B 1.jpg
PC Banner 2.jpg
PC Banner 3.jpg
PC Banner 4.jpg
PC Banner 5.jpg
PC Banner 6.jpg
previous arrow
next arrow
திருமறைத்தீபம் 2026 இதழ் 4

இந்த இதழில் ரூத்தின் நூலிலிருந்து ஒரு பயனுள்ள செய்தியைத் தந்திருக்கிறேன். முடிந்தால் வரப்போகின்ற இதழ்களிலும் இது தொடரும். அத்தோடு நண்பர் வொரன் பீல் (அயர்லாந்து) எழுதிய வரலாற்று நைசீன் அறிக்கை பற்றிய ஆக்கமும் வந்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பின் வந்த கெல்சிடோனிய அறிக்கை பற்றியும் அது எதை விளக்குகிறதென்றும் ஓர் ஆக்கத்தை நான் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக “கிறிஸ்துவின் இரு இயல்புகள்” எனும் ஆக்கத்தையும் எழுதியிருக்கிறேன்.

தொடர்ந்து வாசிக்க...

"போதகர் R. பாலா" அவர்களின் பிரசங்கங்களை ஒலி (Audio) வடிவில் கேட்கலாம் & பதிவிறக்கம் (Download) செய்துக்கொள்ளலாம்.

உள்ளே செல்வதற்கு...

"போதகர் R. பாலா" அவர்களின் பிரசங்கங்களை ஒளி (Video) வடிவில் உள்ளவற்றை கண்டு பயனடையுங்கள்.

உள்ளே செல்வதற்கு...

போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் (சீர்திருத்த பாப்திஸ்து) சபையில் (ஆங்கிலம்) கடந்த 39 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, South Wales, UK) இறையியல் பயின்றவர்.

உள்ளே செல்வதற்கு...
எங்களின் நோக்கம்...

பிரபல சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (1834-1892),  “சத்தியத்தைக் கபடமில்லாமல் எடுத்துக்கூறாமலும், கொள்கைப் பஞ்சத்தோடும் இருக்கும் பத்திரிகையை இலக்கியத்தொல்லை என்றுதான் கூறவேண்டும்”  என்று குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகளுக்கிணங்க கர்த்தரின் வழிநடத்தலின்படி  இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடங்கொடாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், சீர்திருத்தவாத பியூரிட்டன் போதனைகளையும், கிறிஸ்தவ வரலாற்று நிகழ்வுகளையும், முறைப்படுத்தப்பட்ட இறையியலின் அனைத்து அம்சங்களையும், வேதபூர்வமான கண்ணோட்டத்தில் சமகால நிகழ்வுகளையும், போதகப் பயன்பாடுகளோடு அப்பழுக்கில்லாமல் கர்த்தரின் மகிமைக்காகத் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு வழங்கி வருவதே எங்களின் தலையாய நோக்கம்.  தொடர்ந்து வாசியுங்கள்; சிந்தியுங்கள், வாசிப்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள். “அவசர வாசிப்பு குறைந்தளவான அறிவையும், அதிகளவான ஆணவத்தையுமே அளிக்கும்” என்கிறார் பிரபல பிரசங்கியார் சார்ள்ஸ் ஸ்பர்ஜன். அதனால் நிதானித்து வாசியுங்கள்; வளம்பெருங்கள்.

ஜோன் மெக்காத்தர்

ஜூலை மாதம், செவ்வாய்கிழமை 14ம் தேதி, 2025ல் ஜோன் மெக்காத்தர் தனது 86ம் வயதில் பரலோக வாழ்வை அனுபவிக்க கர்த்தரால் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து வாசிக்க...

தமிழ் வேதாகமம்

பல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும்,

தொடர்த்து வாசிக்க...

திருச்சபை வரலாறு

நம்மினத்து கிறிஸ்தவர்களுக்கு திருச்சபை வரலாறு பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறது. திருச்சபைகள் கூட அதில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை.

தொடர்ந்து வாசிக்க...

வெயின் குரூடமின்

(பலவீனமானதும் ஆபத்தானதுமான இறையியல் நூல்) என்னுடைய இறையியல் மாணவர்களில் சிலர், நாங்கள் வாசிக்கக்கூடிய அளவுக்கு எளிமையான

தொடர்ந்து வாசிக்க...