்திரத்தனமாக அவரவர் காரியத்தையே குறியாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். "தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தை" (எபி 11:10) குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். தனது புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்த புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தின் (வெளி 21:2) வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள். அந்த பட்டணத்தின் வீதிகளில் உலவுகின்ற மக்கள் எல்லாருமே ஒருவரையொருவர் அறிந்தவர்களாக இருப்பர். உண்மையான திருமண நெருக்கத்தில்கூட அடைய முடியாததான அவ்வளவு நெருக்கமான அன்பினால் ஒருவரையொருவர் அறிந்தும், ஒருவராலொருவர் அறியப்பட்டும் இருப்பார்கள். நான் என் மனைவியை விளங்கிக்கொள்வதற்கு அங்கே அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. நான் பரலோகத்தில் என் மனைவியை சந்திப்பதாகக் கற்பனை செய்து பார்க்கிறேன். அங்கு அவளை என் மனைவியாக அல்ல, சகோதரியாக, நித்திய கிருபைக்கு உடன் சுதந்திரவாளியாக காண்கிறேன். உலகத்திலே கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்த என்னுடைய அன்பையும், திருமண வாழ்வின் தலைமைப் பொறுப்பையும் கர்த்தர் எவ்விதத்தில் உபயோகித்து, அவளைத் தமது நித்திய வீட்டிற்கு அழைத்துவர சித்தம் கொண்டிருந்தார் என்பதை அவள் என்னிடம் கூறுவதைக் கேட்க வேண்டுமென ஆவலாயிருக்கிறேன். நமது திருமண வாழ்வின் அன்பின் இழைகளைக் கொண்டு தேவன் தமது அருமையான திட்டத்தினை நிறைவேற்றியிருப்பதைக் காணும்போது அந்த மகத்துவமான அன்பை என்னென்று விவரிப்போம்? நமது தாம்பத்திய வாழ்வின் நெருக்கங்களாகிய அன்பின் சிறுதுளிகள் கடவுளின் மகத்துவமான அன்பின் கடலிலே கலக்கும்போது நாம் எவ்வளவாக மகிழ்ந்திருப்போம்! வரப்போகும் உலகத்தின் உன்னதமான அன்பிற்கு ஒரு முன்னோடியான அடையாளமாக திருமண வாழ்க்கையை தேவன் அமைத்துக் கொடுத்திருக்கிறாரே. இரண்டு பேரிடையே நிலவுகின்ற இந்த அன்பானது, வரப்போகின்ற ஒரு மகிமையான சமுதாயத்தின் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அந்த சமுதாயம், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக வெளிப்படும்.

ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்

இரட்சிக்கப்பட்டவர்களாகிய எனது சகோதரர்களோடே ஒருமனப்பட்டு வாழ்வதற்கு எனது திருமண வாழ்க்கை என்னை ஆயத்தப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், இயேசுவோடு ஐக்கியப்படுவதின் அவசியத்தை அது அதிகமாக உணர்த்துகிறது. கணவனையோ மனைவியையோ காட்டிலும் நாம் இயேசு கிறிஸ்துவை அதிகமாக நேசிக்கிறவர்களாயிருக்க வேண்டும். நமது துணையை நேசிப்பதின் மூலமாக நாம் இயேசுவை நேசிப்பதை ஒருவிதத்தில் காண்பிக்கலாம். என் துணையை நேசிக்கக்கூடியதான அந்த அன்பை எனக்குக் கொடுத்தவரே இயேசுதான். அவ்வன்பினால் நான் என் துணையை நேசிக்கும்போது எனது கர்த்தரின் அன்பை அதின் மூலமாக பிரதிபலிக்கிறேன். நான் எனது துணையை அன்போடு அணைத்துக் கொள்ளும்போது, எனது கவனம் அவளிடமிருந்து இயேசுவிடமாக செல்லுகிறது "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான்" லூக் 14:26. என் மனைவியை நேசிப்பதின் மூலமாக நான் கர்த்தரைப் பின்பற்றுவதை நாடுகிறேன். அவருடைய நித்தியமான அணைப்பில் நான் மரணத்தை மேற்கொண்டவனாகிறேன். வெற்றி வேந்தராகிய அவரோடு ஐக்கியப்பட்டிருக்கிற நான், என்னைப் போலவே அவரோடு ஐக்கியம் கொண்டுள்ள எதனிடமிருந்தும், யாரிடமிருந்தும் பிரிக்கப்பட முடியாதவனாக இருக்கிறேன்.

இந்தவிதமான மகிமையை நான் கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்த்தாலும் (1 கொரி 13:12) என் மனதுக்குள் அவ்வப்போது சங்கடமான உணர்வு ஏற்படுகிறது. ஏனென்றால் என்றாவது ஒருநாள் மரணம் எங்களைப் பிரிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் வருகை தாமதமாகுமானால், எங்களில் யாராவது ஒருவர் அடுத்தவரின் கல்லறையண்டையிலே நிற்க நேரிடும். மரணம் எங்களைப் பிரித்துவிடும். அப்படி இருந்தபோதிலும், நாங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாகவே எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போம். நமது சிலுவையை அனுதினமும் சுமக்கிறோம் (லூக் 9:23). தினந்தோறும் சாகிறோம் (1 கொரி 15:31). சீஷத்துவம் என்பது, கிறிஸ்துவை சாகும்வரை பின்பற்றி நடப்பதாகும். விசுவாசமானது, இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்ற வாக்குத்தத்தங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்திற்கு பிற்பாடுதான் நிறைவேற்றுவார். உயிர்த்தெழுதலின் நிச்சயங்களை விசுவாசம் நம்பிப் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு எங்களுடைய திருமண பந்தம் தொடர்ந்து வராது. ஆனால் எங்களுடைய அன்பு மறு உலகிலும் தொடரும். அது அங்கே தொடருவது மாத்திரமல்லாமல், கிறிஸ்து எங்களையும், அவருடையவர்களாகிய மற்ற எல்லா விசுவாசிகளையும் அவருக்குள்ளாக இணைக்கும்போது, அந்த அன்பானது பலமடங்கு பெருகி, நித்தியமான சந்தோஷத்துக்குள்ளும், ஐக்கியத்துக்குள்ளும் எங்களை இட்டுச் செல்லும்.

ஆகவே, மரணம் எங்களை நெருங்கி வருகையில், எங்களுடைய புறம்பான சரீரமானது நாளுக்கு நாள் அழிந்து கொண்டு வருகையில் நாங்கள் கிறிஸ்துவை மரணத்திற்குள்ளாகவும் பின்பற்றுகிறோம். நாங்கள் நம்பிக்கை இழப்பதில்லை. சரீரபலவீனங்களுக்கு நாங்கள் இடம்கொடுப்பதில்லை. மரணம் எங்களைப் பிரிக்கும் மட்டாக நாங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாகவே எங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை நடத்தப் போராடுகிறோம். மரணத்தினால் ஏற்படும் பிரிவு மற்றுமொரு உன்னதமான நிலைக்கு எங்களை கொண்டு செல்லுகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அங்கே இதைக் காட்டிலும் நித்தியமான, மிகவும் நெருக்கமான அன்பினால், இயேசு கிறிஸ்துவை தலையாகக் கொண்டவர்கள் அனைவரும் இணைக்கப் பட்டு, பூரணப்படுத்தப்பட்டவர்களாக நித்திய மகிழ்ச்சியில் திளைத்திருக்கக் கூடியதான மகிமையானதொரு இடத்திற்குப் போகும் வழியை மரணமாகிய பிரிவு ஏற்படுத்தித் தருகிறது. அந்தவிதமான பூரணப்படுத்தப்பட்ட அன்பினாலே என் மனைவியை நேசிக்க நான் எவ்வளவு ஆவலுள்ளவனாக இருக்கிறேன்! இயேசுவுக்குள்ளான என் சகோதரர்களையுங்கூட அவ்வித அன்பினாலே நான் நேசிக்கவும், கிறிஸ்துவின் அன்புக்கு ஒத்ததான அன்பினாலே நானும் நேசிக்கப்படவும் வேண்டுமென ஏங்குகிறேன். அவ்வித ஏக்கத்தை மனதிலே கொண்டவனாக நான் என் மனைவியை அணைத்துக் கொண்டு ஜெபிக்கிறேன்: "ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்!" (வெளி 22:20). (முடிவு)

 

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.